விரதமிருக்க போறீங்களா...?

பதிவு செய்த நாள் : 14 மே 2019

வைகாசி விசாக விரதமிருப்பவர்கள் காலை 6 மணிக்குள் நீராடவேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம். பசி தாங்காதவர்கள் காலை, இரவில் பால், பழம் சாப்பிடலாம். பூஜையில் விளக்கேற்றி முருகனுக்குரிய 'ஓம் சரவணபவ,’'ஓம் முருகா' ஆகிய மந்திரங்களை 108 முறை ஜபிக்க வேண்டும். திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஒன்றைப் பாராயணம் செய்யலாம். மாலையில் முருகன் கோயிலில் விளக்கேற்றலாம்.

முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகநாமத்தைச் சொல்ல மற்றவர்கள் 'அரோகரா' கோஷமிடலாம். மலைக்கோயில்களில் மலையை வலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். அறிவும், அழகும் உள்ள குழந்தைகள் பிறக்கும்.