அரசியல் மேடை: தேர்தல் ஆணையம் : வலுக்கும் சந்தேகம்!

பதிவு செய்த நாள் : 11 மே 2019

சீச­ரின் மனைவி சந்­தே­கத்­திற்கு அப்­பேற்­பட்­ட­வ­ராக இருக்­க­வேண்­டும் என்­பது நீண்­ட­நாள் பழ­மொழி. ராம­னின் மனைவி சீதை சந்­தே­கத்­திற்கு அப்­பேற்­பட்­ட­வ­ராக இருக்­க­வேண்­டும் என்­ப­தற்­கா­கவே ராமன் அவரை தீக்­கு­ளிக்­கச் செய்­தார். எனவே, எந்­த­வொரு நிலை­யி­லும், சந்­தே­கம் என்­பது அறவே கூடாது என்­ப­து­தான் பொது நிலை­பாடு.

இன்­றைய தினம் இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின்­மீது பல்­வேறு சந்­தே­கங்­கள் அணி­வ­குத்து வரு­வதை நாம் அண்மை கால­மாக காண­மு­டி­கி­றது. வாக்­குப்­ப­திவு எந்­தி­ரத்­தின் மீதான சந்­தே­கம், வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­களை கையா­ளு­தல் குறித்த சந்­தே­கம், வாக்­குப்­ப­தி­வில் குள­று­ப­டி­கள் ஏற்­ப­டு­வ­தான சந்­தே­கம், இப்­படி பல்­வேறு சந்­தே­கங்­கள் இந்­தியா முழு­மைக்­கு­மான பல்­வேறு மாநி­லங்­க­ளில் இருந்து உரு­வாகி வரு­வதை நாம் காண முடி­கி­றது.

தன்­னாட்சி சுதந்­திர அமைப்­பான தேர்­தல் ஆணை­யம், இப்­போ­தைய மத்­திய ஆட்­சிக் கட்­சிக்கு ஆத­ர­வான நிலை­யில் செயல்­ப­டு­கி­றதோ என்ற வலுத்த சந்­தே­க­மும் எதிர்க்­கட்­சி­க­ளுக்கு இடையே எழுந்­துள்­ளது. இது­தொ­டர்­பான பல்­வேறு புகார்­கள் தேர்­தல் ஆணை­யத்­திற்­கும் நீதி­மன்­றத்­திற்­கும் சென்­ற­வண்­ணம் உள்­ளன.

கடந்த மாதம் 20ம் தேதி மது­ரை­யில் வாக்­குப்­ப­தி­வுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட முக்­கிய ஆவ­ணங்­கள் வைக்­கப்­பட்­டி­ருந்த அறைக்கு பெண் தாசில்­தார் ஒரு­வர் சில ஊழி­யர்­க­ளு­டன் சென்று சில ஆவ­ணங்­களை வெளியே எடுத்­து­வந்து நகல் எடுத்­த­தான புகார் வந்­தது. இந்த புகா­ரின் அடிப்­ப­டை­யில் தாசில்­தார் பணி­யில் இருந்து இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். இதில் தொடர்­பு­டைய 4 ஊழி­யர்­க­ளில் 2 பேர் டிஸ்மிஸ் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

அதி­முக – பாஜக கூட்­டணி கட்­சி­களை தவிர, மற்ற அனைத்து கட்­சி­க­ளும் தேர்­தல் ஆணை­யம் மற்­றும் நீதி­மன்­றத்­திற்கு சென்­ற­தன் விளை­வாக மாவட்ட தேர்­தல் அதி­கா­ரி­யான மதுரை மாவட்ட கலெக்­டர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். இது­தொ­டர்­பான சந்­தே­கத்­திற்கு இன்­னும் முழு­மை­யான விடை கிடைத்­த­பா­டில்லை.

இந்­நி­லை­யில், இந்த வாரம் செவ்­வாய்க்­கி­ழமை அன்று, கோவை­யில் இருந்து சுமார் 60 வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­கள், தேனிக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு, அங்­குள்ள வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் வைக்­கப்­பட்ட தக­வல் அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு இடை­யே­யும், பொது­மக்­க­ளி­ட­மும் பலத்த சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அங்கு கொண்­டு­வ­ரப்­பட்ட வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­க­ளில் எந்த பதி­வும் இல்லை என்­பதை தேனி மாவட்ட கலெக்­ட­ரும், மாவட்ட காவல்­துறை அதி­கா­ரி­யும், எதிர்க்­கட்சி வேட்­பா­ளர்­கள் மற்­றும் அவர்­க­ளது ஏஜெண்­டு­க­ளி­ட­மும் எந்­தி­ரங்­களை காட்டி தெளி­வு­ப­டுத்தி அந்த அறைக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த எந்­தி­ரங்­கள் தேனிக்கு ஏன் கொண்­டு­செல்­லப்­பட்­டது என்­பது குறித்து நிரூ­பர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்த தமி­ழக தலைமை தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாஹூ தமிழ்­நாட்­டில் தேனி, மதுரை உள்­ளிட்ட 13 மாவட்­டங்­க­ளில் உள்ள 46 வாக்­குச்­சா­வடி மையங்­க­ளில் குள­று­ப­டி­கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­க­வும், இந்த மையங்­க­ளில் மறு வாக்­குப்­ப­திவு செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­ப­ட­லாம் என­வும், அதற்­கா­கவே இந்த வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­கள் தேனிக்கு கொண்­டு­செல்­லப்­பட்­ட­தாக கூறி இருக்­கி­றார்.

மற்ற மாவட்­டங்­க­ளில் போது­மான அள­விற்கு வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­கள் இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார். இந்த விளக்­கத்தை ஏற்­றுக்­கொள்­ளாத எதிர்க்­கட்­சி­யி­னர், பதி­வான வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­களை மாற்­று­வ­தற்­கான முயற்­சி­கள் நடை­பெற்று வரு­கின்­றதோ என சந்­தே­கிக்­கின்­ற­னர்.

வாக்­குப்­ப­தி­வுக்கு முன்­பாக, வாக்­குச்­சா­வடி மையங்­க­ளில் பணி­யாற்­றும் அலு­வ­லர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கும்­போது, அந்த எந்­தி­ரங்­க­ளில் பதி­வாகி இருக்­கிற வாக்­கு­களை முழு­வ­து­மாக அழித்­து­விட்­டு­தான் வாக்­குச்­சா­வ­டி­யில் பொது­மக்­கள் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­ப­டும். ஆனால், ஒரு சில வாக்­குச்­சா­வ­டி­க­ளில் அப்­படி பதி­வான சுமார் 50 வாக்­கு­கள் வரை அழிக்­கா­ம­லேயே அலு­வ­லர்­கள் வாக்­குப்­ப­திவை தொடங்­கி­விட்­ட­தா­க­வும், அந்த இடங்­க­ளில் மறு­வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும் என்­றும் மாநில தேர்­தல் அதி­காரி கூறி­யுள்­ளார்.

பொது­வாக வாக்­குச்­சா­வடி மையங்­க­ளில் உள்ள வேட்­பா­ளர்­க­ளின் முக­வர்­கள், வாக்­குப்­ப­திவு எந்­தி­ரத்­தில் எந்த வாக்­குப்­ப­தி­வும் இல்லை என்­பதை உறு­தி­ப­டுத்­திய பிறகே பொது­மக்­களை வாக்­க­ளிக்க அனு­ம­திப்­பார்­கள். அப்­படி இருக்­கை­யில், இந்த தவறு எங்கே எப்­படி நடந்­தி­ருக்­க­மு­டி­யும் என்ற வலு­வான சந்­தே­கத்­தை­யும் எதிர்க்­கட்­சி­யி­னர் எழுப்­பு­கின்­ற­னர்.

இப்­படி பல்­வேறு தரப்­பி­ன­ரும் எழுப்­பு­கிற சந்­தே­கத்­திற்கு விடை அளிக்­க­வேண்­டிய கட­மை­யும் கட்­டா­ய­மும் தேர்­தல் ஆணை­யத்­திற்கு உண்டு. ஏற்­க­னவே தமி­ழ­கத்­தில் சுமார் 10 வாக்­குச்­சா­வ­டி­க­ளில் மறு­வாக்­குப்­ப­திவு நடத்­த­வேண்­டும் என டில்­லி­யில் உள்ள மத்­திய தேர்­தல் ஆணை­யத்­திற்கு தாம் பரிந்­து­ரைத்­தி­ருப்­ப­தாக மாநில தேர்­தல் அதி­காரி தெரி­வித்­தி­ருந்­தார்.

அதை­ய­டுத்து, 46 வாக்­குச்­சா­வடி மையங்­க­ளில் குள­று­ப­டி­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். ஆக மொத்­தம் 56 வாக்­குச்­சா­வ­டி­க­ளில் மறு வாக்­குப்­ப­திவு நடத்­த­லாம் என்று மாநில தேர்­தல் அதி­காரி தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், 13 வாக்­குச்­சா­வ­டி­க­ளில் மட்­டுமே இம்­மா­தம் 19ம் தேதி மறு வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும் என்று இந்­திய தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

அப்­ப­டி­யென்­றால், மீத­முள்ள வாக்­குச்­சா­வ­டி­க­ளில் நடந்த குள­று­ப­டி­க­ளின் நிலை என்ன? என்ற பலத்த சந்­தே­கத்­தை­யும் எதிர்க்­கட்­சி­கள் எழுப்­பு­கின்­றன.

வாக்­குப்­ப­தி­வுக்கு பயன்­ப­டா­மல், கோவை நக­ரில் வைக்­கப்­பட்­டி­ருந்த வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­கள்­தான், தேனி மற்­றும் ஈரோடு நக­ரங்­க­ளுக்கு கொண்­டு­செல்­லப்­பட்­ட­தாக மாநில தேர்­தல் அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.

மறு­வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும் தேதியை அறி­வித்­த­பி­றகு, மாவட்ட தேர்­தல் அதி­காரி அந்த பகு­தி­யில் உள்ள கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­கள் மற்­றும் ஏஜெண்­டு­களை அழைத்து மறு­வாக்­குப்­ப­திவு நடத்த வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­கள் கொண்­டு­செல்­லப்­ப­டு­கி­றது என்­கிற விவ­ரங்­களை தெரி­வித்­தி­ருக்­க­லாம். இப்­படி ஒரு வெளிப்­ப­டை­யான செயல் நடை­பெற்­றி­ருந்­தால், யாருக்­கும் எந்­த­வித சந்­தே­க­மும் வந்­தி­ருக்­காது.

அதி­லும் குறிப்­பாக, சுமார் 50 வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­கள் தேனிக்கு கொண்­டு­செல்­லப்­பட்­ட­து­தான், எதிர்க்­கட்­சி­க­ளுக்கு பலத்த சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது.

தேர்­தல் முடிந்த சில நாட்­க­ளில் பிர­த­மர் நரேந்­திர மோடி போட்­டி­யி­டும் வார­ணாசி தொகு­திக்கு சென்ற அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம், தேனி பார்­லி­மெண்ட் வேட்­பா­ள­ரான தமது மகன் ரவீந்­தி­ர­நாத்­தை­யும் அழைத்­துச்­சென்று பாஜக தலை­வர்­களை சந்­தித்த நிகழ்வு குறித்து பல்­வேறு தக­வல்­கள், வதந்­தி­க­ளாக உலா வந்த நிலை­யில், திடீ­ரென அதே தேனி தொகு­திக்கு வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­கள் வந்­தி­ருப்­பதை எதிர்க்­கட்­சி­கள் தொடர்­பு­ப­டுத்தி, பேசத் தொடங்­கி­விட்­டன.

இது­போன்ற சந்­தே­கங்­க­ளுக்கு இடம்­த­ராத வகை­யில் தேர்­தல் ஆணை­யம் நடந்­து­கொள்­ள­வேண்­டும். வாக்­குப்­ப­திவு முடிந்­துள்ள அனைத்து தொகு­தி­க­ளி­லும் வைக்­கப்­பட்­டுள்ள வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­க­ளுக்கு கூடு­தல் பாது­காப்­பு­களை வழங்­கு­வ­து­டன், தேர்­தல் ஆணை­யம் ஜன­நா­யக ரீதி­யில், நேர்­மை­யான வகை­யில் ஒளிவு மறை­வின்றி இந்த தேர்­தலை நடத்தி முடித்­தி­ருக்­கி­றது என்ற நற்­பெ­ய­ரை­யும் பெற­வேண்­டிய கட்­டா­யம் இந்­திய தேர்­தல் ஆணை­யத்­திற்கு இருக்­கி­றது.

தேர்­தல் ஆணை­யத்­தின்­மீது மக்­க­ளுக்கு முழு­மை­யான நம்­பிக்கை ஏற்­பட்­டால்­தான், அடுத்­த­டுத்து வரும் தேர்­தல்­க­ளில் அவர்­கள் எதிர்ப்­பார்ப்­ப­து­போல, 90 சத­வீ­தம் 100 சத­வீ­தம் என வாக்­கு­கள் பதி­வா­கும்.