கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 16–05–19

பதிவு செய்த நாள் : 16 மே 2019

சரியாக தெரிந்து கொண்டு முன்னேற வேண்டும்...!

ஒரு பழைய நட்­சத்­திர நடி­கை­யின் படத்­தைப் பார்த்து  விட்டு ஒரு­வர்  முக­நூ­லில் எழு­தி­னார்:

ஷீ வெரி கிளா­மர். She very glamour.

இதில் அவள் என்று பெண்­பாலை 'ஷீ ' (she) என்று குறித்­தது சரி. கூடு­தல் என்­ப­தைக் குறிக்க வெரி (very) என்று பயன்­ப­டுத்­தி­ய­தும் சரி.

மற்­ற­படி வாக்­கிய அமைப்பு தவ­றா­னது.

இது­போன்ற வாக்­கி­யங்­க­ளில் ஆங்­கி­லத்­தில் 'லிங்­கிங் வர்ப்' (linking verb) என்று கூறக்­கூ­டிய ஒரு சொல் இடம் பெறும்.

இங்கே அதை, 'இஸ்' is என்று கொள்­ள­லாம். ஆகவே 'ஷீ ' (she) என்­ப­தைத் தொடர்ந்து 'இஸ்' வர­வேண்­டும். 'ஷீ ' (she) இஸ் (is)….

அவள் எப்­படி இருக்­கி­றாள்? கவர்ச்­சி­க­ர­மான அழகு உடை­ய­வ­ளாக இருக்­கி­றாள்.

அதற்கு, 'ஷீ வெரி கிளா­மர்' She very glamour என்ற தவ­றான வாக்­கி­யத்­தின் அடிப்­ப­டை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய சொல், 'கிளா­ம­ரஸ்' glamorous.  

'ஷீ இஸ் வெரி கிளா­ம­ரஸ்' She is very glamorous என்­ப­து­தான் சரி­யான வாக்­கி­யம்.

'கிளா­மர்' என்ற பெயர்ச்­சொல் glamour என்ற எழுத்­துக்­கள் உடை­ய­தாக இருக்­கி­றது. அது அடை­மொ­ழிச் சொல்­லாக்­கப்­ப­டும் போது glamorous (கிளா­ம­ரஸ்) என்று அதன் எழுத்­துக்­கள் அமை­வ­தை­யும் கவ­னித்­துக் கொள்­ள­வேண்­டும்.

இண்­டெ­லி­ஜென்ஸ்  intelligence என்­பது அறி­வுத்­தி­ற­னைக் குறிக்­கும் பெயர்ச் சொல். அறிவை வளர்த்­துக்­கொண்டு அதைப் பயன்­ப­டுத்­தும் தன்மை என்­கி­றது ஒரு dடி­க்ஷ­னரி.

இண்­டெ­லி­ஜென்ஸ் என்­பது ராணு­வத் தேவை­க­ளுக்­கா­க­வும் சட்­டம் ஒழுங்­கைப் பரா­ம­ரிக்­கும் தேவை­க­ளுக்­கா­க­வும் பெறப்­ப­டு­கிற தக­வல்­க­ளை­யும் குறிக்­கும்.

அறி­வுத் திறன் என்ற பொரு­ளில் ஒரு எடுத்­துக்­காட்டு வாக்­கி­யம்: ஹீ டஸ் நாட் ஹேவ் த இண்­டெ­லி­ஜென்ஸ் ஆஃப் ஹிஸ் எல்d­டர் ஸிஸ்­டர். He does not have the intelligence of his elder sister. அவ­னுக்கு அவ­னு­டைய தமக்­கை­யின் அறி­வுத் திறன் இல்லை.

உள­வுத்­த­க­வல் என்ற பொரு­ளில் ஒரு எடுத்­துக்­காட்டு வாக்­கி­யம் : த போலீஸ் டிபார்ட்­மென்ட் ஹேட்d இண்­டெ­லி­ஜென்ஸ் அபவ்ட் த சிச்­சு­வே­ஷன். The police department had intelligence about the situation நில­வ­ரத்­தைக் குறித்த நுண்­ண­றி­வுத் தக­வல் காவல் துறை­யி­டம் இருந்­தது.

அவன் ரொம்ப இண்­டெ­லி­ஜென்ஸ் intelligence என்று பயன்­ப­டுத்­து­வது தவறு.

ஆங்­கி­லத்­தி­லும், ஹீ இஸ் வெரி இண்­டெ­லி­ஜென்ஸ் He is very intelligence  என்­ப­தும் தவறு.

அவன் ரொம்ப அறி­வுத்­தன்மை என்­பது எப்­படி சரி­யாக இருக்­கும்?

இண்­டெ­லி­ஜென்ஸ் intelligence என்ற பெயர்ச்­சொல்­லின் பெய­ரடை வடி­வம்  இண்­டெ­லி­ஜென்ட் intelligent. அதை ஹீ என்­ப­து­டன் பயன்­ப­டுத்­தி­னால்­தான் வாக்­கி­யம் சரி­யாக அமை­யும்.

ஹீ இஸ் வெரி இண்­டெ­லி­ஜென்ட்..He is very intelligent. அவன் ரொம்ப புத்­தி­சாலி, மிகுந்த அறி­வுத்­தி­றமை உள்­ள­வன்.

இதே வரி­சை­யில் இன்­னும் சில எடுத்­துக்­காட்­டு­கள்.

பிரே­வரி bravery = வீரம்

பிரேவ் brave = வீர­முள்ள

த மராட்டா  வாரி­யர் சிவாஜி வாஸ் வெரி பிரே­வரி The Maratha warrior Shivaji was very bravery என்­பது தவறு. த மராட்டா  வாரி­யர்


சிவாஜி வாஸ் வெரி பிரேவ் The Maratha warrior Shivaji was very brave.  

பியூட்டி beauty = அழகு

பியூட்­டிஃ­புல்

beautiful = அழ­கான

ராணி பத்­மா­வதி வாஸ் வெரி பியூட்டி என்­பது தவறு, ராணி பத்­மா­வதி வாஸ் வெரி பியூட்­டிஃ­புல் (Rani Padmavathi was very beautiful) என்­பது சரி­யான வாக்­கிய அமைப்பு.

கம்­பா­ஷன் compassion = தயவு, கருணை

கம்­பா­ஷ­னேட் compassionate = தய­வுள்ள, கரு­ணை­யுள்ள

ஹேவ் கம்­பா­ஷன் ஃபார் த புவர். Have compassion for the poor. ஏழை­கள் மீது கருணை கொள்.

எம்.ஜி.ஆர். ஹேட் கம்­பா­ஷன் ஃபார் த புவர். MGR had compassion for the poor. எம்.ஜி.ஆருக்கு ஏழை­கள் மீது இரக்­கம் இருந்­தது.

இட் இஸ் இம்­பார்­டென்ட் டு பி கம்­பா­ஷ­னேட் …lt is important to be compassionate. கரு­ணை­யுள்­ள­வ­ராக இருப்­பது முக்­கி­ய­மான விஷ­யம்.

கான்ஃ­பி­டென்ஸ் confidence = தன்­னம்­பிக்கை

கான்ஃ­பி­டென்ட் confident = தன்­னம்­பிக்­கை­யுள்ள

யூ மஸ்ட் ஹேவ் கான்ஃ­பி­டென்ஸ் இன் யொர்­செல்ஃப் You must have confidence in yourself. உனக்கு உன்­மீது நம்­பிக்கை இருக்­க­வேண்­டும்.

அந்த அர­சி­யல் தலை­வ­ருக்கு சதீஷ் மீது அதிக நம்­பிக்கை இருக்­கி­றது. தேட் பொலி­டி­கல் லீடர் ஹேஸ் மச் கான்ஃ­பி­டென்ஸ் இன் சதீஷ். That political leader has much confidence in Satish.

என்வி envy என்­றால் பொறாமை, மாச்­ச­ரி­யம்.

'ஹீ இஸ் என்வி' He is envy என்­றால் 'அவன் பொறாமை' என்று கூறு­வ­து­போல் ஆகும். தவ­றான வாக்­கி­யம். 'ஹீ இஸ் என்­வி­யஸ்' He is envious என்­றால் அவன் பொற­மை­கு­ணம் உள்­ள­வன் என்று பொருள்­ப­டும். சரி­யான வாக்­கி­யம்.

 பேஷன்ஸ் patience  என்­றால் பொறுமை.

தமி­ழில், பேச்சு வழக்­கில், அவன் ரொம்ப பொறுமை என்­றால் விஷ­யம் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தா­கத்­தான் இருக்­கும். அவன் மிகுந்த பொறு­மை­சாலி என்று அர்த்­தப்­ப­டுத்­திக்­கொள்­வோம். ஆனால் ஆங்­கி­லத்­தில் 'ஹீ இஸ் வெரி பேஷன்ஸ்' He is very patience என்­றால் சொன்­ன­வ­ரின் ஆங்­கி­லம் ரொம்ப வீக் என்று தெரி­யும்.

ஹீ இஸ் வெரி பேஷென்ட் He is very patient என்று கூற­வேண்­டும். பேஷன்ட் patient = பொறு­மை­யுள்ள.

பேஷன்ட் patient என்­ப­தற்கு சிகிச்­சைப்­பெ­றும் நோயாளி என்ற பொரு­ளும் உள்­ளது.

விஸ்d­டம் wisdom = ஞானம்

வைஸ் wise = ஞான­முள்ள, அறி­வார்ந்த

எக்ஸ்­பீ­ரி­யென்ஸ் இஸ் த மதர் ஆஃப் விஸ்d­டம். Experience is the mother of wisdom.

அனு­ப­வம்­தான் ஞானத்­தின் தாய்.

அனு­ப­வங்­கள் ஞானத்­தைத் தரு­கின்­றன என்று பொருள்.

அனு­ப­வங்­கள் ஒரு மனி­தனை ஞான­முள்­ள­வ­னாக ஆக்­கு­கின்­றன. எக்ஸ்­பீ­ரி­யென்­ஸெஸ் மேக் அ பர்­ஸன் வைஸ். Experiences make a person wise.

வைஸ் பீபிள் டோன்ட் ரிப்ளை டு அப்­யூஸ். Wise people don’t reply to abuse. அறி­வார்ந்­த­வர்­கள் தூற்­று­த­லுக்­குப் பதில் கூறு­வ­தில்லை.

மணி­யின் அப்பா ஞான­முள்­ள­வர். Mani’s father is wise.

ஆங்­கி­லம் சரி­யா­கப் பேச­வும் எழு­த­வும் இப்­ப­டிப் பட்ட உயர்ந்த ஞான­மெல்­லாம் தேவை இல்லை. பழக்க வந்தாலே பேச­லாம், எழு­த­லாம். ஆனால் எந்த மொழி­யாக இருந்­தா­லும் ஞான­மா­கப் பேச­வேண்­டும் என்­றால் அன்­பும் அரு­ளும் வேண்­டும். உழைத்து ஆங்­கில அறிவை வளர்த்­துக்­கொள்­வோம். அது எப்­ப­டி­யும் உத­வும்

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in