கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 179

பதிவு செய்த நாள் : 13 மே 2019


எஸ்.வி. சுப்பையாவின் உதட்டசைப்பில் சில பாடல்கள்

நடி­கர் எஸ்.வி.சுப்­பையா தமிழ் சினி­மா­ விற்கு வரப்­பி­ர­சா­த­மாக கிடைத்த ஒரு நடி­கர். கதா­நா­ய­க­னாக 270 படங்­க­ளுக்கு மேல் நடித்த சிவாஜி கணே­சன்,  அவ­ரு­டைய நடிப்­பாற்­ற­லின் கார­ண­மாக ‘நடி­கர் தில­கம்’ என்ற பட்­டம் பெற்­ற­வர்.  சிவா­ஜி­யைப் போன்ற நட்­சத்­திர அந்­தஸ்தை எஸ்.வி.சுப்­பையா பெற­வில்லை என்­றா­லும், தனி முத்­தி­ரைக் கொண்ட சிறந்த நடி­கர் என்று பெயர் எடுத்­த­தால், சுப்­பை­யா­வும் ஒரு நடி­கர் தில­கம்­தான். சிவா­ஜி­யு­டன் பல படங்­க­ளில் குணச்­சித்­திர வேடங்­க­ளில் நடித்து, தனிப்­பு­கழ் பெற்­ற­வர் எஸ்.வி.சுப்­பையா.

சிவா­ஜி­யின் ஆரம்­ப­கால படங்­க­ளில் முக்­கி­ய­மா­னது, ‘மங்­கை­யர் தில­கம்’. இளம் கதா­நா­ய­கி­யான பத்­மினி இந்­தப் படத்­தில் நடுத்­தர வயது கொண்­ட­வ­ராக நடித்­தார். பத்­மி­னி­யின் கண­வ­ரா­க­வும் சிவா­ஜிக்கு அண்­ண­னா­க­வும் ‘மங்­கை­யர் தில­க’த்­தில் நடித்­த­வர் எஸ்.வி.சுப்­பையா.  அண்ணி மீது அபா­ர­மான பாசம் கொண்­ட­வ­ராக சிவாஜி அரு­மை­யாக நடித்த ‘மங்­கை­யர் தில­க’த்­தில், அண்­ணன் கரு­ணா­க­ர­னாக சுப்­பையா நடித்­தார். ‘‘அண்­ண­னாக நடித்த சுப்­பையா தமது உயிர்த்­து­டிப்­பான நடிப்­பால் ரசி­கர்­க­ளைக் கவர்ந்­தார்,’’ என்ற எழு­தி­னார் ஒரு விமர்­ச­கர்.

சிவா­ஜி­யின் அண்­ண­னாக நடித்­துப் புகழ் பெற்ற சுப்­பையா, ‘நானே ராஜா’ படத்­தில் சிவா­ஜி­யின் தம்­பி­யாக நடித்­தார்!  அது­வும் வில்­லன் வேடம். படம் தோல்வி அடைந்­தா­லும், வேடப்­பொ­ருத்­தம் பற்றி எந்­தக் கேள்­வி­யும் எழா­த­வாறு நடித்­தது, சுப்­பை­யா­வின் திற­மைக்கு சான்­றாக விளங்­கி­யது.

சுப்­பையா நாடக உல­கத்­தில் பண்­பட்டு வளர்ந்­த­வர். செங்­கோட்­டை­யில் பிறந்த சுப்­பையா,  பதி­னோ­றா­வது வய­தில் செங்­கோட்டை ஆனந்த சக்­தி­வேல் பர­மா­னந்த பாய்ஸ் கம்­பெ­னி­யில் சேர்ந்­தார் (1931). பிறகு, டி.கே.எஸ். நாட­கக் குழு­வில் இணைந்­தார். டி.கே.எஸ். குழு­வி­னர் வெற்­றி­க­ர­மாக மேடை­யேற்­றிய ‘சிவ­லீலா’ நாட­கத்­தில், சிவ­பெ­ரு­மா­னைக் கால்­மாறி ஆடச்­சொல்­லும் அபி­ஷேக பாண்­டி­ய­னாக சுப்­பையா நடித்­தார். நாட­கக்­கு­ழு­வில் ஏரா­ள­மான நடி­கர்­கள் இருந்­த­தால், சுப்­பை­யா­வுக்­குப் பெரிய வேடங்­கள் கொடுக்க முடி­ய­வில்லை என்­கி­றார் டி.கே. சண்­மு­கம். இந்த நிலை­யி­லும், சுப்­பை­யா­வின் நடிப்­புத் திறமை வெளிப்­ப­டா­மல் இல்லை. மாதக்­க­ணக்­கில் ‘மகா­பா­ரத’ நாட­கம் நடந்­த­போது, கர்­ண­னாக நடித்த சுப்­பையா எல்­லோ­ரின் கவ­னத்­தை­யும் கவர்ந்­தார். ‘‘குந்­தி­யும் கர்­ண­னும் சந்­திக்­கும் காட்­சி­யில், கர்­ண­னாக சுப்­பையா மிக உருக்­க­மாக நடித்­தார். சபை­யோரை மட்­டு­மல்ல, உள்­ளி­ருந்த எங்­க­ளை­யெல்­லாம்­கூ­டக் கண்­க­லங்க வைத்­தார்,’’  என்று கூறி, நடி­கர்­க­ளையே அசத்­தும் நடிப்­புக் கலை­ஞ­ரான எஸ்.வி.சுப்­பை­யாவை ‘அவ்வை’ டி.கே.சண்­மு­கம் அடை­யா­ளம் காட்­டி­யி­ருக்­கி­றார்.

‘விஜ­ய­லட்­சுமி’ (1946) படத்­தில் திரைப்­பி­ர­வே­சம் செய்த சுப்­பையா, ‘ராஜ­கு­மா­ரி’­யில் தலை­யாட்­டிப் பொம்­மை­யாக விளங்­கும் மன்­ன­னாக நடித்­தார். ‘அபி­மன்­யு’­வில் சகு­னி­யா­கக் கவ­னத்­தைக் கவர்ந்­தார். ‘மாயா­வ­தி’­யில், அவ­லட்­சண வடி­வம் கொண்டு, கதா­நா­ய­கி­யைக் காத­லிக்­கும் குணச்­சித்­தி­ரம் அமைந்­தது. மாடர்ன் தியேட்­டர்­சுக்­காக கே.ராம்­நாத் இயக்­கிய ‘சுகம் எங்கே’ படத்­தில், வில்­லன் வீரப்­பா­விற்கு உத­வி­யாக சுப்­பையா செய்­யும் கய­மைத்­த­னங்­க­ளில் ஒரு தனி முத்­திரை இருந்­தது. கழுத்தை ஒரு பக்­க­மாக முறித்து முறித்து அவர் செய்த மேன­ரி­சம் சிறப்­பாக அமைந்­தது.

இப்­படி வளர்ந்து கொண்­டி­ருந்த சுப்­பை­யா­வின் திரை உலக அத்­தி­யா­யம் எத்­த­கைய வர­வேற்­பைப் பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது என்­ப­தற்கு, ‘வள்­ளி­யின் செல்­வன்’ (1955) எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­கி­றது. கொத்­த­மங்­க­லம் சுப்பு திரைக்­கதை, வச­னம் எழுதி இயக்கி, ஜெமினி ஸ்டூடி­யோ­வில் எடுத்த இந்­தப் படத்­தில் சுப்­பை­யா­வின் நடிப்பு அமோ­க­மாக அமைந்­தது. இந்­தப் படத்­தில் நடித்­த­வர்­க­ளைப் பற்­றி­யெல்­லாம் குறிப்­பிட்டு விட்டு அன்­றைய குமு­தம் இதழ் தன்­னு­டைய விமர்­ச­னத்­தில் இப்­ப­டிக் கூறி­யது -- ‘‘இந்­தப் படத்­தின் நடி­கர் வரி­சை­யில் முதல் இடம் பெறு­ப­வர் மேற்­சொன்­ன­வர்­க­ளில் யாரும் இல்லை. அந்த இடத்­திற்கு உரி­ய­வர் எஸ்.வி.சுப்­பையா. அவ­ரு­டைய நடிப்பு உன்­ன­த­மான ரகத்தை சேர்ந்­த­தாக இருக்­கி­றது’’.  

தன்­னு­டைய மகனை எஜ­மா­ன­னுக்­குத் தத்­துக் கொடுக்­கும் போதும், எஜ­மா­னிக்கே பிள்ளை பிறந்த பிறகு அந்­தத் தத்­துப்­பிள்ளை மாற்­றாந்­தாய் மனப்­பான்­மைக்கு ஆளா­கும் போதும், சுப்­பையா காட்­டிய நடிப்பு இந்­தப் படத்­தில் எதார்த்­த­மா­க­வும் உன்­ன­த­மா­க­வும் விளங்­கி­யது.

இந்­தப் படத்­தில் தனக்­குப் பிடித்த காட்­சியை எஸ்.வி. சுப்­பை­யாவே ஒரு பேட்­டி­யில் விளக்­கி­னார் :  ‘‘தன்­னைத் தனி­யாக விட்­டு­விட்டு தம்­பி­யு­டன் அம்மா செல்­வ­தைப் பார்த்­துக்­கொண்டே நின்­றான் பால்­ம­னம் மாறாத அந்­தப் பால­கன். அவன் முகத்­தில் தான் எத்­தனை ஏமாற்­றம், ஏக்­கம். சோர்ந்­து­போய் நிற்­கும் அந்த சிறு­வ­னின் ஏமாற்­றத்­தைக் கண்டு, அந்த வேலைக்­கா­ர­னின் உள்­ளம் ஏன் அப்­ப­டித் துடி­யாய்த்­து­டிக்­க­வேண்­டும்? அது அவன் ஒரு­வ­னுக்­குத்­தான் தெரி­யும். உல­கத்­திற்­குத் தெரி­யாது. ஆம், தன்­ன­ல­மற்ற தியாக உணர்ச்­சி­யால்  தன் எஜ­மா­னிக்­குத் தானம் செய்த தன் குழந்­தை­யே­தான் ஏக்­கத்­து­டன் நிற்­கும் அந்­தப் பால­கன் என்ற உணர்வு எந்­தத் தந்­தைக்­குத்­தான் துக்­கத்­தைத் தராது? தன் குழந்­தையை வேலைக்­கா­ரன்  பர­ப­ரப்­பு­டன் அணைத்­துக் கொண்­டான். அதன் பிறகு ஆரம்­பம் ஆகி­றது வேதாந்த விசா­ரணை...‘நீ தனி­யா­கத்­தான் இருக்க வேண்­டும்’  என்று பால­க­னி­டம் கூறும் வேலைக்­கா­ரன், கட­வுள் அவ­னைக் காப்­பாற்­று­வார் என்­கி­றான். கட­வுள் என்­றால் யார் என்று கேட்­கி­றான் பால­கன். உன்­னி­டம் இருக்­கும் நல்ல குணங்­கள் எல்­லாம் தான் கட­வுள் என்­கி­றான் வேலைக்­கா­ரன்’’.

‘பாகப்­பி­ரி­வி­னை’­யில் சிவா­ஜி­யின் தந்­தை­யாக சுப்­பையா நடித்­தார். ‘பாவ­மன்­னிப்பு’ படத்­தில் சிவாஜி காத­லிக்­கும் தேவி­கா­வின் வளர்ப்­புத் தந்தை ஜேம்ஸ் பாத்­தி­ரத்­தைத் திறம்­படி செய்­தார். சிவா­ஜி­யின் மறக்க முடி­யாத திரைப்­ப­ட­மான ‘கப்­ப­லோட்­டிய தமி­ழன்’ படத்­தில், சுப்­பையா பாரதி வேடம் ஏற்­றார். பாரதி பாத்­தி­ரத்­தின் வாயி­லாக, மக்­க­ளின் மன­தில் அவ­ருக்கு நிரந்­த­ர­மான இடம் கிடைத்­து­விட்­டது.

ஜெமி­னி­யின் ‘வஞ்­சிக்­கோட்டை வாலி­பன்’, ஏ.வி.எம்­மின் ‘களத்­தூர் கண்­ணம்மா’, ‘நானும் ஒரு பெண்’,  ‘காக்­கும் கரங்­கள்’, ‘ராமு’ முத­லிய படங்­கள், ஸ்ரீத­ரின் ‘கலைக்­கோ­யில்’  என்று நடித்­துக்­கொண்­டி­ருந்த சுப்­பையா, ஜெய­காந்­த­னின் ‘கைவி­லங்கு’ நாவலை ‘காவல் தெய்­வம்’ (1969) என்ற பெய­ரில் தயா­ரித்­தார். இந்­தப் படத்­தில் ஆவே­சம் பொங்­கும் சாமுண்­டி­யாக சிவாஜி நடித்­தார்....அவ­ருக்கு நேர் எதிர் இயல்பு கொண்ட சாந்­தம் ததும்­பும் சிறை அதி­காரி ராக­வன் வேடத்தை ஒரு தேர்ந்த நடி­க­ரின் அனு­பவ ஆற்­ற­லு­டன் சித்­த­ரித்­தார் சுப்­பையா. கைதி­க­ளும் மனி­தர்­கள் தான், அவர்­க­ளுக்­கும் கருணை காட்­டப்­ப­ட­வேண்­டும் என்ற உண்­மையை இந்­தப் படம் வெளிப்­ப­டுத்­தி­யது. கே. பால­சந்­த­ரின் ‘அரங்­கேற்­ற’த்­தில் சுப்­பை­யா­விற்கு மறக்க முடி­யாத ராமு சாஸ்­திரி  பாத்­தி­ரம்.

சிவா­ஜி­யு­டன் சுப்­பையா நடித்த படங்­கள் பல. ‘பாது­காப்பு’ என்ற படத்­தில் சுப்­பையா ஒரு பாம்­பாட்­டி­யாக, கவு­ரவ வேடத்­தில் வந்­தார். ‘மூன்று தெய்­வங்­கள்’ படத்­தில் சிவாஜி, முத்­து­ரா­மன், நாகேஷ் ஆகிய மூன்று திரு­டர்­கள், சுப்­பையா வீட்­டில் தான் தலை­ம­றை­வாக இருக்­கி­றார்­கள். ‘பொன்­னூஞ்­ச’­லில் சிவா­ஜிக்­குத் தாய் மாமா­வா­க­வும் அவர் காத­லிக்­கும் பெண்­ணின் தகப்­ப­னா­க­வும் வரு­கி­றார் சுப்­பையா. ‘தீபம்’  படத்­தில் சிவா­ஜி­யி­டம் அட்­டென்­ட­ராக வேலை செய்­ப­வர் சுப்­பையா. அவர் மகள் சுஜா­தாவை சிவாஜி மணக்க விரும்­பு­கி­றார். ஆனால் முத­லா­ளி­யின் நடத்தை சரி­யில்லை என்று அவள் மறுத்­து­வி­டு­கி­றாள். தீப­தில்,  இடை­வேளை

வர சுப்­பை­யா­வின் பாத்­தி­ரம் வரு­கி­றது...

பின்­னர் திரைக்­க­தை­யி­லி­ருந்து காணா­மல்­போய்­வி­டு­கி­றது.

ஆனால் சிவா­ஜி­யு­ட­னான படங்­க­ளில், சிவா­ஜி­யும் சுப்­பை­யா­வும் இடம் பெறும் காட்­சி­கள் வரும்­போது, சிவா­ஜிக்­குக் குளோஸ்

அப் ஷாட் வந்­தால் சுப்­பை­யா­வுக்­கும் வரும்.  சுப்­பையா  ஏற்­கும் வேடத்­தைப் பொருத்­தும் காட்­சி­யின் தேவை­யைப் பொருத்­தும் இந்­தத் தன்மை மாற­லாம். ஆனால் சுப்­பை­யா­வுக்கு கொடுக்­கப்­ப­டும் முக்­கி­யத்­து­வம் குறை­யாது. இதை ‘நீதி’ படத்­தி­லும் பார்க்­க­லாம். சிவாஜி ஓட்­டும் லாரி சந்­திக்­கும் விபத்­தில் இறந்­து­போ­கும் நப­ர­ரின் தந்­தை­யாக சுப்­பையா வரு­கி­றார்.  படத்­தில் அவ­ரு­டைய பாத்­தி­ரத்­திற்­கும் நடிப்பு அனு­ப­வத்­திற்­கும் ஏற்ப அவ­ருக்கு முக்­கி­யத்­து­வம் தரப்­பட்­டது.

‘கப்­ப­லோட்­டிய தமி­ழ’­னில் பார­தி­யாக நடித்­த­போது, சுப்­பையா பாடு­வ­தாக சில பாடல்­கள் அமைந்ன. அவ­ருக்கு திருச்சி லோக­நா­தன் பாடி­னார். ‘என்று தணி­யும் இந்த சுதந்­திர தாகம்’, ‘தண்­ணீர் விட்டோ வளர்த்­தோம்’, ‘வெள்­ளிப் பனி­ம­லை­யின் மீது­லா­வு­வோம்’ முத­லிய பாடல்­கள் சுப்­பையா பாடு­வ­து­போல் அமைந்­தன.

கே.எஸ்.கோபா­ல­கி­ருஷ்­ண­னின் ‘ஆதி பரா­சக்­தி’­யில் தெய்­வக்­க­வி­ஞர் அபி­ராமி பட்­ட­ராக சுப்­பையா நடித்­தார். மன்­ன­னால் சித்­தி­ர­வ­தைக்கு ஆளா­கும் வேளை­யில், பட்­டர் பாடும் மிகச் சிறந்த பாடல், ‘சொல்­லடி அபி­ராமி, பதில் சொல்­லடி அபி­ராமி, வானில் சுடர் வருமோ, எனக்கு இடர் வருமோ’ என்ற பாடல். பார­தி­யாக ‘கப்­ப­லோட்­டிய தமி­ழ’­னில் பாடிய சுப்­பையா, ‘ஆதி பரா­சக்­தி’­யில் பட்­ட­ராக அசத்­தி­னார். அவ­ருக்கு டி.எம்.எஸ்.சின் குரல் கணீ­ரென்று ஒலித்­தது.

மது­சூ­தன் காலேல்­கர் என்ற பிர­பல மராட்­டிய எழுத்­தா­ள­ரு­டைய கதை­யின் அடிப்­ப­டை­யில் தாதா மிராசி இயக்­கிய ‘மூன்று தெய்­வ’த்­தில், சுப்­பையா தன் மனைவி மக்­க­ளு­டன்  பூஜை அறை­யில் சாமி படங்­க­ளுக்கு முன் ஒரு பாடல் பாடு­கி­றார். சுப்­பை­யா­விற்­காக சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன்,  ‘திருப்­பதி சென்று திரும்பி வந்­தால் ஓர் திருப்­பம் நேரு­மடா’ என்ற பாட­லைப் பாடு­வ­து­போல் காட்சி அமை­கி­றது. சிவா­ஜி­யின் நிஜ வாழ்க்­கை­யில் நடந்த  சம்­ப­வங்­க­ளைக் கண்­ண­தா­ச­னின் வரி­கள் பிர­தி­ப­லித்­தன.

ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்தே பக்­தி­மா­னான சுப்­பை­யா­விற்­குப் பின்­னா­ளில் சில பக்­திப் படங்­க­ளில் நடிக்­கும் வாய்ப்பு வந்­தது. தேவி ஸ்ரீ கரு­மா­ரி­யம்­ம­னில், டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன் குர­லில், ‘நடக்­கட்­டும் லீலை கரு­மாரி’ என்று சுப்­பையா பாடி­னார் (1974). ‘தேவி தரி­ச­னம்’ என்ற படத்­தில், சுப்­பை­யா­விற்கு ஏசு­தாஸ் பாடி­னார். பாடல் ‘சக்­தி­யில்­லா­மல் உல­கேது’ (1980).

‘பணத்­தோட்­ட’த்­தில் சுப்­பையா நல்­ல­வர்­போல் காட்சி அளிக்­கும் வில்­லன். அவர் பாத்­தி­ரம் தொடர்­பாக ஒரு சஸ்­பென்­சும் இருந்­தது. ஆனால் ‘இத­யக்­க­னி’­யில் ஒரு மகாத்­தான பாட­லில் சுப்­பையா பங்­கு­கொண்ட விதம் மறக்க முடி­யா­த­தாக அமைந்­தது. ‘தென்­ன­க­மாம் இன்­பத் திரு­நாட்­டில் மேவி­ய­தோர்’ என்று தொடங்­கும் இந்­தப் பாட­லின் விருத்­தம், ‘பிள்­ளை­யென நாளும் பேச வந்த கண்­ம­ணியே, வள்­ளலே எங்­கள் வாழ்வே, இத­யக்­கனி, எங்­கள் இத­யக்­கனி’ என்று முடி­கி­றது. இப்­ப­டிப் பாடி வரும் சுப்­பையா எம்.ஜி.ஆருக்கு மாலை சூட்­டு­கி­றார். எம்.ஜி.ஆர், நட­னப்­பெண்­கள் மற்­றும் சுப்­பையா (டி.எம்.எஸ், எஸ்.ஜானகி, சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன்) இசைப்­ப­தாக அமைந்த இந்­தப் பாட­லில், மிக­வும் டிரிம்­மாக சுப்­பையா காணப்­ப­டு­கி­றார்! அவ­ரு­டைய நடை, உடை, பாவனை மிக­வும் மிடுக்­காக இருக்­கின்­றது!

ஜெய­காந்­த­னின் ‘பிரம்­மோ­ப­தே­சம்’ சிறு கதையை ‘குருவே தெய்­வம்’ என்ற பெய­ரில், தானே தயா­ரித்து இயக்கி, நடித்­துக்­கொண்­டி­ருந்­தார் எஸ்.வி.சுப்­பையா. ஆறா­யி­ரம் அடி வளர்ந்­தி­ருந்­தது படம். ஆனால் இலக்­கி­யத் தேட­லு­டன் ஞானத்­தே­ட­லும் இருந்த சுப்­பை­யா­வின் காலம் திடீ­ரென்று 1980ல் ஜன­வரி கடை­சி­யில் முற்­றுப்­பெற்று விட்­டது. ஆனால் அவ­ரு­டைய ஆளுமை நம்­மி­டையே இன்­றும் உல­விக்­கொண்­டி­ருக்­கி­றது.

                                            (தொட­ரும்)