சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 13– 5–19

பதிவு செய்த நாள் : 13 மே 2019

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

பங்­குச் சந்­தை­கள் இறங்­கும் என்­பதை கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்பே நாம் யூகித்து இருந்­தோம்.

இத­னால்­தான் தொடர்ந்து எழுதி வந்­தோம், உங்­க­ளி­டம் இருக்­கும் பங்­கு­களை, அதா­வது லாபத்­தில் இருக்­கும் பங்­கு­களை விற்று லாபத்தை கண்­ணால் பாருங்­கள் என்று.  

அப்­படி செய்­த­வ­ர­கள் அதிர்ஷ்­ட­சா­லி­கள். கார­ணம் அதன் பிறகு சந்­தை­கள் பலத்த அடி வாங்கி இருக்­கின்­றன.

நாம் சந்தை இறங்க கார­ணங்­கள் என்று யோசித்­தது - சந்­தை­யில் லாபம் பார்ப்­ப­வர்­கள் அதி­கம் இருந்­தது, கச்சா எண்­ணெய் விலை கூடிக்­கொண்டே சென்­றது, எல­க்ஷன் முடி­வு­கள் எப்­படி இருக்­கும் என்ற ஒரு நிலை­யற்ற தன்மை.  

இவை­களை வைத்து தான் நாம் கூறி­யி­ருந்­தோம் விட்டு வெளி­யே­றுங்­கள் மறு­படி சந்தை கீழே இறங்­கும் போது முத­லீடு செய்ய ஆரம்­பி­யுங்­கள் என்று.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை  95   புள்­ளி­கள் குறைந்து 37462  புள்­ளி­க­ளு­டன் முடி­வ­டைந்­தது. தேசிய பங்­குச் சந்தை  23 புள்­ளி­கள் குறைந்து 11278   புள்­ளி­க­ளு­டன் முடி­வ­டைந்­தது. சந்­தை­கள் சென்ற வாரத்தை விட சுமார் 1500 புள்­ளி­கள் குறைந்து முடி­வ­டைந்­தன.

சந்­தை­கள் இவ்­வ­ளவு குறைய முக்­கி­ய­மான கார­ணம் என்ன?

சந்­தை­கள் இவ்­வ­ளவு குறைய கார­ணம் அமெ­ரிக்­கா­விற்­கும், சீனா­வுக்­கும் வர்த்­தக போரை தொடர்ந்த பேச்­சு­வார்த்­தை­கள் ஒரு தோல்­வி­யுற்ற நிலையை தழு­வி­யது முக்­கி­ய­மான கார­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது.  இந்த வாரம் கீழே விழ இது­தான் கார­ண­மாக இருந்­தது.

பிப்­ர­வரி மாதத்­திற்கு ஒரு வாரம் தொடர்ந்து விழு­வது இது தான் முதல் முறை. தொடர்ந்து 8 பங்கு சந்தை நாட்­க­ளாக சந்தை விழுந்து கொண்­டி­ருக்­கி­றது. இண்­டஸ்­டி­ரி­யல் அவுட் புட் கடந்த 21 மாத குறை­வான அள­வில் இருப்­பது ஒரு கவ­லை­யான விஷ­யம்.

இதை வாங்­கு­வ­தற்கு ஒரு சந்­தர்ப்­ப­மாக பார்க்­க­லாம். அல்­லது தேர்­தல் முடி­வு­கள் வரும் வரை காத்­தி­ருக்­க­லாம்

சீனப் பொருட்­க­ளுக்கு அமெ­ரிக்க கொடுத்த அடி

அமெ­ரிக்கா 200 பில்­லி­யன் மதிப்­புள்ள சீன இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு வரிச் சுமையை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் சீனப் பொருட்­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வில் விலை கூடு­த­லாக இருக்­கும்.

 விற்­பனை குறை­யும். இத­னால் அமெ­ரிக்க பொருட்­க­ளுக்கு சீனா­வில் வரி­வி­திப்­பபி சீன அர­சாங்­கம் செய்ய ஆரம்­பிக்­கும். வர்த்­தக போர் தொடங்கி விட்­டது மறு­படி.

ஸ்டேட் பாங்க்

ஸ்டேட் பாங்க் காலாண்டு முடி­வு­கள் லாபத்­தில் வர ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. கடந்த ஆண்டு இதே காலத்­தில் 7718 கோடி ரூபாய் நஷ்­டத்­தில் இருந்த ஸ்டேட் பாங்க் இந்த ஆண்டு அதே காலாண்­டில் 838 கோடி ரூபாய் லாபத்­து­டன் இருக்­கி­றது. வாரா கடன் கள் வங்­கி­க­ளின் லாபத்தை தின்று கொண்­டி­ருப்­பது குறிப்­பி­ட­தக்­கது.

என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்?

பிரி­கேட் எண்­டர்­பி­ரை­சஸ், டைட்­டான, வி.ஐ.பி. இண்­டஸ்­டிரி ஆகிய கம்­பெ­னி­கள் உங்­கள் போர்ட்­போ­லி­யோ­வில் இருக்­க­லாம்.

ரிலை­யன்ஸ் ஏன் இவ்­வ­ளவு குறை­கி­றது?

ஜியோ­வில் செய்த முத­லீடு அதி­கம். ஆனால் வரு­மா­னம் குறைவு என்ற வகை­யில் அந்த கம்­பெ­னி­யின் விலை குறைந்து வரு­கி­றது. ஆனால் செயல்­பா­டு­கள் நன்­றாக இருக்­கி­றது. இன்­னும் பல புதிய திட்­டங்­கள் வைத்­தி­ருக்­கி­றார்­கள். ஆகை­யால் தொடர்ந்து இந்த கம்­பெ­னி­யில் முத­லீடு செய்து வர­லாம்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

அடுத்த வாரம் சந்­தை­கள் ஒரு நிலை­யற்ற தன்­மை­யா­கவே இருப்­ப­தற்கு வாய்ப்­பு­கள் அதி­கம்.  சந்­தை­கள் தேர்­தல் முடி­வு­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கி­றது. முடி­வு­கள் வர அதிக நாட்­கள் காத்­தி­ருக்க தேவை­யில்லை. மே மாதம் 23ஆம் தேதி தேர்­தல் முடிவு வெளி­யாக இருக்­கின்­றது.  அது­வரை சந்­தை­கள் ஒரு நிலை­யற்ற தன்­மையை ஆகவே இருக்­கும்.

சந்­தை­கள் குறை­யும் போது உங்­கள் முத­லீ­டு­களை தொடர்ந்து செய்து வாருங்­கள்.  அதுவே நன்மை பயக்­கும்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com