கெட்டதுக்கு விடைக்கொடுத்தது...! – சுமதி

பதிவு செய்த நாள் : 16 மே 2019

ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஒரு தனிப்­பட்ட பிரச்னை வரும்­பொ­ழுது அதற்­குத் தீர்­வைத் தரு­ப­வர்­கள் அல்­லது நிறு­வ­னங்­க­ளைத் தேடி அலை­யவே நம்­மில் பலர் செய்­வோம்.

ஆனால் திரு­ம­ணம் முடிந்து தாயான திவ்யா, தன் குழந்­தைக்கு பயன்­ப­டுத்த சந்­தை­யில் பிளாஸ்­டிக், மற்­றும் ரசா­ய­னம் சேர்க்­கப்­பட்ட டயப்­பர்­கள் மட்­டுமே இருந்த நிலை­யில், அத­னால் சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு, குழந்­தை­யின் சரும, உடல் பாதிப்­பைப் பற்றி எண்ணி, தானே அதற்கு மாற்­றாத் தயா­ரிக்க முடி­வெ­டுத்து தொழில்­மு­னை­வில் இறங்­கி­யுள்­ளார்.

இன்ஜினி­ய­ரிங்­கில் முது­க­லைப் பட்­டம் பெற்று, பொறி­யி­யல் துறை­யில் துணை பேரா­சி­ரி­ய­ராக இருந்த திவ்யா, இன்று குழந்­தை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தும் துணி டயப்­பர்­களை தயா­ரிக்­கும் ‘KiddieHug’ நிறு­வ­னம் நடத்­து­கி­றார். திரு­ம­ணம் முடிந்து தொழில்­மு­னை­வர் ஆனது பற்றி கேட்­டப்­போது,

“என்­னு­டைய புகுந்த வீட்­டி­னர் முதல் தலை­முறை தொழில்­மு­னை­வோர். இது­த­விர வேறு தொழில் பின்­னணி எது­வும் இல்லை. ஸ்டார்ட் அப்­பின் துவக்­க­நி­லை­யில் ஏற்­ப­டும் சிக்­கல்­கள் குறித்த புரி­தல் அவர்­க­ளி­டம் இருந்­த­தால் உத­வி­யாக இருந்­தது,” என்­றார் திவ்யா.

அவர்­க­ளது அனு­ப­வம் மற்­றும் உத­வி­யோடு ஆரம்­பக்­கட்ட பணி­களை முன்­னெ­டுத்­துள்­ளார் திவ்யா.

துணி டயப்­பர்­கள் தயா­ரிக்க முடிவு செய்­தது பற்றி பகிர்ந்த திவ்யா,

”தேவை­தான் கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்­கான அடிப்­படை என்­பார்­கள். இது எனக்கு மிகச்­ச­ரி­யாக பொருந்­தும். தாயான புதி­தில் பயன்­பாட்­டிற்­குப் பிறகு தூக்­கி­யெ­றி­யக்­கூ­டிய டயப்­பர்­க­ளால் குழந்­தை­யின் சரு­மத்­தில் ஏற்­ப­டும் தடிப்­பு­கள், சரு­மத்­தில் மாறு­தல், டயப்­பர்­க­ளால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்­ப­டும் பாதிப்பு போன்ற பிரச்­ச­னை­களை எதிர்­கொண்­டேன். இத்­த­கைய டயப்­பர்­க­ளில் பாது­காப்­பான மாற்று குறித்து ஆரா­யத் துவங்­கி­னேன், என்­கி­றார்.

“அப்­போது அமெ­ரிக்­கா­வில் இருக்­கும் என்­னு­டைய நண்­பர் ஒரு­வர் எனக்கு துணி டயப்­பர்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். பின்­னர் நான் முழு­மை­யாக அவற்­றையே பயன்­ப­டுத்­தத் துவங்­கி­னேன். ஒத்த சிந்­த­னை­யு­டைய தாய்­மார்­க­ளி­டையே இது குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­த­வும் விரும்­பி­னேன். இதுவே என்னை தொழில்­மு­னை­வோ­ராக, அதா­வது ’மாம்ப்­ரூ­ன­ராக’ மாற்­றி­யது.” பெரும்­பா­லான பெற்­றோ­ருக்கு துணி டயப்­பர் குறித்த விழிப்­பு­ணர்­வும் புரி­த­லும் இல்லை. எனவே ஸ்டார்ட் அப் துவங்­க­வேண்­டும் என்­கிற திட்­டமே தொடக்­கத்­தில் சவால் நிறைந்­த­தாக இருந்­தது என்­றார்.

ஒரு பய­னுள்ள சிறப்­பான தயா­ரிப்பு இருந்­தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு இது குறித்த விழிப்­பு­ணர்வு இல்லை. எனவே சந்­தை­யைச் சென்­ற­டைந்து துணி டயப்­பர்­க­ளின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் வச­தி­யை­யும் பாது­காப்­பை­யும் மக்­க­ளி­டையே எடுத்­து­ரைப்­ப­தில் சிக்­கல்­க­ளைச் சந்­தித்­த­தாக சொல்­கி­றார் திவ்யா. ஆனால் ஒரு­முறை அவர்­கள் முயற்­சித்து பலனை அனு­ப­வித்த உடன் தயக்­க­மின்றி எங்­கள் தயா­ரிப்பை தொடர்ந்து பயன்­ப­டுத்­தத் தொடங்­கி­வி­டு­கின்­ற­னர்.

புதி­தாக பெற்­றோ­ராகி இருப்­ப­வர்­க­ளையே இலக்­கா­கக் கொண்டு செயல்­ப­டு­கி­றோம். புதிய தாய்­மார்­களை இலக்­கா­கக் கொண்டு பேஸ்­புக்­கில் விளம்­ப­ரப்­ப­டுத்­து­வோம். KiddieHug துணி டயப்­பர் பயன்­ப­டுத்­தும் தாய்­மார்­கள் அடங்­கிய குழு ஒன்­றும் உள்­ளது. இந்த கான்­செப்டை புதிய தாய்­மார்­கள் புரிந்­து­கொள்ள இது ஒரு சிறந்த தள­மாக அமை­கி­றது.  

”என்­னு­டைய கண­வர் அஷ்­வின் சித்­தார்த் எனக்கு தொழில் ஆலோ­சனை வழங்­கு­வ­தோடு, நான் எடுக்­கும் தீர்­மா­னங்­களை வழி­ந­டத்­து­வது, தவ­று­களை சுட்­டிக்­காட்­டு­வது என அனைத்து ஏற்ற இறங்­கங்­க­ளி­லும் உறு­து­ணை­யாக இருக்­கி­றார்,” என்­றார்