சென்னையில் தங்கம் விலை இன்று கிடு கிடு உயர்வு

பதிவு செய்த நாள் : 14 மே 2019 18:57

சென்னை: 

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ஒரு சவரன் ரூ.24,722-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 24,432-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஓரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,085 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,728-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 296 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,236 ஆகவும், சவரனுக்கு ரூ.25,936-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 40.30 காசுகளுக்கும் காசுகளுக்கும், கிலோ ரூ.40,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.