தேர்தல் அறிக்கையில் முதன் முதலாக காற்று மாசு?

பதிவு செய்த நாள் : 11 மே 2019

இப்­போது நடை­பெ­றும் லோக்­சபா தேர்­த­லுக்கு ஒவ்­வொரு அர­சி­யல் கட்­சி­யும் தேர்­தல் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளன. இந்த தேர்­தல் அறிக்­கை­க­ளில் முதன் முத­லாக ‘காற்று மாசு­பாடு’ இடம் பெற்­றுள்­ளது. உலக அள­வில் அதிக காற்று மாசு­பாடு உள்ள 20 நக­ரங்­க­ளில் 14 நக­ரங்­கள் இந்­தி­யா­வில் உள்­ளன. இந்­தி­யா­வில் மர­ணம் ஏற்­பட உள்ள கார­ணங்­க­ளில் காற்று மாசு ஏழா­வது இடத்­தில் உள்­ளது. 2017ல் இந்­தி­யா­வில் காற்று மாசு­வி­னால் ஏற்­ப­டக்­கூ­டிய நோய்­க­ளால் 12 லட்­சத்து 40 ஆயி­ரம் பேர் இறந்­துள்­ள­னர்.

பார­திய ஜன­தா­வின் தேர்­தல் அறிக்­கை­யில் காற்று மாசுவை குறைக்க தேசிய சுத்­த­மான (மாசற்ற) காற்று திட்­டத்தை ஒரு இயக்­க­மாக நடத்­தப்­ப­டும் என்­றும், 2024ம் ஆண்­டிற்­குள் காற்று மாசு 35 சத­வி­கி­த­மாக குறைக்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது. (இந்­தி­யா­வில் 2024ம் ஆண்­டிற்­குள் காற்று மாசு 30 சத­வி­கி­த­மாக குறைக்க வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­னர்.) காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கை­யில், தேசிய சுத்­த­மான (மாசற்ற) காற்று திட்­டத்தை பலப்­ப­டுத்­து­வ­தா­க­வும், தேசிய சுகா­தார அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­ப­டும் என்று கூறி­யுள்­ளது.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கை­யில், காற்றை மாசு­ப­டுத்­தும் எரி­பொ­ருட்­க­ளின் பயன்­பாட்டை ஒழுங்­கு­ப­டுத்தி பசுமை இல்ல வாயுக்­கள் வெளி­யே­று­வதை  குறைப்­ப­தாக கூறப்­பட்­டுள்­ளது. ஆனால் இந்த தேர்­தல் அறிக்­கை­யில் காற்று மாசு பற்றி குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ( கார்­பன் டை ஆக்­சைடு, மீத்­தேன், நைட்­ரஸ் ஆக்­சைடு ஆகி­ய­வையே பசுமை இல்ல வாயுக்­கள். இந்த வாயுக்­கள் பூமியை மித­மான வெப்­பத்­தில் வைத்­தி­ருக்க உத­வு­கின்­றன. இவையே தாவ­ரங்­க­ளும், உயி­ரி­னங்­க­ளும் தோன்ற கார­ணம். அதே நேரத்­தில் இந்த பசுமை இல்லா வாயுக்­க­ளின் அளவு அதி­க­ரித்­தால், பூமி­யின் வெப்ப நிலை அதி­க­ரிக்­கும். இத­னால் உயி­ரி­னங்­கள் அழி­யும் ஆபத்து உள்­ளது. துருவ பகு­தி­க­ளில் உள்ள பனிக்­கட்­டி­கள் உரு­கத் தொடங்­கும். பனிக்­கட்­டி­கள் உரு­கு­வ­தால், பனி­கட்டி இல்­லா­மல் போய்­வி­டும். அவை தண்­ணீ­ராக மாறி­வி­டும். இத­னால் கடல் நீர் மட்­டம் அதி­க­ரித்து, நிலப்­ப­கு­தி­கள் தண்­ணீ­ரில் மூழ்­கும் ஆபத்து உள்­ளது.)

தற்­போது உள்ள தேசிய சுத்­த­மான காற்று திட்­டம் பல்­வேறு குறை­க­ளு­டன் பல­வீ­ன­மாக உள்­ளது. ஏனெ­னில் இதற்கு சட்­டப்­ப­டி­யான அங்­கீ­கா­ரமோ, காலக்­கெ­டுவோ. இந்த திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­டுள்ள விதி­களை மீறு­ப­வர்­களை தண்­டிக்க வழி­வகை செய்­யப்­ப­ட­வில்லை.  

டில்­லி­யில் இயங்­கும் கவுன்­சில் ஆப் எனர்ஜி, என்­வி­ரோ­மென்ட் அண்ட் வாட்­டர் என்ற ஆய்வு நிறு­வ­னத்­தின் (Council on Energy, Environment and Water)  மூத்த ஆராய்ச்சி விஞ்­ஞானி ஹெம் தொலா­கியா, “தேர்­தல் அறிக்­கை­யில் காற்று மாசு பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது, ஜன­நா­யக முறை­யில் சுத்­த­மான காற்று பற்­றிய கோரிக்­கைக்கு  இதுவே முதல் படி “ என்று கூறி­னார்.

“அர­சி­யல் கட்­சி­க­ளின் தேர்­தல் அறிக்­கை­யில் சுத்­த­மான காற்று பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இது காற்று மாசு பற்றி விழிப்­பு­ணர்ச்சி ஏற்­பட்­டி­ருப்­ப­தை­யும், இந்த பிரச்­னையை தீர்க்க முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­கி­றது என்­பதை காட்­டு­கி­றது. லோக்­சபா தேர்­த­லின் போது மட்­டு­மல்­லாது, மாநில சட்­ட­சபை, உள்­ளாட்சி தேர்­தல்­க­ளின் போது, காற்று மாசு , சுத்­த­மான காற்று பற்றி அதிக அள­வில் பிர­சா­ரம் செய்­யப்­பட வேண்­டும். குறிப்­பாக காற்று மாசு­ வி­னால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­கள், நக­ரங்­க­ளில் பிர­சா­ரம் செய்ய வேண்­டும்” என்று சுமித் சர்மா கூறி­னார். இவர் டில்­லி­யில் உள்ள எனர்ஜி அண்ட் ரிசோர்ச் இன்ஷ்­டி­யூட்­டில் எர்த் சயின்ஸ் அண்ட் கிளை­மேட் சேஞ்ச் பிரி­வின் இயக்­கு­ந­ராக உள்­ளார்.  

இந்­தி­யா­வில் காற்று மாசு ஆபத்து பற்றி மக்­கள் பிர­தி­நி­தி­கள் (எம்.பி.,எம்.எல்.ஏ.,)  மத்­தி­யில் போதிய விழிப்­பு­ணர்வு இல்லை. உலக சுகா­தார நிறு­வ­னம், உலக அள­வில் 20 நக­ரங்­க­ளில் அபா­ய­க­ர­மான அள­விற்கு காற்று மாசு இருப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. இதில் 14 நக­ரங்­கள் இந்­தி­யா­வில் உள்­ளன. அவ்­வாறு அறி­விக்­கப்­பட்ட அபா­ய­க­ர­மான காற்று மாசு நக­ரங்­க­ளில் கான்­பூர், வார­ணாசி, டில்லி, ஜெய்ப்­பூர், ஸ்ரீந­கர், பாட்னா, லக்னோ ஆகிய நக­ரங்­க­ளும் அடங்­கும். இந்த நக­ரங்­க­ளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ., போன்ற மக்­கள் பிர­தி­நி­தி­கள் காற்று மாசு பற்றி மவு­ன­மா­க­வும், செயல்­ப­டா­மல் இருப்­ப­தா­க­வும் பொலி­டி­கல் லீடர்ஸ் பொசி­சன் அண்ட் ஆக்­சன் ஆன் ஏர் குவா­லிடி இன் இந்­தியா பை கிளை­மேட் டிரண்ட் (இந்­தி­யா­வில் பரு­வ­நிலை மாற்­ற­மும், காற்­றின் மாசு தன்­மை­யும் தலை­வர்­க­ளின் நிலை­யும், செயல்­பா­டும்) என்ற தலைப்­பிட்ட ஆய்­வில் கூறப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் அறிக்­கை­க­ளில் காற்று மாசு

பார­திய ஜனதா  

* தேசிய சுத்­த­மான (மாசற்ற) காற்று திட்­டம் இயக்­க­மாக நடத்­தப்­ப­டும்

* அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் காற்று மாசு அளவு 35 சத­வி­கி­த­மாக குறைக்­கப்­ப­டும். (தற்­போது 2017ம் ஆண்டை அடிப்­படை ஆண்­டாக கொண்டு வரும் 2024க்குள் காற்று மாசுவை 20 முதல் 30 சத­வி­கி­தம் குறைப்­ப­தற்கு தேசிய சுத்­த­மான காற்று திட்­டத்­தில் இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.)

* 2022ம் ஆண்­டிற்­குள் வயல்­க­ளில் அறு­வடை முடிந்து மீதம் உள்ள வைக்­கோல் போன்­ற­வை­களை எரிப்­பது முழு­மை­யாக நிறுத்­தப்­ப­டும்

காங்­கி­ரஸ்

* காற்று மாசை தேசிய சுகா­தார அவ­ச­ர­நி­லை­யாக அறி­விப்­பது. காற்று மாசு குறைக்க உட­ன­டி­யாக நட­வ­டிக்கை. தேசிய சுத்­த­மான (மாசற்ற) காற்று திட்­டத்தை பலப்­ப­டுத்­து­தல்.

* சுற்­றுச்­சூ­ழல் தர நிலை மற்­றும் விதி­மு­றை­களை உரு­வாக்­கு­வது. இதை அமல்­ப­டுத்­தும் விதத்­தில் துறை வாரி­யாக சுற்­றுச் சூழல் மாசு அளவை நிர்­ண­யிப்­பது.

* அதிக அளவு காற்று மாசு­ப­டுத்­தும் துறை­களை அடை­யா­ளம் கண்டு, ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டிய அளவு குறைப்­பது, மட்­டுப்­ப­டுத்­து­வது.

* சுயேச்­சை­யான, அதி­கா­ரம் மிக்க சுற்­றுச் சூழல் பாது­காப்பு ஆணை­யத்தை அமைப்­பது. தற்­போது சுற்­றுச் சூழலை பாது­காக்க உள்ள எல்லா அமைப்­பு­க­ளின் அதி­கா­ரத்தை மாற்­று­வது.

இவ்­வாறு பார­திய ஜனதா, காங்­கி­ரஸ் கட்­சி­க­ளின் தேர்­தல் அறிக்­கை­க­ளில் கூறப்­பட்­டுள்­ளது.

“பார­திய ஜனதா கட்­சி­யின் தேர்­தல் அறிக்­கை­யில் தேசிய சுத்­த­மான காற்று திட்­டத்தை இயக்­க­மாக மாற்­று­வது என கூறப்­பட்­டுள்­ளது.  இதன் பொருள் என்­ன­வெ­னில் இதை நிறு­வ­ன­ம­ய­மாக்கி, மத்­திய அர­சின் பொறுப்பை அதி­க­ரிப்­பது. இது போதாது. ஏனெ­னில் தேசிய சுத்­த­மான காற்று திட்­டம் பல்­வேறு வரை­மு­றை­க­ளுக்­குள் அடங்­கி­யுள்­ளது. இதில் காற்று மாசை கட்­டுப்­ப­டுத்­து­வது பற்­றிய அதி­கா­ரம் பற்றி கூறப்­ப­ட­வில்லை. இதில் நக­ரம் பற்றி மட்­டும் கூறப்­பட்­டுள்­ளது. கிரா­மப்­பு­றங்­கள், தொழிற்­சா­லை­கள் உள்ள பிராந்­தி­யங்­கள் பற்றி குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அதிக அளவு காற்று மாசு ஏற்­ப­டு­வதை கட்­டுப்­ப­டுத்­து­வது பற்­றிய எதிர்­கால திட்­டம் இல்லை. தற்­போது உள்ள தேசிய சுத்­த­மான காற்று திட்­டத்தை, இயக்­க­மாக மாற்­றும் போது பலன்­கள் ஏற்­ப­டும் என்­பது சந்­தே­கமே. பார­திய ஜன­தா­வின் தேர்­தல் அறிக்கை பகட்­டா­க­மட்­டுமே உள்­ளது” என்று டில்­லி­யில் உள்ள சென்­டர் பார் பாலிசி ரிசர்ச் (Center for Policy Research) என்ற ஆய்வு மையத்­தின் ஆய்­வா­ளர் சந்­தோஷ் ஹாரிஸ் தெரி­வித்­தார்.

“காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் காற்று மாசுவை குறைப்­பது பற்­றி­யும், அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுப்­பது பற்­றி­யும் கூறப்­பட்­டுள்­ளது சிறப்­பாக உள்­ளது. காற்று மாசுவை தேசிய சுகா­தார அவ­சர நிலை­யைக அறி­விப்­பது என்று கூறப்­பட்­டுள்­ள­தில் இருந்து, இதன் பாதிப்பை முதன் முறை­யாக அங்­கீ­க­ரித்­துள்­ள­னர். தேசிய  சுத்­த­மான காற்று திட்­டத்­தில் கூட, இவ்­வாறு குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அத்­து­டன் சுயேச்­சை­யான, அதி­கா­ரம் மிக்க சுற்­றுச் சூழல் பாது­காப்பு ஆணை­யத்தை அமைப்­பது. தற்­போது சுற்­றுச் சூழலை பாது­காக்க உள்ள எல்லா அமைப்­பு­க­ளின் அதி­கா­ரத்தை மாற்­று­வது என குறிப்­பிட்­டுள்­ள­னர். இப்­போ­துள்ள அமைப்­பு­களை விட புதிய அமைப்பு பய­னுள்­ள­தாக இருக்­குமா என்­பது சந்­தே­கமே. ஆனால் காங்­கி­ரஸ் கட்சி சுயேச்­சை­யான, அதி­கா­ர­மிக்க, வெளிப்­ப­டை­தன்­மை­யான என்று குறிப்­பிட்­டுள்­ள­னர். இதில் இருந்து காற்று மாசுவை கண்­கா­ணிக்­கும், குறைக்­கும் அமைப்­பு­களை அடிப்­ப­டை­யில் இருந்து மாற்ற வேண்­டும் என்­பதை ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர் ” என்று சந்­தோஷ் ஹாரிஸ் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் மக்­கள் மத்­தி­யில் மாசற்ற காற்று முக்­கி­யத்­து­வம் பெற­வில்லை. கடந்த மூன்று வரு­டங்­க­ளில் செய்தி, சமூக வலைத்­த­ளங்­களை ஆய்வு செய்த போது, காற்று மாசு­வி­னால் ஏற்­ப­டும் ஆபத்­து­கள், காற்­று­மாசு படு­வதை தடுப்­பது பற்­றிய விழிப்­பு­ணர்வு மிக குறை­வாக உள்­ளது தெரி­ய­வந்­தது. இது குளோ­பல் ஹெல்த் அட்­வ­கேசி என்ற உலக சுகா­தார ஆய்வு நிறு­வ­னத்­தின் ஆய்­வில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.  தெற்­கா­சியா, தென்­கி­ழக்­கா­சி­யா­வைச் சேர்ந்த 11 நாடு­க­ளின் 5 லட்­சம் செய்தி, சமூக வலைத்­த­ளங்­களை 2015 முதல் 2018 வரை ஆய்வு செய்­யப்­பட்­டது. காற்­று­மாசு, அதன் தீர்­வு­கள் பற்றி மக்­க­ளுக்கு உள்ள விழிப்­பு­ணர்வு பற்றி ஆய்வு செய்­யப்­பட்­டது.

மக்­க­ளுக்கு காற்று மாசு­வி­னால் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில்  ஏற்­ப­டும் பாதிப்­பு­கள் பற்றி தெரி­ய­வில்லை. செய்­தி­கள், சமுக வலைத்­த­ளங்­க­ளில் காற்று மாசு படு­வ­தால் உட­ன­டி­யாக ஏற்­ப­டும் இரு­மல், கண் எரிச்­சல், புற்று நோய் போன்ற பாதிப்­பு­கள் பற்­றியே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. காற்று மாசு எத­னால் ஏற்­ப­டு­கி­றது என்­பது  மக்­க­ளுக்கு அதி­கம் தெரி­ய­வில்லை. வீட்­டில் விறகு எரிப்­பது, மின் உற்­பத்தி நிறு­வ­னங்­கள், குப்­பை­களை எரிப்­பது ஆகி­ய­வை­க­ளால் காற்று மாசு படு­வ­தாக கரு­து­கின்­ற­னர். வாக­னங்­கள் வெளி­யி­டும் புகை­யால் காற்று மாசு ஏற்­ப­டு­வது பற்­றிய விழிப்­பு­ணர்வு குறை­வா­கவே உள்­ளது. மக்­கள் குறு­கிய கால தீர்­வையே நாடு­கின்­ற­னர். வாய், மூக்­கில் துணியை மூடிக்­கொள்­வது போன்ற தீர்­வையை நாடு­கின்­ற­னர். நீண்­ட­கால தீர்­வான குப்­பை­களை எரிப்­பதை தடை செய்­வது பற்றி தெரி­ய­வில்லை.

அதிக அளவு காற்று மாச­டை­யும் போதும், விவ­சா­யி­கள் வைக்­கோல் போன்­ற­வை­களை எரிக்­கும் குளிர்­கா­ல­மான செப்­டம்­பர் முதல் டிசம்­பர் வரை அதிக அளவு காற்­று­மாசு பற்றி பேசப்­ப­டு­கி­றது. வரு­டம் முழு­வ­தும் காற்று மாசு­ப­டு­வதை தடுக்க மக்­க­ளின் ஆத­ரவை பெறு­வது சவா­லா­ன­தாக உள்­ளது.

(இந்த கட்­டுரை இந்­தியா ஸ்பென்ட் இணை­ய­த­ளத்­தில் பாஸ்­கர் திரி­பாதி எழுதி முத­லில் வெளி­யா­னது.)

நன்றி: ஸ்கோரல் டாட் காம்.