கூட்டுக் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் – சுந்தரி கணேசன்

பதிவு செய்த நாள் : 16 மே 2019

அன்­பெ­னும் நந்­த­வ­னத்­தில் உற­வென்ற பூக்­களை மாலை­யாக கட்டி  அதை  கூட்டுக் குடும்ப தோட்­டத்­தில் நன்கு  செழிப்­பாக ஆல­ம­ரம் போல வேர் விட்டு வள­ரு­வதே கூட்டுக் குடும்­பத்­தின் அழகு. கூட்டு குடும்­பமே கோவி­லாக திக­ழும்.அங்கே  மகிழ்ச்சியை தவிர வேறு எது­வுமே கிடை­யாது.

ஆனால் போலி­யாக நாக­ரி­கம்  என்று கற்­ப­னை­யில் வாழ்ந்து தன்னை சார்ந்­த­வர்­க­ளை­யும் சீர­ழிக்­கின்­றது இன்­றைய இளைய தலை­முறை.அன்­றைய கூட்­டுக் ­கு­டும்­பத்தை வீட்­டின் பெரி­ய­வர்­கள்  வழி நடத்துவார்­கள்.அதில் அன்பு அர­வ­ணைப்பு  பண்புபாசத்தை தவிர வேறு எது­வும் இருக்­காது.

ஆணா­திக்­கம்  துளி கூட இருக்­காது.குடும்ப பெரி­ய­வர்­கள் எது செய்­தா­லும் அது குடும்­பத்­தின் நல்­ல­திற்கே என்ற மனப்­பாங்கு  குடும்­பத்­தி­லுள்ள மற்­ற­வர்­க­ளுக்­கும் இருந்­தது. ஆனால் இன்றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு கழுத்­தில் தாலி ஏறி­ய­துமே தான் இனி இந்த குடும்த்­தின் தலைவி மற்­ற­வர்­கள் தன்­சொற்­படி  நடக்­க­வேண்­டும் என எதிர்­பார்­க­வும்­செய்­வாள்.அதை உட­னடி செயல் படுத்த ஆரம்­பித்­து­வி­டு­வாள்.அவ­ளுக்கு  புத்தி சொல்லி நல்வழிக்கு கொண்­டு­வர இன்­றைய தாய்­மார்­க­ளுக்கு விருப்­ப­மில்லை.அதற்­காக எல்­லோ­ரை­யும் குறை கூற­மு­டி­யாது.ஒரு சிலர் தான் போன வழி­யி­லேயே  தன் பிள்­ளை­களை வழி­ந­டத்தி அவர்­கள்  வாழ்க்கை யை பாழாக்­கு­கி­றோம் என்று தெரி­யா­ம­லேயே வழி­ந­டத்­து­கி­றார்­கள். அந்த கால கூட்டு குடும்ப வாழ்க்­கை­யி­லும் சிறு சிறு தவ­று­கள் நடக்­கும்.மனஸ்­தா­பம்  வரும்.வீட்­டின் பெரி­ய­வர்­கள் பேசி சரி­செய்து விடு­வார்­கள்.மற்­ற­வர்­க­ளும் குடும்­பத்து  பெரி­ய­வர்­க­ளுக்கு கட்­டு­பட்டு ஒற்­று­மை­யு­டன் வாழ்ந்­தார்­கள்.அன்­றைய தலை­மு­றை­யி­னர் விட்டு கொடுத்து வாழ்ந்­த­வர்­கள்  என்­றுமே கெட்­டு­போ­ன­தில்லை  என்ற பழ­மொ­ழிக்­கேற்ப வாழும் வாழ்க்கை யை மகிழ்ச்­சி­யோடு அனு­ப­வித்து வாழ்ந்­தார்­கள்.அந்த காலத்­தில் குடும்­பம்  என்­றால் 5 குழந்­தை­க­ளுக்கு குறை­வில்­லா­மல் இருந்­தார்­கள்.

ஆனால் இந்த தலை­மு­றை­யி­ன­ருக்கு குடும்­பம்  என்­றால் ஓரு குழந்தை. மிக­வும்  அபூர்­வ­மாக இரண்டு குழந்தை. இந்த கால­ தாய்­மார்­கள் குழந்­தை­களை வளர்க்க பெரி­தும் போரா­ட­வேண்­டி­இ­ருக்கு. பெற்ற பிள்­ளை­க­ளுக்­காக சில மணித்­துளி நேரம் கூட ஒதுக்க முடி­வ­தில்லை.அந்த காலத்­தில் வீடு நிறைய குழந்­தை­கள் இருந்­தா­லும் தாய்­மார்கள் சிர­மப்­ப­ட­வில்லை.அலுத்­து­கொண்­ட­தில்லை. இதை நாம் சிந்­திக்­க­வேண்­டும். அந்­த­கா­லம் மனி­தர்­கள் தனித்­தீ­வாக வாழ்ந்­த­தில்லை.வாழ ஆசை­பட்­ட­தில்­லலை.கூடி­வாழ்ந்­தால்  கோடி­நன்மை என்ற பழ­மொ­ழி­யினை கருத்­தினை தானும் கொண்டு தன் குழந்­தை­கள் மன­தி­லும் பதிய வைத்­தி­ருக்­கி­றார்­கள்.குந்­தை­க­ளும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா மாமி, அத்தை, சித்தி, சித்­தப்பா  என்று அனைத்து உற­வு­க­ளின்­அன்பு  பாசத்­தி­லும் இந்த பரந்த உல­கினை எதிர்­கொள்­ளும் தைரி­யம் தன்­மா­னம்  தன்­னம்­பிக்கை யோடு வளர்ந்­தி­ருக்­கி­றார்­கள்.ஆனால் இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு  அம்மா  அப்­பாவை  தவிர வேறு உறவு கள் தெரி­வ­தில்லை. தெரிந்து கொள்ள பெற்­ற­வர்­கள்  விருப்­பம்  கொள்­வ­தில்லை.அவர்­களை பொருத்­த­வரை மற்ற உற­வு­கள் தேவை­யில்­லாத சுமை­கள்.தன்னை பெற்­ற­வர்­க­ளையே வீண் சுமை­யாக கரு­து­ப­வர்­கள்.அவர்­கள்  தன்­னோடு இருப்­பது அகவு­ர­வம் என நினைத்து  முதி­யோர் விடு­தி­யில் விட்டு விடு­கி­றார்­கள். தனக்­கும் ஓரு நாள் முதுமை வரும் என்­பதை மறந்து விடு­கி­றார்­க­ளள்.பெற்­ற­வர்­களை  கட­வு­ளாக நினைக்க. வேண்­டாம்.மனி­த­னா­க­வா­வது மதிக்­க­வேண்­டும்.

அப்­போது தான் நம் குழந்­தை­கள் நமக்கு மரி­யாதை தரு­வார்­கள். வய­தா­ன­வர்­கள் முதி­யோர் இல்­லத்­துக்கு அனுப்­பு­வதை தவி­ருங்­கள். கூட்டு என்­றால் சேர்க்கை  என்று அர்த்­தம்.கூட்டுக் குடும்­பம்  என்­றால் குடும்ப நபர்­கள் எல்­லோ­ரும் சேர்ந்­தது.கூட்டு குடும்­பத்­தி­னால் ஆதா­யம் என்ன என்­ப­தை­பார்ப்­போம்.ஒரு பெண்  திரு­ம­ணம்  முடிந்து புகுந்த வீட்­டிற்கு வரும் போது பய­மா­க­வும் பட­ப­டப்­பா­க­வும் இருக்­கும்.புகுந்­த­வீட்­டி­னர் அ வளை அன்­போ­டும் பாசத்­தோ­டும் அர­வ­ணைத்­தால் உள்­ளத்­தா­லும் மன­தா­லும் தைரி­ய­மும் மகிழ்ச்­சி­யும் அடை­வாள்.அந்த குடும்­பத்­து­டன் ஒன்றி விடு­வாள். அந்த. குடும்­பத்து பழக்க வழக்­கம்  பாரம்­ப­ரி­யம்  எல்­லா­வற்­றை­யும் ஆர்­வத்­தோடு கற்­ற­றுக்­கொள்­வாள். குடும்ப பாசம் ஒற்­றுமை கூட்­டு­கு­டும்­பத்­தின் மகிமை எல்­லாமே புரிந்து குடும்­பத்­து­டன் ஒன்­றி­வி­டு­வாள்.நானும் கூட்டு குடும்­பத்­தில் வளர்ந்­த­வள் என்று பெரு­மை­யு­டன் சொல்­லிக்­கொள்ள ஆசை­ப­டு­கி­றேன். சிறு  வய­தில் தாயை இழந்த நான் அந்த ஏக்­கம்  தெரி­யா­மல் வளர்ந்­தேன் என்­றால் அதற்கு கார­ணம்  நான் வளர்ந்­தது கூட்டு குடும்­பத்­தில்.கூட்டுக்குடும்­பத்­தி­தில்  வள­ரும்  குழந்­தை­க­ளுக்கு ஓரே மாதிரி கவ­னிப்பு.உணவு உடை எல்­லா­வற்­றி­லும் பாகு­பாடு கிடை­யாது. நாங்­க­ளும் மன­தா­லும் செய­லா­லும் ஒன்று பட்டு வளர்ந்­தோம். வீட்­டில் எப்­போ­தும் விருந்­தாளி  உற­வி­னர்  கூட்­டம் திரு­ம­ண­வீடு போல காட்சி அளிக்­கும்.இந்த தலை­மு­றை­யிர் விருந்­தாளி  வந்­து­விட்­டால் அவர்­கள்  திரும்­ப­போ­கும் வரை இவர்­கள்  நிம்­மதி இழந்­து­வி­டு­வார்ள். அவ்­வ­ளவு  விருந்­தோம்­பல்  இந்த தலை­மு­றை­யில். கூட்டு குடும்­பம் போது சிறு­மி­க­ளாக இருந்த நாங்­கள் எங்­கள்  தலை­முறை  எங்­கள்  பசங்­கள்  எங்­கள் பேரன் பேத்தி த லைமுறை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கோம்.

இப்­போது நாக­ரி­கம் என்ற போர்­வை­யில் பாழ்­நெற்­றி­யும் விரித்த கூந்­த­லு­மாக சுற்றி வரு­வார்­கள்.பூ  வைத்­துக்­கொள்து அவர்­க­ளுக்கு அவ­மா­னம். காலத்­தின் கோலம் என்று நான் ஒத்­துக்­கொள்­ள­மு­டி­யா­தது. எல்­லா­வற்­றுக்­கும் கார­ணம் நாம். அதிகசெல்­லம் கொடுத்து கெடுத்­து­விட்­டோம்.புடவை கட்­டிக்­கொண்­டால் ஆண்டி என்று அழைப்­பார்­க­ளாம்.என்­றும் 16 ராகி­ இ­ருக்க ஆசை.ஆண்ட்­ராய் போன் வந்­தது.அம்மா வின் மேல் ஆசை போனது..வீடியோ கேம் வந்­தது. நம் பாரம்­பரி விளை­யாட்டு கோலி பம்­ப­ரம்,  பாண்டி, தட்­டா­மாலை,  தாயம், கில்லி எல்­லாம்     மறந்­தாச்சு. பாரம்­ப­ரிய விளை­யாடு  நினை­வாற்­றல்  பிற­ருக்கு உத­வு­வது விட்­டு­கொ­டுக்­கும் மணம் இருப்­பதை பகிர்ந்து கொடுக்­கும் குணம் ஆகி­ய­வற்றை வளர்க்­கும்.அந்த நல்ல பண்­பு­கள் நம்மை விட்டு போய்­வி­டு­மம்.