இணை­ய­தள குற்ற பின்­னணி!

பதிவு செய்த நாள் : 15 மே 2019

புது யுகத்­தில் சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் இரவு 10 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கிக்­கொண்­டி­ருக்­கும் நிகழ்ச்சி ‘கறுப்பு வெள்ளை.’ சவுதா மணி தொகுத்து வழங்­கு­கி­றார்.

எஸ்.எம்.எஸ்... எம்.எம்.எஸ்...  பேஸ்­புக் ஸ்டேட்­டஸ் என்று வளர்ந்து, தற்­போது 'வாட்ஸ்­ஆப்...’ என்­கிற பெய­ரில் நொடி­க­ளில் புகைப்­ப­டங்­க­ளு­டன் தக­வல்­கள் தாண்­ட­வ­மா­டிக்­கொண்­டி­ருக்­கும் காலம் இது. இந்த  மின்­னல்­வேக  தொழில்­நுட்ப  வளர்ச்­சியை  குற்­றங்­க­ளுக்­கான ஆயு­த­மாக மாறிக்­கொண்டு வரு­வ­து­தான் கொடுமை! உல­கின்  ஏதோ  ஒரு  மூலை­யில்  உட்­கார்ந்து கொண்டு,  ஒரே  ஒரு 'வாட்ஸ்­ஆப்’  செய்தி  மூல­மாக,  ஒரு குடும்­பத்­தையே நிலை­கு­லை­யச் செய்­யும்  வக்­கி­ரங்­கள்  அதி­க­ரித்­து­விட்­டன.  

 தமி­ழ­கத்­தில் கடந்த ஒரு ஆண்­டில் மட்­டும் இணை­ய­தள குற்­றங்­கள் தொடர்­பாக சுமார் 10 ஆயி­ரம் புகார்­கள் பெறப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தெரி­விக்­கி­றது. ஆத்­தி­ரத்­தில் தொடங்கி ஆதா­யத்­துக்­காக வரை நடத்­தப்­ப­டும் இது­போன்ற குற்­றங்­க­ளை­யும், அதன் பின்­ன­ணி­க­ளில் நடக்­கும் அரா­ஜ­கங்­க­ளை­யும் அல­சு­கி­றது இந்­நி­கழ்ச்சி.

இப்­ப­டி­யுமா நடக்­கும் என்று விக்­கித்து நிற்க வைக்­கும் – கற்­ப­னைக்­கும் எட்­டாத பல குற்­றச் சம்­ப­வங்­களை கண் முன்னே நிறுத்­து­வ­தோடு,  உள­வி­யல் நிபு­ணர்­கள்,  தொழில்­நுட்ப வல்­லு­னர்­கள், வழக்­க­றி­ஞர்­கள்,  மன­நல மருத்­து­வர்­கள், சமூ­க­வி­யல் அறி­ஞர்­க­ளு­டன் விவா­தித்து உரிய படிப்­பி­னை­யை­யும், விழிப்­பு­ணர்­வை­யும் நேயர்­க­ளுக்கு அளிப்­பதே இந்த நிகழ்ச்­சி­யின் தலை­யாய நோக்­கம் ஆகும்.