எந்த நஷ்டமும் இல்லை! – மதிஒளி

பதிவு செய்த நாள் : 14 மே 2019


இது அர்த்தமுள்ள கோபமா? அனாவசியமான கோபமா? ஏன் நாம் இதை ஆராய வேண்டும்? ஆராயத்தான் வேண்டும் என்று சொற்பொழிவாளர் சொல்கிறார்.

அதே வகுப்பில் இன்னொரு மாணவன். அவனை அருகிலழைத்து,

அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து ‘‘பரவாயில்லையே! போன தடவை நீ கணக்கில் நூற்றுக்குப் பத்து மார்க்குகள்தானே வாங்கினாய்? இப்போது இருபது மார்க் வாங்கி விட்டாயே! இப்படியே நன்றாக முயற்சி செய்து வருகின்ற தேர்வுகளில் நீ நிறைய மார்க்குகள் வாங்க வேண்டும்’’ என்று அவனை ஊக்கப்படுத்தியனுப்புகிறார் ஆசிரியர்.

காரணத்தை புரிந்து கொண்டால் நமது கண்கள் கலங்கும். இறைவன் நமக்களிக்கும் கஷ்டங்களும் இதை போன்றவைதான். இன்னும் நாம் அதிகமாக கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக இந்த கஷ்டத்தை இறைவன் நமக்கு கொடுப்பதில்லை. இன்னும் நாம் நன்றாக முன்னேற வேண்டும், இறைவனை எப்பொழுதும் மறக்காமலிருக்கும் இனிய பக்தியுணர்வை

நாம் இயல்பாகவே பெற வேண்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பு, ஆசை எல்லாம்.

தண்டிப்பதற்கும், கண்டிப்பதற்கும் அவன் எப்போதுமே

விரும்பாதபோது, நாம் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு அவனை காரணமாக்குவது எந்த வகையில் நியாயம்? அன்பே வடிவானவன் அவன். அளவற்ற அவன் அருளே பொருளானது அவனது செயல்.

மருத்துவமனையில் ஒருவர் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார். நோயில் தீவிரம் அவ்வளவு. குணடைந்த பின்பு மருத்துவருக்கு அன்பளிப்பாகப் பழமும், பணமும் காணிக்கையாக்கி மனம் மிகவும் மகிழ்கிறார். என் உடலை அறுத்துவிட்டாயே என்று அவரிடம் கோபிப்பதில்லை.

இதனையே தம்மிடம் தணியாது நிறைந்த அனுபவமாக, குலேசகர ஆழ்வாரும் கூறுகிறார்.

‘‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாறாத காதல் நோயாளன் போல் மீளாத் துயர்தரினும் அதில் உன் அருளையே கண்டு மகிழ்வேன்’’ என்கிறார்.

கஷ்டத்தை கொடுப்பவனும் கடவுள்தான். அதன் காரணத்தை அறிந்தவனும் கடவுள்தான். அதை முற்றும் நீக்க வேண்டியவனும் கடவுள்தான். அப்படியே நீக்கி விடுபவனும் கடவுள்தான். இஷ்டப்படுவன் அவன்.  அந்த கஷ்டத்தை பக்தியுடன் நாம் ஏற்றுக் கொள்வதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை.