பிசினஸ் : வளமான வாழக்கை அளிக்கும் தொழில் படிப்புகள்...!

பதிவு செய்த நாள் : 16 மே 2019

இன்­றைய நிலை­யில் சொந்­த­மா­கத் தொழில் செய்­ய­வேண்­டும் என்று நினைப்­ப­வர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள், பொறி­யி­யல் மாண­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்­கள். வேலை இல்­லா­மல் இருப்­ப­து­தான் இதற்கு கார­ணம். வேலை வாய்ப்­பில்­லாத படிப்­பு­களை படிப்­ப­தை­விட, தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் படிப்­பு­க­ளைப் படித்­தால், வள­மான எதிர்­கா­லம் உரு­வா­கும். வருங் காலத்­தில் நல்ல தொழில் வாய்ப்­பு­கள் உள்ள ஐந்து தொழில் படிப்­பு­கள் பற்றி சொல்­கி­றேன். இந்த படிப்­பு­களை முடித்­த­தும் இது­சார்ந்த நிறு­வ­னங்­க­ளில் வேலை பார்த்­து­விட்டு, அனு­ப­வங்­க­ளைப் பெற்று ஓரிரு ஆண்­டு­க­ளுக்­குப்­பி­றகு சொந்­த­மா­கத் தொழில் தொடங்­கு­வது  நல்­லது.

ஓட்­டல் மேேனஜ்­மென்ட் கேட்­ட­ரிங் டெக்­னா­லஜி!

சேவைத் துறை­க­ளி­லேயே மிக முக்­கி­ய­மா­னது ‘ஓட்­டல் மேேனஜ்­மென்ட்’ துறை­தான். சுற்­று­லாத் துறை­யு­டன் நெருங்­கிய தொடர்பு இருப்­பதே இதற்­குக் கார­ணம். சுற்­று­லாத் துறை  விரி­வ­டை­வ­தற்­கேற்ப ஓட்­டல் மேேனஜ்­மென்ட் துறை­யும் வேக­மாக வள­ரும். இதைப் படித்து முடித்­து­விட்­டுச் சொந்­த­மா­கத் தொழிலை ஆரம்­பித்­தால், நட்­சத்­திர உண­வ­கங்­கள், ரெஸ்ட்­டா­ரன்ட்­கள், துரித உண­வ­கங்­கள், விமா­னச் சமை­யல் துறை, தொழிற்­சாலை கேன்­டீன்­கள், பன்­னாட்டு நிறு­வ­னங்­கள், ரயில்வே, கப்­பல்­கள், ராணு­வம், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னத்­தில் விருந்­தி­னர் வாடிக்­கை­யா­ளர் தொடர்பு போன்ற கணக்­கி­ல­டங்­காப் பிரி­வு­க­ளில் கேட்­ட­ரிங் ஆர்­டர்­கள் வாய்ப்­பி­னைப் பெற­மு­டி­யும். அதீ­த­மான கல்­விப் பின்­பு­லமோ, அள­வி­டற்­க­ரிய ஆற்­றலோ, மிகக் கடு­மை­யான சவால்­களோ, நெருக்­க­டி­களோ இல்­லாத துறை இது என்­ப­தால் மாண­வர்­கள் கண்­டிப்­பாக இந்த படிப்­பைத் தேர்வு செய்­ய­லாம்.

ஆனா­லும், தொடர்­பு­கொள்­ளும் திறன், கொஞ்­சம் நுண்­ண­றிவு, கொஞ்­சம் பொது அறிவு, திட்­ட­மி­டல் ஆகிய திறன்­கள் கண்­டிப்­பா­கத் தேவை. வசீ­க­ர­மான தோற்­றம் இருத்­தல் விரும்­பத்­தக்­கது. உண­வக மேலாண்மை, விருந்­தி­னர் உப­ச­ரிப்பு, நேர மேலாண்மை போன்­றவை சரி­யான திட்­ட­மி­ட­லு­டன் இருந்­தால் கண்­டிப்­பாக வெற்­றி­தான்.

வெளி­நாட்டு வாடிக்­கை­யா­ளர்­கள் எந்த தேசம், அவர்­க­ளது மொழி, அவர்­கள் விரும்­பும் உணவு அவர்­க­ளது தேவை போன்­ற­வற்றை நன்கு அறிந்து வைத்­தி­ருத்­தல் இந்த துறை­யில் வேக­மான முன்­னே­றத்­துக்கு வழி­வ­குக்­கும். எடுத்­த­தும் தொழில் தொடங்க தயக்­க­மாக இருக்­கும்­பட்­சத்­தில், படித்து முடித்­த­வு­டன் நல்ல நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றி­விட்டு, சிறிது அனு­ப­வம் பெற்­ற­தும் சொந்­த­மா­கவே தொழில் தொடங்­க­லாம். படிப்­புக் காலம் 3 முதல் 4 ஆண்­டு­கள். இதற்­கான செலவு ஒரு செமஸ்­ட­ருக்கு மூன்று முதல் இரண்டு லட்­சம் (கல்வி நிறு­வத்­தைப் பொறுத்­தது) ஆக­லாம்.

இந்த படிப்­பினை படிக்க மத்­திய அர­சின் நேஷ­னல் கவுன்­சில் பார் ஓட்­டல் மேனஜ்­மென்ட் அண்ட் கேட்­ட­ரிங் டெக்­னா­லஜி தேசிய அள­வில் நுழைத்­தேர்வு நடத்­து­கி­றது. நாடு முழு­வ­தும் அதன் அங்­கீ­கா­ரம் பெற்ற 52 கல்வி நிறு­வ­னங்­க­ளில் நுழை­வுத்­தேர்­வின் அடிப்­ப­டை­யில் சேர்க்கை நடை­பெ­று­கி­றது. தேர்­வுக்­குப்­பின் தர­வ­ரி­சைப் பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்டு இடங்­கள் ஒதுக்­கப்­ப­டும்.இவை தவிர தனி­யார் கல்­லூ­ரி­க­ளும் உள்­ளன. அதில் சேர எந்த நுழைவு தேர்­வும் கிடை­யாது. சரி­யான கல்­லூ­ரியை தேர்ந்­தெ­டுத்து சேர­லாம். கடும் உட­லு­ழைப்பு இந்த துறைக்­குத் தேவைப்­ப­டும் என்­றா­லும், உழைப்­புக்­கேற்ற பலன் நிச்­சி­யம் கிடைக்­கும்!

ஆடை வடி­வ­மைப்பு!

நல்ல கல்­வி­ய­றிவு, மிகுந்த நுண்­ண­றிவு, சிறப்­பான படைப்­பாக்­கத் திறன், ஆழ­மான ரசனை, கொஞ்­சம் வர­லாற்­றுப் புரி­தல், எதை­யும் கூர்ந்து நோக்­கும் இயல்பு, இது போதுமே உங்­களை மிகச் சிறந்த ஆடை வடி­வ­மைப்­பா­ள­ராக இனம் காண. மேல்­நி­லைக் கல்­வி­யில் எந்­தப் பிரி­வாக இருந்­தா­லும் இந்த துறை­யில் சிறப்­பாக வர­மு­டி­யும். திற­மை­யும், ஞான­மும், தன்­மு­னைப்­பும் போதும் இதில் வெற்­றி­ய­டைய. ரீடெய்ல் துறை வெகு வேக­மாக முன்­னே­றி­வ­ரும் இந்த இந்­தி­யச் சூழ­லில் இவர்­கள் பங்கு அதி­முக்­கி­யம்.

மீடியா, சினிமா, பேஷன் ஷோ போன்ற எண்­ணற்ற இடங்­கள் இவர்­க­ளுக்­கா­ன­வையே. திரு­ம­ணம், சிறப்பு நிகழ்ச்­சி­கள் போன்­ற­வற்­றிற்­கா­கக் கூட ஆடை வடி­வ­மைப்­பா­ளர்­களை அமர்த்­திக் கொள்­வ­தும் உண்டு. வண்­ணங்­கள் குறித்து இவர்­க­ளுக்கு ஆழ­மான ஞானம் இருக்க வேண்­டி­யது மிக அவ­சி­யம்.

பல சிறப்­பான ஆடை வடி­வ­மைப்­பா­ளர்­கள் தங்­க­ளது அதி அற்­பு­த­மான ஆடை­களை அறி­மு­கப்­ப­டுத்­தவே பேஷன் ஷோக்­களை நடத்­து­வ­தும் உண்டு. உள்­நாட்­டி­லும், வெளி நாட்­டி­லும் பர­வ­லான வேலை வாய்ப்­புள்­ளது. டிசைன் துறை­யில் ஆர்­வ­முள்ள மாண­வர்­கள் இந்த துறை­யைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம். சில காலம் ஆரம்­பக் கட்ட பணி அனு­ப­வத்­துக்­குப்­பின் சொந்­த­மாக ‘டிசைன் ஸ்டூடியோ’ வைத்து தொழில் தொடங்­க­லாம்.

நேஷ­னல் இன்ஸ்ட்டி­யூட்  ஆப் பேஷன் டெக்­னா­லஜி இதற்­கான படிப்­பு­களை வழங்­கு­கி­றது. இந்­தி­யா­வின் பல மாநி­லங்­க­ளில் இதன் கிளை­கள் அமைந்­துள்­ளது. இது நியூ­யார்க்­கில் உள்ள பேஷன் இன்ஸ்ட்­டி­டி­யூட்­டு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் செய்­தி­ருப்­ப­தால், கல்­வி­யில் ஓராண்டு படிப்பை நியூ­யார்க்­கில் படிக்­கக்­கூ­டிய வாய்ப்­பும் உள்­ளது.

பல சர்­வ­தேச கல்வி நிறு­வ­னங்­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருப்­ப­தால், சர்­வ­தேச அள­வில் நடத்­தப்­ப­டும் பல போட்­டி­க­ளில் மாண­வர்­கள் பங்­கேற்­கும் வாய்ப்­புள்­ளது. இங்­குப் படிக்­கும் மாண­வர்­கள் படிக்­கும் காலத்­தி­லேயே தொழில் நிறு­வ­னங்­க­ளில்


பணி­பு­ரி­வ­தற்­கேற்ற செய்­முறை பயிற்­சிக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­கி­றது. அக்­ச­ஷரி டிசைன், பேஷன் கம்­யூ­னி­கே­ஷன், பேஷன் டிசைன், நிட்­வேர் டிசைன், லெதர் டிசைன், டெக்ஸ்­டைல் டிசைன் ஆகிய பாடப் பிரி­வு­க­ளில்  போன்ற நான்­காண்டு படிப்­பில் சேர +2 போது­மா­னது.

ஒரு செமஸ்­ட­ருக்கு 80 ஆயி­ரம் தவிர, இதர கட்­ட­ணங்­க­ளும் உண்டு. தகு­தி­யான மாண­வர்­க­ளுக்கு உத­வித் தொகை­யும் கிடைக்­கும். பகுதி நேர வேலை வாய்ப்­புக்­கும் ஸ்டூடண்ட் அசிஸ்­டென்ஸ்­ஷிப் திட்­ட­மும் உள்­ளது. பல லட்­சங்­க­ளில் வரு­மா­னம் தரக்­கூ­டிய படிப்­பு­க­ளில் இது­வும் ஒன்­றா­கும். பல தனி­யார் கல்­லூ­ரி­க­ளும் இப் படிப்பை நடத்­து­கின்­றன. அதி­லும் சேர­லாம். சொந்­த­மா­க­வும் தொழில் தொடங்­க­லாம்.

புள்­ளி­யி­யல்!

வளர்ச்­சியோ அல்­லது வீழ்ச்­சியோ அதை அள­வி­டப் புள்­ளி­யிய மட்­டுமே பேரு­தவி புரி­கி­றது. வங்கி, சேவைத் துறை­கள், தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், வணி­கம், நிதி, அர­சி­யல், தொழில், மனித ஆற்­றல், கல்வி போன்ற எண்­ணற்ற துறை­க­ளில் இதன் முக்­கி­யத்­து­வம் தவிர்க்க இய­லா­தது. கணி­தம் மற்­றும் தர்க்­க­ரீ­தி­யாக அலசி ஆரா­யும் திறமை மிகுந்த மாண­வர்­கள் இந்­தத் துறை­யில் சிறப்­பா­கப் பிர­கா­சிக்க முடி­யும்.

இந்த படிப்பு, கணி­தம், குவா
ண்­ட­டிட்­டிவ் எக்­கா­னா­மிக்ஸ், கம்ப்­யூட்­டர் சயின்ஸ், ஆப்­ரே­ஷன் ரிசர்ச், ஆந்த்­ர­பா­லஜி, சமூ­க­வி­யல், அர­சி­யல் அறி­வி­யல், விவ­சா­யம், உள­வி­யல், புவி­யி­யல், போன்ற பிற படிப்­பு­க­ளோடு நெருங்­கிய தொடர்பு கொண்­டி­ருப்­ப­தால் அந்­தத் துறை­யி­லும் புள்­ளி­யி­யல் அறி­ஞர்­க­ளுக்­குப் பெரும் வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்­றன. சான்­றாக, புள்­ளி­யி­யல் மாண­வ­ருக்கு அர­சி­யல் அறி­வி­ய­லில் ஆர்­வம் இருக்­கு­மா­னால், அவரே சீபா­ல­ஜிஸ்ட் எனப்­ப­டு­கி­றார். தேர்­தல் காலத்­தில் இவ­ரது பணி மிக­மிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஒன்­றாக இருக்­கி­றது. பல முக்­கிய அர­சி­யல் கட்­சி­கள் தேர்­த­லை­யொட்டி பல நிலை­க­ளில் புள்­ளி­யில் நிபு­ணர்­க­ளின் உத­வியை நாடு­கின்­றன.

ஒரு புதிய பொருளை சந்­தைப்­ப­டுத்­தும்­போ­தும், சந்தை நிலை­யைக் கணிக்க இவர்­கள் தேவைப்­ப­டு­கி­றார்­கள். மார்க்­கெட் சர்வே இல்­லா­மல் எந்­தப் பொரு­ளும் சந்­தையை அடைய முடி­யாது. நுகர்­வோர் மன­நிலை, விலை, போட்­டி­யா­ளர்­கள், விளம்­ப­ரம் போன்ற எண்­ணற்ற தளத்­தில் இவர்­க­ளின் பங்­க­ளிப்­பை­யொட்­டியே பிராண்ட் பொசி­ஷ­னிங் செய்ய முடி­யும். எனவே, விளம்­ப­ரங்­கள்­கூட இவர்­க­ளின் முடிவை ஒட்­டியே வடி­வ­மைக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே சந்­தை­யில் இருக்­கிற பொரு­ளைக்­கூ­டத் தரம் உயர்த்­தவோ, நிலை உயர்த்­தவோ, விலை உயர்த்­தவோ வேண்­டு­மா­னால்­கூட மார்க்­கெட் சர்வே அவ­சி­யம். ஒரு தேசத்­தின் சமூக, பொரு­ளா­தார நிலை, குற்ற சம்­ப­வங்­கள், விபத்­துக்­கள் போன்ற எண்­ணற்ற இடங்­கள் இவர்­க­ளுக்­கா­ன­வையே. +2 தேர்வை முடித்த மாண­வர்­கள், புள்­ளி­யி­ய­லில் இளம்­க­லை­யில் சேர­லாம் துவக்­கத்­தில் வேலைக்­குச் சேர்ந்து பயிற்சி பெற்­ற­பின் தனி­யாக ஒரு நிறு­வ­னத்­தைத் துவங்கி வெற்­றி­க­ர­மாக நடத்­த­லாம். இந்­தப் படிப்­புக்கு உள்­நாட்­டில் மட்­டு­மல்­லா­மல் வெளி­நாட்­டி­லும் முக்­கி­யத்­து­வம் உண்டு. ஐஏ­எஸ் போன்ற படிப்­பு­க­ளைத் தேர்­வு­செய்­யப் புள்­ளி­யி­ய­லும் முக்­கி­யம்.