பரம்பரை சொத்தில் பெண்ணுக்கு பங்கு உண்டா...! – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 16 மே 2019

மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம். சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை. குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படி அவர்கள் அறிய வேண்டியது பரம்பரை சொத்தில தமக்கான பங்காகும். அதை பற்றி விவரிக்கிறார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிவேதிதா"

‘‘ஆண்­க­ளைப் போல பெண்­க­ளுக்­கும் சொத்­தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொது­வாய் தெரி­கி­றது. “மகிழ்ச்சி”. ஆனால் பெண்­க­ளுக்கு என்­னென்ன உரிமை இருக்­கி­றது என்ற அடிப்­ப­டை­க­ளைக்­கூட இன்­றைய பெண்­கள் எவ­ரும் அறிந்­தி­ருக்­க­வில்லை. நமது சட்ட முன்­னோர்­க­ளும் அர­சாங்­க­மும் எத்­த­னையோ நல்ல சட்­டங்­க­ளை­யும் இயற்­றி­யுள்­ளார்­கள்.

திரு­ம­ணத்­தின்­போது கொடுக்­கப்­ப­டும் நகை­க­ளும், சீர்­வ­ரி­சை­க­ளும் மட்­டுமே பெண்­க­ளுக்­கான சொத்து என்று ஒரு காலத்­தில் இருந்­தது. ஆனால் பெண்­க­ளுக்­கான சொத்­து­ரி­மையை 1956ல் இந்து வாரிசு உரி­மைச் சட்­டப்­படி சொத்து உரி­மை­களை நிலை நாட்­டி­யது என்­றால் மிகை­யில்லை. இந்த சட்­டம் வரு­வ­தற்கு முன்பு ‘இந்து பெண்­கள் சொத்து சட்­டம்’ என்று ஒன்று இருந்­தது. இந்த சட்­டத்­தின் மூலம் பெண்­க­ளுக்கு, பிறந்த வீட்­டில் தங்­கு­வ­தற்­கான உரிமை மட்­டும்­தான் இருந்­தது. சொத்­தில் எவ்­வித உரி­மை­யும் கிடை­யாது. பிறந்த வீட்­டி­லி­ருந்து கொடுக்­கப்­பட்ட சீத­னம் மட்­டுமே பெண்­க­ளுக்­கான சொத்­தாக கரு­தப்­பட்­டது. 1956, ஜூலை 4-ம் தேதி நிறை­வேற்­றப்­பட்ட ‘இந்து வாரிசு உரிமை சட்­டம் -1956’ பெண்­க­ளுக்கு சொத்­தில் பங்கு உண்டு என்று சொன்­னது.

உதா­ர­ண­மாக ஓர் இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்­கள், மூன்று மகள்­கள் இருக்­கி­றார்­கள் எனில், அந்த ஆண் இறக்­கும் பட்­சத்­தில் அவ­ரது சொத்­துக்­கள் மனைவி, மகன்­கள் மற்­றும் மகள்­க­ளுக்கு சம பங்­கு­க­ளாக கிடைக்­கும். இதில் அனை­வ­ருக்­கும் சம உரிமை உண்டு. அதன் பிறகு 1956- சட்­டத்­தில் சில மாற்­றங்­கள் வந்­தன. 1989-ல் மேலும் சில மாற்­றங்­கள் வந்­தது. ஆனா­லும் 09.09.2005-ல் மத்­திய அர­சாங்­கம் கொண்டு வந்த சட்­டமே ஒரு தெளிவை தந்­தது.

சொத்­து­ரி­மை­கள் பற்றி தெரிந்து கொள்­ளும் முன்­னர் சொத்­து­க­ளின் வகை­க­ளை­யும் அவற்­றின் விளக்­கங்­க­ளை­யும் ஓர­ளவு அறிந்து கொள்­ளு­தல் அவ­சி­யம். பாட்­டன் முப்­பாட்­டன் வழி வந்த சொத்­து­களே பூர்­வீக சொத்­து­கள். அதைத்­தான் பூர்­வீக சொத்­து­கள் என்று சட்­டம் சொல்­கி­றது. ஆனால் ஒரு­வர் தன் சுய சம்­பாத்­தி­யத்­தில் அவ­ரது வாழ்­நா­ளில் வாங்­கிய சொத்­து­களை தனிப்­பட்ட சொத்­தாக உரிமை கொண்­டா­ட­வும், அவர் விருப்­பப்­படி அனு­ப­விக்­க­வும் சுய விருப்­பத்­தின் பேரில் தன் சொந்­தங்­க­ளுக்கு எழுதி வைக்­க­வும் முழு உரிமை உண்டு என்­பதை கவ­னத்­தில் கொள்ள வேண்­டும். அதையே தனிப்­பட்ட சொத்­தாக சட்­டம் வரை­ய­றுக்­கி­றது.

“பாகப்­பி­ரி­வினை”, நடி­கர் தில­கம் நடித்து பீம்­சிங் இயக்­கிய அரு­மை­யான திரைப்­ப­டம் என்று தெரி­யும். ஆனால் சட்­டத்­தின் பார்­வை­யில் பூர்­வீக சொத்­து­களை அவ­ரது வாரி­சு­கள் முறைப்­படி பிரித்­துக் கொள்­வதே பாகப்­பி­ரி­வினை என்று விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு­வர் சுய சம்­பாத்­தி­யத்­தில் வாங்­கிய தனிப்­பட்ட சொத்­து­க­ளின் பெய­ரில் எவ­ரும் உரிமை கொண்­டாட இய­லாது. அவ­ரின் தனிப்­பட்ட விருப்­பத்­தையே சாரும். எவ­ரும் எதற்­கா­க­வும் அதை கட்­டுப்­ப­டுத்த இய­லாது. அவ­ரின் விருப்­பப்­படி விலைக்கு விற்­க­லாம். தான­மாக தர­லாம். எவ­ருக்­கும் உயில் எழு­த­லாம்.

பாகப்­பி­ரி­வி­னை­களை பொறுத்­த­வரை அனைத்து சகோ­தர, சகோ­த­ரி­க­ளுக்­கும் பிரிக்க வேண்­டும். அப்­படி பிரிக்­காத பட்­சத்­தில் வழக்கு தொடுத்து அதை செல்­லா­த­தாக்­க­வும் முடி­யும் என்­பதை சட்­டம் சொல்­கி­றது. ஆனா­லும் அதில் இருந்த சந்­தே­கங்­க­ளை­யும் குழப்­பங்­க­ளை­யும் 2005ல் வந்த மத்­திய அர­சாங்க சட்­டம் களைந்து தெளி­வாக்கி உள்­ளது.

“காணி நிலம் வேண்­டும் பரா­சக்தி” என்று பாடி­னான் பாரதி. பிரிட்­டிஷ் அர­சாங்­கத்­திற்கு அடி­மைப்­பட்­டி­ருந்த காலத்­தில் தனி மனித விடு­தலை குறித்­தும், உரிமை குறித்­தும் அப்­ப­டிப் பாடி­னான் மகா­கவி. ஆனால் இன்றோ நவ­நா­க­ரீக வளர்ச்சி என்­னும் நுகர்வு கலா­சார மாயை­யில் வீழ்ந்த சில­ரின் பேரா­சை­யால் சுய­ந­லத்­தால் குடும்ப உற­வு­களை சிதைத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். நிலங்­க­ளின் மதிப்பு கோடி­க­ளில் புர­ளு­வ­தால் உற­வு­க­ளில் பல ‘கேடி­களை’ உரு­வாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம். விளை நிலங்­கள் ரியல் எஸ்­டேட் ஆகி, ரியல் எஸ்­டேட் விலை என்­பதே வளர்ச்­சி­யாகி, வளர்ச்சி என்­பதே வியா­பா­ர­மா­னது. வியா­பா­ரம் என்­பது அர­சி­ய­லின் ஒரு பிரி­வாக மாறி அதி­லும் ரியல் எஸ்­டேட் புகுந்து விளை­யாடி கொண்­டி­ருக்­கி­றது. இதுவா வளர்ச்சி? இதுவா நாம் ஆயி­ரம் ஆண்­டு­க­ளாக வளர்த்த நாக­ரி­கம், பண்­பாடு?

தமி­ழ­கத்­தில் மட்­டும் சுமார் எட்டு லட்­சம் சிவில் வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தாக புள்ளி விவரங்­கள் சொல்­கின்­றன. கட்­டப்­பஞ்­சா­யத்­து­கள் கணக்­கி­ல­டங்­காது. ரியல் எஸ்­டேட் குற்­றங்­களை எழுதி மாளாது. இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில்­தான் நமது சொத்­து­களை சட்­டத்­தின் உத­வி­யோடு பாது­காக்க வேண்­டும். காலம் கடத்­தாது அவற்றை பரா­ம­ரிக்­க­வும் ஆவ­ண­மாக்­க­வும் வேண்­டும். சொத்­து­கள் மட்­டு­மல்­லாது அவற்­றின் சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்­க­ளை­யும் நிலை­யாக பாது­காக்க வேண்­டும் என்­பதை எப்­போ­தும் நினை­வில் கொள்­ளுங்­கள்.

ஒரு ஆண்­ம­க­னுக்கு எப்­ப­டி­யெல்­லாம் பூர்­வீக சொத்­தில் உரிமை உள்­ளதோ அதன் படியே பெண்­ணுக்­கும் உரிமை உண்டு. அவற்­றில் இரண்டு முக்­கிய விதி­மு­றை­க­ளை­யும் சட்­டத்­தின் கூடவே அரு­மை­யாக சொன்­னது. 2005ம் ஆண்­டின் இந்து வாரிசு உரிமை சட்­டம் அம­லுக்கு வரு­வ­தற்கு முன்­னர் சொத்தை பாகப்­பி­ரி­வினை செய்­தி­ருக்க கூடாது. பெண்­கள் உரிமை கொண்­டாட, நினைக்­கும் சொத்தை அவ­ரது தந்தை

2005-க்கு முன்­னர் வேறொ­ரு­வ­ருக்கு விற்­பனை செய்­தி­ருந்­தால் அதில் பெண்­கள் பாகமோ, உரி­மையோ கோர முடி­யாது.

இந்து வாரி­சு­ரிமை சட்­டத்­தின்­படி, இது இந்­துக்­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தும். மற்ற மதத்­தி­ன­ருக்கு வித்­தி­யா­சப்­ப­டும் என்­பதை நினை­வில் கொள்ள வேண்­டும். திரு­ம­ண­மான ஆணின் சொத்­துக்கு உரிமை: மனைவி, மக்­கள் தாய். திரு­ம­ண­மான பெண்­ணின் சொத்­துக்கு உரிமை: கண­வன், பிள்­ளை­கள். திரு­ம­ண­மா­காத ஆணின் சொத்­துக்கு உரிமை பெற்­றோர். திரு­ம­ண­மா­காத பெண்­ணின் சொத்­துக்கு உரிமை: பெற்­றோர். பெற்­றோர் இல்­லை­யென்­றால் இரு­த­ரப்­புக்­குமே சகோ­தர சகோ­த­ரி­கள் சொத்­துக்கு உரிமை கொண்­டா­ட­லாம்.  திரு­ம­ணம் ஆகி­விட்ட ஓர் ஆணின் மனைவி, மக்­கள் இறந்து விட்­டால், அவ­ரு­டைய மகன் அல்­லது மகள் வயிற்று வாரி­சு­க­ளுக்கு நேர­டி­யாக சொத்­துப் போக நேரி­டும். கண­வர் இறப்­பிற்கு அவ­ரது மனை­வியே கார­ணம் என்று சட்­டத்­தின் மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டாலோ அல்­லது கண­வ­ரது மரண வழக்­கில் மனைவி சம்­பந்­தப்­பட்டு இருந்­தாலோ மனைவி கண­வ­ரது சொத்­தில் பங்கு கேட்க முடி­யாது. தாத்தா மற்­றும் தந்தை சொத்­தில் ஆண் வாரி­சு­க­ளுக்கு இணை­யாக பெண்­ணுக்­கும் உரிமை இருக்­கி­றது. நிலம், வயல் மற்­றும் அசையா சொத்­து­களை பெண்­க­ளும் பிரித்து கொள்­ள­லாம். ஆனா­லும் பாரம்­ப­ரி­ய­மாக இருக்­கும் வீட்டை சகோ­த­ரன் விரும்­பும் வரை அவ­ரின் சம்­ம­த­மில்­லா­மல் அதை விற்­கவோ, விற்­பனை செய்து பணம் கொடுக்க வேண்­டும் என்றோ அடம் பிடிக்க முடி­யாது.

இந்த உரி­மை­கள் எல்­லாம் தனிப்­பட்ட முறை­யில் யாருக்­குமே உயிலோ அல்­லது பாகப்­பி­ரி­வினை செய்து வைக்­கா­மல் இருந்­தால் மட்­டுமே பொருந்­தும். உயில் எழுதி வைத்து விட்­டால் உயி­லின் தன்­மையை பொறுத்­து­தான் அந்த சொத்­துக்­களை பிரிக்க முடி­யும். முன்பே சொன்­னது போல உயிலை எத்­தனை முறை­யும் எழு­த­லாம். மாற்றி அமைக்­க­லாம். கடை­சி­யாக எழு­திய உயிலே செல்­லு­ப­டி­யா­கும். எனவே காலம் கடத்­தாது உயில் எழு­துங்­கள்.

தானப்­பத்­தி­ரம் என்­றால் என்ன..

ஆங்­கி­லத்­தில் செட்­டில்­மென்ட் என்று சொல்­லு­வார்­கள். தன்­னு­டைய சொத்தை மற்­ற­வ­ரின் பெய­ருக்கு மாற்றி கொடுப்­பது தான் தானப்­பத்­தி­ரம்.

தான­மாக தரு­வது என்­றால் தானப்­பத்­தி­ரம் என்­றும் சொத்தை செட்­டில்­மென்ட் செய்­வது போல எழு­தி­னால் செட்­டில்­மென்ட் என்­றும் குறிப்­பி­டு­கி­றார்­கள். ஆனால் மிக மிக முக்­கி­ய­மா­னது என்­ன­வெ­னில் ‘செட்­டில்­மென்ட்’. இதை மாற்ற இய­லாது. ஒரு முறை எழு­தி­னால் எழு­தி­ய­து­தான். ஆனால் உயில் அப்­படி அல்ல. மாற்றி மாற்றி எழுத முடி­யும். எனவே அவ­சர கதி­யில் செட்­டில்­மென்ட் எழு­து­வ­தற்கு முன் பல முறை யோசித்து முடி­வெ­டுப்­பது சாலச் சிறந்­தது. இதை உரிய கட்­ட­ணம் செலுத்தி சார்-­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் பதிய வேண்­டும்.