பாட்டிமார் சொன்ன கதைகள் – 216 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 17 மே 2019

யார் நல்லவர் யார் கெட்டவர்?

பாரதம் படிப்பதற்கு முன்னால் பாரதத்தின்  கிளைக்கதைகளை தெரிந்து கொள்ளவேண்டும். அதிலிருந்துதான் மனித குலத்திற்கு நற்பண்புகளை எப்படி இந்த இதிகாசங்களும் அதனையொட்டிய கதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றன என்கிற உண்மை நமக்குப் புரியும்.

முதலில் இந்த கதையைப் பார்ப்போம் நமக்கு ஒரு துன்பம் வரும் போதுதான்யார் நல்லவர்? யார் கெட்டவர் என்பது நமக்குத் தெரிய வரும்? இது தொடர்பாக தருமருக்கும், பீஷ்மருக்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். பீஷ்மர் வாழ்க்கை குறித்து சில விளக்கங்களை கொடுத்தார்.

காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மான்கள் அருகிலிருக்கக்கண்டு மாமிசத்தின் இச்சையுடைய அந்த வேடன்,, ஒரு மானையடிக்கக் குறிவைத்து கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் பாணம் குறி தவறியதால், அக்கான கத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த் மரத்தின் மீது பாய்ந்தது. கொடிய விடந்தடவிய கணையினால் மிக்க  வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து  போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கியிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்து களில் வெகுநாட்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை விடவில்லை. நன்றியறிவுள்ளதும் தருமத்தின் மனமுள்ளது மாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரை யெடாமலும், களைப்புற்றும், குரல் தழதழத்தும், மரத்து டன் கூடவே உலர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்த போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்புறும்போதும் அதனை விட்டுப் பிரியாமல் தானுந்துண்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.

சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவுமுள்ளது் மனிதர்க்கு மேற்பட்ட நல்லோழுக்கமுடையதுமான அக்கிளி, அம்மரத்தைப் போலவே, சுகத்தையும் துக்கத்தையும், அனுபவித்துக் கொண்டிருப்பதை கண்ட தேவேந்திரன்  திகைப்படந்தான்.`திரியக் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப் பட்சி அடைந்திருப்பதை எவ்வகை?’ என்று நினைத்தான்; பிறகு `இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லா பிராணிகளுலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படு கின்றன’’ என்ற எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.

இங்ஙன மெண்ணியே தேவேந்திரன், மானிட உரு வெடுத்து, ஒர் அந்தணன் வடிவமாக பூமியில் இறங்கி, அந்தப் பட்சியைப் பார்த்து  `ஒ! பட்சியிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தாகேஷியி உன்னால் நல்ல சந்ததி யுள்ளவனாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன். உலர்ந்து போன இந்த் மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்?’ என்று கேட்டான். இமையவர் தலைவனாம் இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட கிளியானது, அவனுக்கு தலைவணங்கி நமஸ்காரம் புரிந்து ` தேவராஜாவே! உனக்கு நல்வரவு, நான் தவத்தினால் உன்னைத் தெரிந்து கொண்டேய்’ என்று சொல்லிற்று தேவேந்திரன் ` நன்று’ `நன்று’ என்று கூறி  `என்ன அறிவு’ என்று மனதிற்குள் கொண்டாடி னான். இவ்வாறு சிறந்த செய்கையுள்ளதும், தருமத்தையே முக்கியமாக கொண்டதுமாகீய அந்தக் கிளியைப் பார்த்து இந்திரன், தான் கேட்பது. பாபமென்று தெரிந்தி ருந்தும் கேட்கத் தொடங்கினான்.

`அறிவிற் சிறந்த பறவையே ! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற்ற இம் மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயி ருக்கி றதே! இலைகளினால் மூடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்களும்  அனேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ந்த சக்தியற்ற,, இரசம் வற்றி ஒளிகுண்றிக் கெட்டு போன இந்நிலையற்ற இம்மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்து விட்டுவிடு. அமேரேசனுடைய இந்த வார்த்தையைக் கேட்டு, தர்மாத்மாவான அந்தக் கிளி, மிகவும்  நீண்ட பெருமூச் செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று. `மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்து கொள. அனேக நற்குணங்கள் பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன், மழை, காற்று, பனி, வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சுகித்திருந்தேன். வலாரியே! தயையும் பக்தியுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்? நான், அன்பும், பக்தியுமுள்ளவன், பாவத்தைப் புரியேன். உபகாரிகள் விடயத்தில் தயை செய்வதுதானே தரு மத்திற்கு முக்கியமான இலக்கணம். தய செய்வதே நல்லோர்களுக்கு எப்போது மனதிருப்தியை உண்டாக்கு கிறது. எல்லாத் தேவர்களும் தருமத்திலுள்ள சந்தே கங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனா லேயே, நீ தேசசிரேட்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகுகாலமாக இருந்த மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமை யிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்த வுடன் அதை எப்படி விடலாம்?

எக்காலமு மிப்பாதய மெனதாமென வைகி முக்காலே முதிருங்கனி முசியாது நுகர்ந்தேன். இக்காலமி தற்கிவ்வண மிடையூறு கலந்தாற்  சுக்காதகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே   – மகாபாரதம்

இவ்வாறு கூறிய, பொருளடங்கியடும் அழகுடைய துமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்வுற்ற இந்திரன். அதன் நன்றியறிவையும், தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தருமம் தெரிந்த அக்கிளியைப் பார்த்து, `ஒரு வரம் கேள்’ என்று சொன்னான். அக்கிளி யானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருக்குணத்தை உற்று நோக்குகங்கள். அது என்ன?

(தொடரும்)