அன்­றைய படங்­கள்!

பதிவு செய்த நாள் : 15 மே 2019

புது யுகத்­தில் சனிக்­கி­ழ­மை­க­ளில் காலை 9 மணிக்­கும், மறு ஒளி­ப­ரப்­பாக இரவு 10.30 மணிக்­கும் ஒளி­ப­ரப்­பா­கி­றது ‘என்­றென்­றும் இனி­யவை’.

இன்று பல பாடல்­களை கேட்­டா­லும் உள்­ளத்­தில் நிலைக்­கக்­கூ­டிய முத்­தான பாடல்­கள் என்­றால் அன்­றைய காலத்­தில் வெளி­யான பழைய பாடல்­க­ளா­கத்­தான் இருக்­கும். இந்த பாடல்­களை இன்­ற­ள­வும் நின்று கேட்டு ரசித்து விட்டு போகக்­கூ­டிய ரசி­கர்­கள் நிறைய பேர் இருக்­கி­றார்­கள்.

அப்­ப­டிப்­பட்ட ரசி­கர்­க­ளின் உள்­ளங்­களை எல்­லாம் கவ­ரும் வித­மாக புது யுகம் இந்த நிகழ்ச்­சியை வழங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது.  தமிழ் சினிமா ஜாம்­ப­வான்­க­ளான எம்.கே.தியா­க­ராஜ பாக­வ­தர், பி.யு. சின்­னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணே­சன், ஜெமினி கணே­சன் உள்­ளிட்ட பல­ரது திரைப்­ப­டங்­களி ­லிருந்­தும் இன்­றும் மக்­கள் கேட்டு ரசிக்­கக்­கூ­டிய இனி­மை­யான பாடல்­கள் இடம்­பெ­று­கின்­றன.

இந்த நிகழ்ச்­சியை சுவை­பட தொகுத்து வழங்­கு­கி­றார் நடி­கர் ‘கல்­தூண்’ ராமச்­சந்­தி­ரன்.

ஒவ்­வொரு பாடலை பற்­றி­யும் அதில் நடித்த நடி­கர்­களை பற்­றி­யும் சுவா­ரஸ்­ய­மான விஷ­யங்­கள், குறிப்­பு­க­ளு­டன் இந்த நிகழ்ச்­சியை தொகுத்து வழங்கி வரு­கி­றார்.

நடி­கர்­க­ளுக்கு மட்­டும் என்­றில்­லா­மல், கதா­நா­ய­கி­க­ளின் தனித்­து­வம் பெற்ற பாடல்­க­ளும் சுவா­ரஸ்­ய­மான குறிப்­பு­க­ளு­டன் தொகுத்து

வழங்­கப்­ப­டு­கின்­றன.