ஸ்டார்ட் அப்: மை லோன் கேர் – ஆன்­லைன் மார்க்­கெட் ப்ளேஸ்

பதிவு செய்த நாள் : 13 மே 2019

ஷாப்­பிங் மால்­க­ளின் முக்­கிய அம்­சமே விண்டோ ஷாப்­பிங் தான். அதா­வது மாலுக்கு செல்­வோம், அங்­கி­ருக்­கும் எல்­லா­வற்­றை­யும் பார்க்­க­லாம், வாங்க வேண்­டும் என்ற கட்­டா­யம் இல்லை. தரம் எங்கு நன்­றாக இருக்­கி­றது, விலை எங்கு குறை­வாக இருக்­கி­றது, டிஸ்­க­வுண்ட் யார் அதி­கம் தரு­கி­றார்­கள் என்று பார்த்து வாங்­க­லாம்.

அது போல உங்­க­ளுக்கு கடன்­கள் வாங்­கும் போது ஒரு வங்­கி­யில் அல்­லது நிதி நிறு­வ­னத்­தி­டம் போய் விழுக வேண்­டாம். யார் குறை­வான வட்­டி­யில் தரு­கி­றார்­கள் என்று கம்­பேர் செய்து பார்த்து விட்டு வாங்க பல இணை­ய­த­ளங்­கள் வந்து விட்­டன. அதில் முக்­கி­ய­மான இணைய தளங்­க­ளில் ஒன்று “மை லோன் கேர்” (myloandcare.in).

மை லோன் கேர் என்ற் கம்­பெனி இந்­தி­யா­வின் பெரிய ஆன்­லைன் மார்க்­கெட் பிளேஸ் ஆகும்.

இந்த இணை­ய­த­ளத்­தில் உங்­க­ளுக்கு என்ன லோன் தேவை என்று கூறி­விட்­டால உங்­கள் தகு­திக்கு ஏற்ப எந்த வங்கி அல்­லது நிதி நிறு­வ­னம் உங்­க­ளுக்கு ஒத்து வரும் என்று கூறி அதி­லி­ருந்து கடன் கள் வாங்க உதவி செய்­கி­றார்­கள்.

வீட்­டுக கடன், வீட்டு அட­மா­னத்­தின் மீது கடன், வாக­னக் கடன், கோல்டு லோன், பிசி­னஸ் லோன், கிரி­டிட் கார்டு, பர்­ச­னல் லோன் ஆகி­ய­வை­கள் வாங்­கு­வ­தற்கு இந்த இணை­ய­த­ளம் உதவி செய்­கி­றது.

இவர்­க­ளி­டம் 20 லட்­சம் ரிஜிஸ்­டிர்ட் உப­யோ­கிப்­பா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். 25 வங்­கி­க­ளி­டம் பார்ட்­னர் பேங்க் அரேஞ்ச்­மெண்ட் வைத்­துள்­ளார்­கள். ஆன்­லைன் மூல­மாக தான் விண்­ண­பிக்க வேண்­டும். இவர்­கள் இந்­தி­யா­வில் 1100 ஊர்­க­ளில் உங்­க­ளுக்கு கடன்­கள் கிடைக்க வழி வகை செய்­கி­றார்­கள். நீங்­கள் ஆன்­லை­னில் அப்ளை செய்த பிறகு உங்­க­ளுக்கு கடன் கிடைக்­கும் என்­றால் அவர்­கள் கம்­பெ­னி­யி­லி­ருந்து உங்­களை கூப்­பிட்டு வேறு தேவை­யான டாக்­கு­மெண்ட்­களை கேட்­பார்­கள்.

இது­வரை 30,000 பேருக்கு கடன் கள் வாங்க உத­வி­யுள்­ளார்­கள்.

உங்­க­ளுக்கு மேலே கண்ட லோன் தேவை இருக்­கும் பட்­சத்­தில், இவர்­க­ளின் இணை­ய­த­ளத்­தில் சென்று உங்­க­ளின் விப­ரங்­களை பதிவு செய்ய வேண்­டும். நீங்­கள் கடன் வாங்க தகு­தி­யா­ன­வரா என்று பார்ப்­பார்­கள். அப்­படி தகுதி உங்­க­ளுக்கு இருக்­கும் பட்­சத்­தில் அவர்­கள் பார்­ட­னர் வங்­கி­கள் மூல­மாக கடன் பெற்று தர ஏற்­பாடு செய்­வார்­கள்.

இவர்­க­ளு­டைய இணை­ய­த­ளம் www.myloancare.in