அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயது ?

பதிவு செய்த நாள் : 11 மே 2019

பார­திய ஜனதா மூத்த தலை­வர்­க­ளில் குறிப்­பி­டத்­தக்­க­வர் ஓ.ராஜ­கோ­பால். 90 வயதை நெருங்­கும் கேர­ளா­வைச் சேர்ந்த ராஜ­கோ­பால், கேர­ளா­வில் பா.ஜ., சார்­பாக சட்­ட­ச­பைக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர். இவர் மட்­டும்­தான் கேர­ளா­வில் பா.ஜ.,சார்­பாக உள்ள ஒரே சட்­ட­மன்ற உறுப்­பி­னர். முது­மை­யில் இருக்­கும் இவர், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு ஓய்வு பெறும் வயது இருக்க வேண்­டும் என்று கரு­து­கின்­றார். வரும் 2021ல் சட்­ட­சபை பதவி காலம் முடி­வ­டை­யும் போது, அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெற விரும்­பு­கின்­றார்.  

வாஜ்­பாய் அர­சில் இணை அமைச்­ச­ராக இருந்த ராஜ­கோ­பால், மூத்த தலை­மு­றை­யி­னர் இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு வழி விட வேண்­டும் என்­றும் கூறு­கின்­றார். 2014ல் நரேந்­திர மோடி பிர­த­ம­ராக பத­வி­யேற்ற போது, 75 வய­திற்­கும் குறை­வா­ன­வர்­க­ளுக்கே அமைச்­சர் பதவி வழங்­கப்­ப­டும் என்று அறி­வித்­தார். தற்­போ­தைய லோக்­சபா தேர்­த­லில் 75 வயதை கடந்த மூத்த தலை­வர்­கள் எல்.கே.அத்­வானி, முரளி மனோ­கர் ஜோஷி, சுமித்ரா மகா­ஜன் போன்­ற­வர்­க­ளுக்கு போட்­டி­யிட வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை. ரீடிப் இணை­ய­தள நிரு­பர் சோபா வாரி­ய­ருக்கு,திரு­வ­னந்­த­பு­ரத்­தில் ராஜ­கோ­பால் அளித்த பேட்டி.

கேள்வி: அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் ஓய்வு பெறும் வயது இருக்க வேண்­டும் என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்: ஆம். எல்லா வேலை­க­ளுக்­கும் ஓய்வு பெறும் வயது இருக்­கும் போது, இது அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் பொருந்­தும். எனக்கு 90 வய­தா­கி­விட்­டது. எனது வயதை கணக்­கில் எடுத்­துக் கொண்­டால், நான் தகு­தி­யில்­லா­த­வன். ஓய்வு பெறும் வயது இருந்­தால் நான் மகிழ்ச்­சி­ய­டை­வேன். இனி வரும் தேர்­த­லில் போட்­டி­யி­டு­மாறு என்னை யாரும் வற்­பு­றுத்­த­மாட்­டார்­கள். நான் வரும் 2021 வரு­டத்தை எதிர்­பார்த்­துக் கொண்­டுள்­ளேன். அப்­போது நான் ஓய்வு பெறு­வேன். இது கட்சி எடுத்த சரி­யான முடிவு என்று கரு­து­கின்­றேன். இதை முன்­னரே செய்து இருக்க வேண்­டும். இந்த விதி முன்­னரே வந்­தி­ருந்­தால், நான் ஓய்வு காலத்தை அனு­ப­வித்­துக் கொண்­டி­ருப்­பேன்.

மூத்த தலை­வர்­களை ஓதுக்­கு­கின்­ற­னர் என்று நரேந்­தி­ர­மோடி, அமித்ஷா மீது விமர்­ச­னங்­கள் உள்­ளன. இது போன்ற விமர்­ச­னங்­கள் தேவை­யில்­லா­தது. நரேந்­திர மோடி அரசு அமைக்­கும் போது, 75 வயதை கடந்­த­வர்­க­ளுக்கு அமைச்­ச­ர­வை­யில் இடம் இல்லை என்று முடிவு செய்­தார். இளம் தலை­மு­றை­யி­னரை அதிக அளவு இடம்­பெற வைக்க வேண்­டும் என்று எண்­ணி­னார். இது சரி­யான முடிவு. குஜ­ராத்­தில் அத்­வானி போட்­டி­யி­டும் காந்­தி­ந­கர் தொகு­தி­யில் இந்த முறை அமித்ஷா போட்­டி­யிட முடிவு செய்த போது, அவர் அத்­வா­னியை அவ­ம­திக்­கின்­றார் என்ற விமர்­ச­னங்­கள் எழுந்­தன. இது சரி­யான முடிவு. கட்­சி­யின் ஆரோக்­கி­யத்­திற்கு இளம் தலை­வர்­கள் அவ­சி­யம். கவர்­னர் பதவி போல், அர­சி­யல் ஓய்வு பெற்­ற­வர்­க­ளுக்கு அல்ல.

கேள்வி: வய­தா­ன­வர்­க­ளின் உடல், மன­நிலை ஆரோக்­கி­ய­மாக இருந்­தால், அவர்­க­ளது அனு­ப­வத்தை நாட்­டின் முன்­னேற்­றத்­திற்கு பயன்­ப­டுத்த கூடாதா?

பதில்: இது மிக­வும் ஆபத்­தா­னது என்று கரு­து­கின்­றேன். விதி­வி­லக்­காக சில வய­தா­ன­வர்­க­ளின் மன­நிலை ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றது. வய­தா­ன­வர்­களே தலைமை பொறுப்­பில் இருந்­தால், இளம் தலை­மு­றை­யி­னர் எப்­போது தலைமை பொறுப்­பிற்கு வரு­வது? நீங்­கள் ஆரோக்­கி­ய­மாக இருக்­கின்­றீர்­களோ இல்­லையோ, மூத்­த­வர்­கள் இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு வழி­விட வேண்­டும். இளம் தலை­மு­றை­யி­ன­ரும் வேலை செய்ய வாய்ப்பு வழங்க வேண்­டும். சில வய­தா­ன­வர்­கள் மட்­டும் காலா காலத்­திற்­கும் இருக்க கூடாது. சிறந்த சமூக சம­நிலை இருக்க வேண்­டும் எனில், ஒரு தலை­மு­றை­யி­னர் வழி­விட்டு அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு வாய்ப்பு அளிக்க வேண்­டும். குறிப்­பிட்ட வயதை கடந்த பிறகு, உங்­க­ளது சக்தி குறைந்­து­வி­டும். இது உங்­க­ளது முடிவு எடுக்­கும் திறனை பாதிக்­கும். அதே நேரத்­தில் எவ்­வித அனு­ப­வ­மும் இல்­லாத இளை­ஞர்­க­ளும் நல்­ல­தல்ல. அவர்­களை பொறுப்­பிற்கு கொண்டு வரு­வ­தற்கு முன்பு பயிற்சி அளிக்க வேண்­டும்.

கேள்வி: அத்­வானி சமூக வலைத்­த­ளத்­தில், பார­திய ஜன­தா­வில் உள்ள சிலர் அவர்­க­ளது கருத்­துக்கு முரண்­டு­ப­டு­ப­வர்­களை தேச துரோ­கி­கள் என்று கூறு­வது சரி­யல்ல என்று கூறி­யி­ருப்­பதை பற்றி என்ன கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: அத்­வானி கூறி­யி­ருப்­பது நூறு சத­வி­கி­தம் சரியே. ஜன­நா­ய­கத்­தில் உங்­கள் கருத்­துக்கு உடன்­ப­டா­த­வர்­கள், உங்­கள் எதி­ரி­கள் அல்ல. சமூ­தா­யத்­தில் மாறு­பட்ட கருத்­துக்­கள் இருக்­கும். மாறு­பட்ட கருத்­து­க­ளுக்கு இடம் கொடுத்து, புரிந்து கொண்டு மதிக்க வேண்­டும் என்று கரு­து­கின்­றேன். யாரும் தான் சொல்­வதே சரி­யென்று நினைக்க கூடாது. இன்று சரி­யாக இருப்­பது நாளை தவ­றாக இருக்­கும். எனது வாழ்க்­கை­யில் நடந்­த­தையே உதா­ர­ண­மாக கூறு­கின்­றேன். நான் முதன் முத­லில் பங்­கேற்­றது ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்­தில்­தான்.

1948ல் பாலக்­காட்­டில் உள்ள விக்­டோ­ரியா கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருந்­தேன். நான் நண்­பர்­க­ளு­டன் பேட்­மிட்­டன் விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கும் போது, ரேடி­யோ­வில் மகாத்மா காந்தி சுட்­டுக் கொல்­லப்­பட்ட செய்தி வெளி­யா­னது. நாங்­கள் விளை­யா­டு­வதை நிறுத்­தி­னோம். மாண­வர்­வி­டுதி முழு­வ­தும் சோக­ம­ய­மா­னது. கல்­லூ­ரி­யில் காங்­கி­ரஸ், கம்­யூ­னிஸ்ட் என இரண்டு கோஷ்­டி­யாக மாண­வர்­கள் இருந்­த­னர். நான் இரண்டு கோஷ்­டி­யில் இருந்­தும் ஒதுங்கி இருப்­பேன். மகாத்மா காந்தி சுட்­டுக் கொல்­லப்­பட்ட பிறகு, இரண்டு கோஷ்டி மாண­வர்­க­ளும் ஒன்­றாக சேர்ந்­த­னர். மகாத்மா காந்­தியை சுட்­டுக் கொன்­றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறி­னார்­கள்.

நாங்­கள் அனை­வ­ரும் அதை நம்­பி­னோம். பாலக்­காட்­டில் தீப்­பந்­தம் ஏந்தி நடந்த ஊர்­வ­லத்­தில் நானும் பங்­கேற்­றேன். ஆர்.எஸ்.எஸ் ஓழிக! என்று கோஷ­மிட்­டோம். அந்த நாட்­க­ளில் நான் சுவாமி சின்­மா­ய­னந்தா பக்­த­னாக இருந்­தேன். அவ­ரது பக­வத் கீதை சொற்­பொ­ழி­வுக்கு தவ­றா­மல் போவேன். ஒரு நாள் சுவாமி சின்­மா­ய­னந்தா, பாலக்­காட்­டிற்கு  ஆர்.எஸ்.எஸ் அப்­போ­தைய தலை­வர் (மாதவ் சதா­சிவ்) கோல்­வால்­கர் வரு­கின்­றார் என்­பதை அறிந்­த­வு­டன் உற்­சா­க­மா­னார். நான் கோல்­வால்­கரை சந்­திக்க வேண்­டும் என்­றார். நான் சுவாமி சின்­மா­ய­னந்தா மிகுந்த மதிப்பு கொண்­ட­வன். அவர் சந்­திக்க வேண்­டும் என்று உற்­சா­க­மாக கூறி­ய­வு­டன், எனக்­கும் ஆவல் ஏற்­பட்­டது. நான் கோல்­வால்­கர் மோச­மா­ன­வ­ராக இருப்­பார் என்று எதிர்­பார்த்­தேன். அவர் துற­வியை போல் இருப்­பதை பார்த்து அதிர்ச்­சி­யுற்­றேன். அப்­போது எனக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி அதி­கம் தெரி­யாது. பிற்­கா­லத்­தில் நான் பல ஆர்.எஸ்.எஸ் அமைப்­பில் உள்­ள­வர்­களை சந்­தித்து போது, அதன் மீது எனக்கு இருந்த கருத்து மாறி­யது.

கேள்வி: பா.ஜ.,வினர் ஏன் விமர்­ச­னத்தை சகித்­துக் கொள்­வ­தில்லை? அவர்­கள் விமர்­ச­னத்தை சரி­யான கோணத்­தில் எடுத்­துக் கொள்­ள­மாட்­டார்­களா?

பதில்: பா.ஜ.,வினர் சகிப்­புத்­தன்மை இல்­லா­த­வர்­கள் என்று கரு­த­வில்லை. எதிர்­கட்­சி­யி­னர் நரேந்­திர மோடி நாட்­டின் சாபம் என்று கூறும் போது, அவரை அறிந்­த­வர்­கள், அவ­ரது கருத்தை அறிந்­த­வர்­கள், அவர் நாட்­டிற்கு என்ன செய்ய வேண்­டும் என்று விரும்­பு­கின்­றார் என்­பதை அறிந்­த­வர்­க­ளால், இதை ஜீர­ணித்­துக் கொள்ள முடி­வ­தில்லை. அவ­ரது பத­விக்கு மரி­யாதை கொடுக்க வேண்­டும். அதே நேரத்­தில் விமர்­சிப்­ப­வர்­களை தேச துரோ­கி­கள் என்று கூறு­வது சரி­யல்ல. அதை தான் அத்­வானி கூறி­னார்.

ஒவ்­வொரு பிரச்­னை­யி­லும் இரண்டு கருத்­துக்­கள் இருக்­கும். உங்­கள் கருத்­து­டன் ஒரு­வர் உடன்­ப­ட­வில்லை எனில், அவரை தேச துரோகி என்று கூற கூடாது. சில நேரங்­க­ளில் இளமை துடிப்­பால், நீங்­கள் தீவிர கருத்­தில் இருப்­பீர்­கள். அது முதிர்ச்­சி­யான கருத்து அல்ல. விமர்­சிப்­ப­வர்­களை தேச துரோ­கி­கள் என்று கூறும் போக்கை கட்சி அங்­கீ­க­ரிக்க கூடாது. யாரும் கருத்து முரண்­ப­ட­லாம், விமர்­சிக்­க­லாம். நாம் பிரிட்­டிஷ் பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை கடைப்­பி­டிக்­கின்­றோம். எதிர்­கட்சி தலை­வ­ருக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கின்­றோம். எதிர்­கட்சி தலை­வர் அமைச்­சர் அந்­தஸ்து உடை­ய­வர்.

கேள்வி: அர­சி­யல்­வா­தி­க­ளின் தரம், முதிர்ச்சி குறைந்து வரு­வ­தாக கரு­து­கின்­றீர்­களா?

பதில்: கட்­சி­யில் பல்­வேறு தரப்­பி­னர் இருப்­பார்­கள். ஆனால் கட்­சி­யில் தலை­மை­யில் உள்­ள­வர்­கள், முதிர்ச்­சி­யான தொண்­டர்­களே நன்கு செயல்­ப­டு­வார்­கள் என்­பதை புரிந்து கொள்ள வேண்­டும். ராகு­லின் பல எதிர்­வி­னை­களே சிறு­பிள்­ளைத் தன­மாக உள்­ளன. அவர் எதிர்­கட்சி தலை­வரை போல் நடந்து கொள்­ள­வில்லை. அவர் நாட்டை வழி­ந­டத்தி கொண்டு செல்­லும் வகை­யில் முதிர்ச்சி அடை­ய­வேண்­டும்.

கேள்வி: நரேந்­திர மோடி­யின் ஐந்து வருட ஆட்­சி­யில் மாட்­டி­றைச்சி, பசு பாது­காப்பு ஆகிய இரண்டு விஷ­யங்­களே முக்­கி­யத்­து­வம் பெற்­றன. ஒரு­வர் மாட்­டி­றைச்சி வீட்­டில் வைத்­தி­ருந்­தார் என்­ப­தாலோ அல்­லது விற்­பனை செய்­தார் என்­ப­தாலோ, அவரை அடித்து கொல்­வது சரியா?

பதில்: நடந்த விஷ­யம் சரி­யல்ல. (அடித்­துக் கொன்­றது தவறு) மக்­க­ளுக்கு எந்த உணவு விருப்­பமோ அதை உண்­ப­தற்கு உரி­மை­யுண்டு. அதே நேரத்­தில் உத்­த­ர­பி­ர­தே­சத்­திலோ அல்­லது பீகா­ரிலோ நடை­பெ­றும் நடக்­கும் விஷ­யத்தை வைத்து, அதே போல் நாடெங்­கும் நடப்­பது போல் சித்­த­ரித்து பா.ஜ,,வின் பெயரை கெடுக்க திட்­ட­மிட்டு செயல்­ப­டு­கின்­ற­னர். அந்த சம்­ப­வங்­கள் எங்கோ நடந்­தவை. அப்­ப­டிப்­பட்ட சம்­ப­வங்­களை நான் ஏற்­றுக் கொள்­ள­வில்லை. அவை நடந்­தி­ருக்க கூடாது. ஆனால் அதையே வைத்­துக் கொண்டு எப்­போ­தும் கூறிக் கொண்­டி­ருப்­ப­தும் சரி­யல்ல.

கேள்வி: அவர்­கள் செய்­தது தவறு என்­பதை உணர்த்த பா.ஜ. தலைமை தவ­ற­வில்­லையா?

பதில்: குறிப்­பிட்ட பகு­தி­யைச் சேர்ந்த கிரா­மப்­புற மக்­கள் அவ்­வாறு நடந்து கொண்­டுள்­ள­னர். ஊட­கங்­க­ளில் சில பிரி­வி­னர், இதற்கு பா.ஜ.,வே பொறுப்பு என்­பதை போல் சித்­த­ரித்­த­னர். அந்த சம்­ப­வத்­தில் பா.ஜ.,வுக்கு தொடர்பு இல்லை. இது போன்று எங்கோ நடக்­கும் சம்­ப­வத்தை ஊட­கங்­கள் பெரி­து­ப­டுத்­து­வது நாட்­டைப்­பற்றி தவ­றான எண்­ணத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டும்.  இவ்­வாறு நான் கூறு­வ­தற்கு, இது போன்ற சம்­ப­வங்­களை புறக்­க­ணிக்க வேண்­டும் என்றோ அல்­லது சகித்­துக் கொள்ள வேண்­டும் என்றோ பொரு­ளல்ல. அந்த நேரத்­தில் பார­திய ஜனதா மனி­தர்­களை விட பசுக்­க­ளுக்­கும். பசு காப்­ப­கங்­க­ளுக்­கும் அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கின்­றன என்று கரு­தி­னர். 2014ம் ஆண்டு தேர்­தல் அறிக்­கை­யில் பசு முக்­கிய இடம் பெற்று இருந்­தது. தற்­போ­தைய தேர்­தல் அறிக்­கை­யில் பசு இடம் பெற­வில்லை. இப்­போது பசுவோ அல்­லது பசு காப்­ப­கமோ முக்­கி­யத்­து­வம் பெற­வில்லை.

தற்­போ­தைய தேர்­தல் அறிக்­கை­யில், எல்­லோ­ரது பங்­கேற்­பு­டன், எல்­லோ­ரது உயர்வு என்­பதை நோக்கி மக்­க­ளை­யும் இணைத்­துக் கொண்டு வளர்ச்­சிக்­கான உத்­தி­களை வகுப்­பது. ஊழ­லற்ற,திற­மை­யான நிர்­வா­கம் என்­ப­தற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: தற்­போது நரேந்­திர மோடி வளர்ச்சி. சுபிட்­சத்தை பற்றி பேச­வில்லை. தேச பாது­காப்பு, தேச­பக்­தியை பற்றி மட்­டுமே பேசு­கின்­றார். ஏனெ­னில் கடந்த ஐந்து வரு­டங்­க­ளில் பெரிய அள­வில் வளர்ச்­சியோ சுபிட்­சமோ அடை­ய­வில்லை என்­ப­தா­லேயே, அதை பற்றி பேச­வில்லை என்று கரு­து­கின்­ற­னர். இதை பற்றி என்ன கூறு­கின்­றீர்­கள்?

பதில்: ஒன்றை புரிந்த கொள்­ளுங்­கள். நீங்­கள் ஒரே கோஷத்தை திரும்ப திரும்ப கூற­மு­டி­யாது. இதற்கு சுபிட்­சத்தை கைவிட்­ட­தாக அர்த்­த­மல்ல. வளர்ச்சி அடை­யும் போது, நீங்­கள் முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தும் மாறும். புதிய சிந்­த­னை­கள் பிறக்­கும். கடந்த ஐந்து வரு­டங்­க­ளில் வளர்ச்சி அடை­ய­வில்லை என்­பதை பொருத்த அள­வில், வளர்ச்சி என்­றால் என்ன என்­பது பற்றி உங்­க­ளது புரி­தலை பொருத்­தது. நரேந்­திர மோடி ஆட்­சிக்கு வரும் போது, இந்­தி­யா­வில் 38 சத­வி­கித மக்­களே கழிப்­ப­றையை பயன்­ப­டுத்­தி­னார்­கள். முதன் முறை­யாக சுதந்­தி­ர­தின உரை­யில் பிர­த­மர் கழிப்­ப­றையை பற்றி பேசி­னார். ஐந்து வரு­டங்­க­ளுக்கு பிறகு, 98 சத­வி­கித மக்­கள் கழிப்­ப­றையை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இது மிகப்­பெ­ரும் சாதனை. இது போன்ற அடிப்­படை வச­தி­களை செய்து கொடுப்­ப­தும் வளர்ச்­சி­தான்.

கேள்வி: 2014ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் கேர­ளா­வில் பா.ஜ., ஒரு தொகு­யி­லும் கூட வெற்றி பெற­வில்லை. இந்த தேர்­த­லில் பா.ஜ., சரித்­தி­ரத்தை படைக்­கும் என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்: இந்த வெற்றி திரு­வ­னந்­த­பு­ரத்­தில் இருந்து தொடங்கி, மற்ற பகு­தி­க­ளுக்­கும் விரி­வு­ப­டும். கேர­ளா­வின் அர­சி­யல் நிலை மாறி­வ­ரு­கின்­றது. உல­கம் பூரா­வி­லும் கம்­யூ­னிச சித்­தாந்­தம் தோல்வி அடைந்து வரு­கி­றது. இது கண்­காட்சி சாலைக்­குள் சென்­று­விட்­டது. இந்­தி­யா­வில் கேர­ளா­வில் மட்­டும் உயி­ரு­டன் உள்­ளது. மத­ரீ­தி­யான பிள­வு­க­ளால் காங்­கி­ரஸ் உயி­ரு­டன் இருக்­கி­றது. இந்­தி­யா­வில் வேறு எங்­கும் இல்­லாத அளவு கேர­ளா­வின் மக்­கள் தொகை­யில் பாதி பேர் சிறு­பான்­மை­யி­னர். சிறு­பான்­மை­யி­னர் நலன்­களை காப்­ப­தாக காங்­கி­ரஸ் கூறிக் கொள்­கி­றது.

கேள்வி: சட்­ட­ச­பை­யில் உங்­கள் பதவி காலம் முடிந்த பிறகு, நீங்­கள் அர­சி­யில் இருந்து ஓய்வு பெறும் திட்­டம் உள்­ளதா?

பதில்: நான் ஏற்­க­னவே ஓய்வு பெறும் எண்­ணத்­தில் உள்­ளேன். வரும் செப்­டம்­பர் மாதத்­தில் எனக்கு 90 வய­தா­கி­றது. சட்­ட­ச­பை­யில் எனது பத­வி­கா­லம் 2021ல் நிறை­வ­டை­கி­றது. எனது கட்சி 75 வயது நிரம்­பி­ய­வர்­க­ளுக்கு போட்­டி­யிட இடம் வழங்­கு­வ­தில்லை என்று முடி­வெ­டுத்­துள்­ளது. இதை வர­வேற்­கின்­றேன். எனவே 2021க்கு பிறகு நான் மகிழ்ச்­சி­யு­டன் ஓய்வு பெறு­கின்­றேன்.

நன்றி: ரீடிப் இணை­ய­த­ளத்­தில் சோபா வாரி­யர்.