நாலுவித­மான டைமன்­ஷன்! – செந்­தில்­கு­மாரி

பதிவு செய்த நாள் : 15 மே 2019

‘‘இயற்­கை­யா­கவே நான் ரொம்ப ஜாலி­யான பேர்­வழி. அப்­ப­டிப்­பட்ட நேரத்­திலே எனக்கு காமெடி கேரக்­டர் கிடைச்சா சும்மா பின்னு பின்­னுன்னு பின்­னிட மாட்­டேன்!’’ என்­கி­றார் செந்­தி­கு­மாரி என்­னும் செந்­தில்­கு­மாரி.

சினிமா, சீரி­யல் என இரட்­டைக் குதிரை சவாரி செய்து கொண்­டி­ருக்­கும் அவர், இப்­போது ‘பாரதி கண்­ணம்­மா’­­­வில் நடித்து வரு­கி­றார். அவர் சொன்­ன­தா­வது:–

‘‘‘கனா காணும் காலங்­கள்’ சீரி­யல் மூலமா நான் சின்­னத்­தி­ரை­யிலே நுழைஞ்­சேன். அதிலே ஒரு டீச்­சரா நடிச்­சி­ருந்­தேன். சீரி­யல் சூப்­பர் டூப்­பர் ஹிட்­டாச்சு. அதுக்­கப்­பு­றம் பல சீரி­யல்­கள்ல நடிச்­சேன். சரி... சீரி­யல்ல நடிச்­சது போதும் சினி­மா­விலே கான்­சன்ட்­ரேட் பண்­ண­லாம்னு இருக்­கும் போது ‘சர­வ­ணன் மீனாட்சி’ ஆபர் வந்­துச்சு. ஆரம்­பத்­திலே அதை ஒத்­துக்­கி­ற­துக்கு நான் தயக்­கம் காட்­டி­னேன். ஏற்­க­னவே சில எபி­சோ­டு­களை பார்த்து ரசிச்­சி­ருக்­கேன். அத­னால, என்­னால தவிர்க்க முடி­யலே. நான் எதிர்­பார்த்­த­படி அது நல்­ல­ப­டி­யா­தான் போய்க்­கிட்டு இருந்­துச்சு. ஆனா, என்­னன்னு தெரி­யலே, அதிலே நடிச்­சுக்­கிட்­டி­ருந்த சில பேரு சீரி­யல்ல நடிக்­கி­ற­திலே இருந்து ஒவ்­வொ­ருத்­தரா கழண்­டுக்­கிட்டு இருந்­தாங்க. அப்­படி சில பேரு வெளி­யே­றும் போது எனக்கு கஷ்­டமா இருந்­துச்சு. ஏன்னா, நாங்க எல்­லா­ரும் ஒரு குடும்­பமா பழ­கிக்­கிட்டு இருந்­தோம். ‘சர­வ­ணன் மீனாட்சி’ எனக்கு பெரிய புகழை கொடுத்­துச்சு. திடீர்னு இந்த சீரி­யலை முடிக்க போறாங்­கன்னு கேள்­விப்­பட்­ட­தும் ரொம்ப வருத்­தப்­பட்­டேன்.

இந்த சீரி­ய­லுக்கு பிறகு எந்த சீரி­யல்­ல­யும் நடிக்க வேணாம்னு முடிவு பண்­ணி­யி­ருந்த சம­யத்­திலே ‘பாரதி கண்­ணம்மா’ ஆபர் வந்­துச்சு. ஸ்டிரிக்டா வேணாம்னு சொல்­ற­துக்கு இருந்­தேன். ஆனா, என் கேரக்­டரை பத்தி கேட்­ட­தும் என்­னால தவிர்க்க முடி­யலே. நாலு­வி­த­மான பரி­ணா­மங்­கள் இருக்­கி­றது என் கேரக்­டர்ல உள்ள விசே­ஷம். கண்­ணம்­மா­கிட்ட மட்­டும் அதி­ர­டியா இருக்­கி­றது, மத்­த­வங்­க­கிட்ட ஜாலியா இருக்­கி­றது, புரு­ஷன்­கிட்ட கேலி­யும் கிண்­ட­லுமா இருக்­கிற பொண்­டாட்டி, அன்­புள்ள அம்மா – இப்­படி 4 டைமன்­ஷன்ஸ்.

என் மூஞ்­சிக்கு வில்லி கேரக்­டர் சுத்­தமா பொருந்­தாது. நீங்க வில்­லியா மட்­டும் நடிக்­கா­தீங்­கன்னு என்­கிட்ட பல பேரு சொல்ல ஆரம்­பிச்­சிட்­டாங்க. எனக்­கும் கூட வில்லி கேரக்­டரை பிடிக்­கவே பிடிக்­காது. சினி­மா­விலே நடிக்­கி­றதை காட்­டி­லும் சீரி­யல்ல நடிக்­கி­றது கொஞ்­சம் கஷ்­ட­மாத்­தான் இருக்கு. இனிமே சீரி­யல்ல நடிக்­கக்­கூ­டா­துன்னு ஒவ்­வொரு தட­வை­யும் நிைனப்­பேன். ஆனா, ஏதா­வ­தொரு கார­ணத்­தால தொடர்ந்து நடிக்க வேண்­டி­யதா போயி­டுது.’’