அசோக் கைது!

பதிவு செய்த நாள் : 15 மே 2019

ராஜ் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ‘மண்­வா­சனை’ ஒளி­ப­ரப்­பா­கி­றது.

மருத்­து­வ­ம­னை­யில் இருந்த கங்­காவை ஸ்ரீவத்­சவ் கடத்தி செல்ல, ஜெக­தீஷ் அவளை தேடி அலை­கி­றான். இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் குடி­யே­று­வது என்று அசோக் தீர்­மா­னிக்க, பிரேம் கிஷோ­ரும், நந்­து­வும் அவ­னு­டன் செல்ல முடி­வெ­டுக்­கின்­ற­னர். சுபத்ரா இங்­கேயே தங்­கி­விட முடி­வெ­டுக்­கி­றாள்.

அர­விந்த் சட்­ட­வி­ரோத தொழி­லில் ஈடு­ப­டு­வதை வினய் எச்­ச­ரிக்­கி­றான். அர­விந்­தின் தொழில் தொடர்­பான ஆவ­ணங்­களை பாட்­டி­யி­டம் கொடுக்­கும் ஆனந்தி, அவ­னது சட்­ட­வி­ரோத தொழில் குறித்து சிவ் கூறி­ய­தாக விளக்கு­ கிறாள்.

இந்­நி­லை­யில், காணா­மல் போன பழங்­கால சிலை­களை கஜேந்­திர சிங் கண்­டு­பி­டிக்­கி­றார். அவற்றை திரு­டி­ய­தாக அர­விந்தை போலீ­சார் சந்­தே­கிக்­கின்­ற­னர். இத­னி­டையே, கங்கா கடத்தி வைக்­கப்­பட்­டுள்ள இடம் குறித்து ஜெக­தீ­சுக்கு ஷோபா தக­வல் கொடுக்­கி­றாள்.

அசோக்கை போலீஸ் கைது செய்­கி­றது. போலீ­சா­ரி­டம் உண்­மையை கூறி சர­ண­டைந்து, அசோக்கை விடு­விக்க அர­விந்த் திட்­ட­மி­டு­கி­றான்.