ஏற்­று­மதி உல­கம்: இன்கோ டேர்ம்ஸ் 2010

பதிவு செய்த நாள் : 13 மே 2019

சரக்­கு­களை எடுத்­துச் செல்­லும் போது யார் யாருக்கு என்­னென்ன பொறுப்­பு­கள் என்­பதை வரை­ய­றுக்­கும் டாக்­கு­மெண்ட் இன்கோ டேர்ம்ஸ் விதி­கள் தான். இது 2010ம் வரு­டம் உல­க­ள­வில் திருத்­தப்­பட்ட புதிய விதி­கள் வெளி­வந்­தது. இது உலக அள­வில் தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. முன்பு 13 இன்கோ டேர்ம்ஸ் இருந்­தது. தற்­போது 11 இருக்­கி­றது. அவை:

EXW Ex Works

FCA Free Carrier

CPT Carriage Paid To

CIP Carriage And Insurance Paid To

DAT Delivered At Terminal

DAP Delivered At Place

DDP Delivered Duty Paid

FAS Free Alongside Ship

FOB Free On Board

CFR Cost and Freight

CIF Cost, Insurance and Freight

இறக்­கு­மதி, ஏற்­று­மதி கிளி­ய­ரன்­ஸில் யார் யாருக்கு என்­னென்ன பொறுப்­பு­கள் இருக்­கி­றது, சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளில் யார் யாருக்கு என்­னென்ன ரிஸ்க்­கு­கள் இருக்­கி­றது, என்­னென்ன செல­வு­கள் யாரின் பொறுப்பு சேரும் என்­பதை விரி­வாக எடுத்­துக் கூறும் டாக்­கு­மெண்ட் இன்­கோ­டெர்ம்ஸ் 2010 ஆகும். ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் இதை கட்­டா­யம் படித்து தெரிந்து வைத்­துக் கொள்­வது அவ­சி­ய­மா­கும்.

இது 2020ம் ஆண்டு மறு­படி மாற்­றப்­பட உள்­ளது.

விவ­சாய பொருட்­க­ளின் ஏற்­று­மதி                                                  

இந்­தி­யா­வின் விவ­சாய மற்­றும்  விவ­சா­யம் சம்­பந்­தப்­பட்ட பதப்­ப­டுத்­தப்­பட்ட பொருள்­க­ளின் ஏற்­று­மதி கடந்த ஆண்டு 7 சத­வீ­தம் கூடி­யுள்­ளது. பால் மற்­றும் பால் சம்­பந்­தப்­பட்ட பொருட்­கள்,  பருப்பு வகை­கள்­ஏற்­று­மதி ஏற்­று­மதி இரட்டை சத­வீ­தத்­தில் இருக்­கி­றது.  அதா­வது 10 சத­வீ­தத்­திற்­கும் மேலாக இருக்­கி­றது.  அதே சம­யத்­தில் கோதுமை மற்­றும் பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­மதி பெரிய அளவு உயர்வு அடைய வில்லை 2018 19 ஆம் வரு­டத்­தில்  ஒரு லட்­சத்து 28 ஆயி­ரம் கோடி­யாக இருக்­கி­றது.  இந்­தி­யா­வில் பால் உற்­பத்தி கூடி வரு­வ­தால் அது சம்­பந்­தப்­பட்ட பொருட்­கள் ஏற்­று­மதி கூடி வரு­கி­றது.  கடந்த ஆண்டு பால் பொருட்­கள் ஏற்­று­மதி  72 சத­வீ­தம் கூடி 3376 கோடி ரூபா­யாக இருக்­கி­றது.  பாசு­மதி அரி­சியை ஏற்­று­மதி 32 ஆயி­ரத்து 806 கோடி ரூபாய் ஆக இருக்­கி­றது. பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­மதி 20903 கோடி  ரூபா­யாக இருக்­கி­றது.  பதப்­ப­டுத்­தப்­பட்ட மாமி­சம் 25 ஆயி­ரத்து 091 கோடி ரூபாய் ஆக இருக்­கி­றது.  கோழி சார்ந்த பொருட்­க­ளின் ஏற்­று­மதி 687 கோடி ரூபா­யாக இருக்­கி­றது.

கனெக்ட் 2  இந்­தியா

கனெக்ட் 2  இந்­தியா என்ற இனைய தளம் இந்­தி­யா­வில் உள்ள ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளை­யும் வெளி­நாட்­டில் உள்ள இறக்­கு­ம­தி­யா­ளர்­க­ளை­யும் இணைக்­கி­றது. குறிப்­பாக சிறிய ஏற்­று­ம­தி­யா­ளர்­களை ஊக்­கு­விக்க ஏற்­ப­டுத்­தப்­பட்ட இனைய தளம் இது. சென்று பாருங்­கள் உங்­கள் வாழ்க்­கை­யில் ஒரு மலர்ச்சி ஏற்­பட உத­வும். www.connect2india.com

இது போல பவர் 2 எஸ் எம் ஈ  என்ற இனைய தள­மும் எஸ் எம் ஈ கம்­பெனி கள் தங்­கள் பொருட்­களை விற்க உத­வு­கி­றது. சென்று பாருங்­கள். www.power2sme.com

கேள்வி

ஏற்­று­மதி எப்­போ­தும் எல்.சி. மூலம் செய்­வது எப்­போ­தும்  நல்­லதா? இல்லை வங்கி கலெ­க்ஷன்­மூ­ல­மா­க­வும் செய்­ய­லாமா? இல்லை டைரக்ட் டாக்­கு­மென்­டாக செய்­வது நல்­லதா?

பதில்

இது பல முறை கேட்­கப்­பட்ட கேள்வி.

ஏற்­று­மதி பல வகை­யா­க­வும் செய்­ய­லாம். எல்.சி., / வங்கி கலெ­க்ஷன் / அட்­வான்ஸ் பேமண்ட் /டைரக்ட் டாக்­கு­மெண்ட் ஆகி­ய­வை­கள் மூல­மாக செய்­ய­லாம்.

எல்.சி. மூல­மாக செய்­வது மிக­வும் சிறப்­பா­னது, பாது­காப்­பா­னது. ஆனால் அதே சம­யம் எல்­லா­ச­ம­ய­மும் எல்.சி. மூல­மா­கத் தான் செய்­வேன் என்று எதிர்­பார்த்து காத்­தி­ருக்க முடி­யாது. பல­ச­ம­யங்­க­ளில் வங்கி மூல­மாக கலெ­க்ஷ­னி­லும் டாக்­கு­மெண்ட்­களை அனுப்­ப­லாம். இது போன்­று­அ­னுப்­பும் போது இ.சி.சி.ஜி., போன்ற நிறு­வ­னங்­க­ளில் அந்த ஏற்­று­ம­திக்கு கவ­ரேஜ் செய்­து­கொண்டு பின்­னர் எக்ஸ்­பீ­ரி­யன் அல்­லது டன் அண்ட் பிராட் ஸ்டீரீட் போன்ற நிறு­வ­னங்­க­ளில்­ஒ­பி­னி­யன் ரிப்­போர்ட் எடுத்­துக் கொண்டு அனுப்­பு­வது சிறந்­தது.

இரண்­டா­வது கலெ­க்ஷன் மூல­மாக செய்­யும் போது வங்­கிக் கட்­ட­ணங்­கள் குறை­வாக இருக்­கும்.ஆனால் பணம் வருமா என்ற கேள்வி குறி­கள் இருந்து கொண்டே இருக்­கும். அதற்­கா­கத்­தான்­பா­லிசி எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கி­றது

டைரக்ட் டாக்­கு­மெண்ட் நீங்­கள் அனுப்­பு­வது தவறு. அதா­வது ஏற்­று­ம­தி­யா­ளர், இறக்­கு­ம­தி­யா­ளர்­மி­க­வும் பாசக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருந்த்த்­தால் ரிசர்வ் வாங்கி விதிப்­படி யார் டைரக்ட்­டாக்­கு­மென்ட்  அனுப்ப முடி­யுமோ அவர்­கள் தான் அனுப்ப முடி­யும்.