சுவை­யான அனு­ப­வம்!

பதிவு செய்த நாள் : 15 மே 2019

சினிமா பார்ப்­பது எவ்­வ­ளவு சுவா­ரஸ்­யமோ அதே­போல்­தான் சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளின் பட அனு­ப­வங்­கள் மற்­றும் அவர்­களை பற்­றிய ஆச்­ச­ரி­ய­மான விஷ­யங்­களை பற்றி கேட்­ட­றி­வ­தும். அதி­லும் சம்­பந்­தப்­பட்ட சினிமா நட்­சத்­தி­ரங்­களே பகிர்ந்து கொள்­வது கூடு­தல் சுவா­ரஸ்­யம். அப்­ப­டி­யொரு சுவா­ரஸ்ய அனு­ப­வத்தை ரசி­கர்­க­ளுக்கு வழங்­கும் நிகழ்ச்­சி­தான் புது யுகம் டிவி­யில் ஞாயி­று­தோ­றும் காலை ஒளி­ப­ரப்­பாகி வரும் ‘நட்­சத்­திர ஜன்­னல்’ நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்­சி­யில் இதற்­கு­முன் சிம்பு, ஆர்யா, ஆரி, நகுல், விஜய் சேது­பதி, இயக்­கு­னர்­கள் ஹரி, பொன்­ராம் மற்­றும் பல­ரும் பங்­கு­பெற்று தங்­கள் திரை அனு­ப­வங்­களை  கல­க­லப்­பாக பகிர்ந்­துள்­ள­னர்.

பிர­பல தொகுப்­பா­ளர்– நடிகை ப்ரியா மகா­லட்­சுமி இந்த நிகழ்ச்­சியை தொகுத்து வழங்­கு­கி­றார்.