விலங்குகளின் தாகத்தை தீர்ப்பவர்

பதிவு செய்த நாள் : 11 மே 2019

கென்­யா­வைச் சேர்ந்­த­வர் பாட்­ரிக் கிலோன்ஜோ மல்­லூவா (46). இவர் மூன்று வரு­டத்­திற்கு முன் வறட்சி காலத்­தில் வெயில் கொளுத்­தும் நாளில் கென்­யா­வில் உள்ள டைட்டா மலைப்­ப­குதி வன­வி­லங்கு சர­ணா­ல­யத்­திற்கு சென்­றார். அப்­போது கென்­யா­வில் வரு­டம் முழு­வ­தும் மழை பெய்­யா­மல் வறட்சி தாண்­ட­வ­மா­டிய காலம். சில நேரங்­க­ளில் ஆங்­காங்கு மழை பெய்­யும். ஆனால் இது போது­மா­ன­தாக இல்லை. அந்த வன­வி­லங்கு சர­ணா­ல­யத்­தில் சுற்றி வந்த போது, ஒரு எருமை மாடு தண்­ணீர் தேடி அலை­வதை கண்­டார். அதற்கு தண்­ணீர் எங்­கும் கிடைக்­க­வில்லை. அந்த எருமை மாடு பரி­தா­ப­மாக பாட்­ரிக்கை பார்த்­தது. அதன் கண்­ணில் தெரிந்து சோகம் பாட்­ரிக்­கின் மனதை பிசைந்­தது.

அந்த சர­ணா­ல­யத்­தின் பாது­கா­வ­ல­ரி­டம் விசா­ரித்­தார் பாட்­ரிக். மழை இல்­லா­மல் வறட்சி தாண்­ட­வ­மா­டும் காலத்­தில் சர­ணா­ய­லத்­தில் உள்ள மிரு­கங்­கள், விலங்­கு­கள் பல நாட்­கள் தண்­ணீர் இல்­லா­மல் வாடு­வதை அறிந்­தார்.

இது பற்றி பாட்­ரிக் நினைவு கூறு­கை­யில், அன்று நடந்த சம்­ப­வம் என்னை மிக­வும் பாதித்த்து. நான் சொந்த ஊருக்கு திரும்­பி­னேன். உடனே ஒரு டிரக்கை வாட­கைக்கு பிடித்து, அதில் தண்­ணீரை எடுத்­துக் கொண்டு 70 கி.மீட்­டர் பய­ணம் செய்து சர­ணா­ல­யத்­திற்கு சென்­றேன்.அங்­குள்ள விலங்­கு­க­ளுக்கு தண்­ணீரை கொடுக்க தொடங்­கி­னேன் என்று கூறி­னார்.

அன்­றில் இருந்து பாட்­ரிக் தின­மும் டைட்டா மலைப்­ப­குதி வன­வி­லங்கு சர­ணா­ல­யம், மேற்கு  சாவோ தேசிய பூங்கா, லுமோ சமூக வன­வி­லங்கு சர­ணா­ல­யம் ஆகி­ய­வை­க­ளுக்கு தண்­ணீ­ரு­டன் சென்று ஆயி­ரக்­க­ணக்­கான விலங்­கு­க­ளின் தண்­ணீர் தாகத்தை தீர்க்­கின்­றார்.

வன­வி­லங்கு சர­ணா­யத்­தில் வாழும் விலங்­கு­க­ளின் தண்­ணீர் தாகத்தை தீர்க்­கும் பாட்­ரிக் கூறு­கை­யில், ஐந்து பேர் எனக்கு உதவி செய்­கின்­ற­னர். சில நேரங்­க­ளில் கூடு­த­லாக ஆர்­வ­லர்­கள் உதவி செய்­வார்­கள். அவ்­வப்­போது சர­ணா­லய பாது­கா­வ­ல­ரும் உடன் வரு­வார். தாகத்­தில் தவிக்­கும் விலங்­கு­க­ளுக்கு தண்­ணீர் கொடுக்க தொடங்­கு­வற்கு முன், நான் பதி­னாறு வரு­டங்­கள் விலங்­கு­க­ளின் பாது­கா­வ­ல­ராக இருந்­துள்­ளேன். நானும் சில­ரும் சேர்ந்து டைட்டா மலைப்­ப­குதி வன­வி­லங்கு சர­ணா­ல­யத்­தில் பாது­காப்பு பணி­யில் ஈடு­ப­டு­வோம். விலங்­கு­களை வேட்­டை­யா­டு­ப­வர்­கள் விலங்­கு­களை பிடிப்­ப­தற்­காக வைக்­கும்

 ‘கண்­ணி’­­களை அகற்­று­வதே பெரிய வேலை­யாக இருக்­கும். அப்­போது விலங்­கு­களை வேட்­டை­யா­டு­வது பெரிய பிரச்­னை­யாக இருந்­தது. இப்­போது வேட்­டை­யா­டு­வது குறைந்­துள்­ளது. விலங்­கு­க­ளுக்கு பெரிய எதி­ரியே வறட்­சி­தான் என்று கூறு­கி­றார் பாட்­ரிக்.

வன­வி­லங்­கு­களை பாட்­ரிக் நேசிக்­கின்­றார். சர­ணா­ல­யத்­தில் அதிக நேரம் செல­வ­ழிக்­கின்­றார். விலங்­கு­களை பார்க்­கும் போது அவ­ரது கண்­கள் பிர­கா­ச­ம­டை­கின்­றன. அவர் வைத்த தண்­ணீரை யானை, எருமை, மான்­கள் குடிப்­பதை பார்க்­கும் போது மகிழ்ச்சி அடை­கின்­றார்.

“நான் கிரா­மப்­பு­றத்­தில் பிறந்­த­வன். பல பிரா­ணி­கள், விலங்­கு­கள் மத்­தி­யில் வளர்ந்­துள்­ளேன். எங்­க­ளுக்கு சொந்­த­மான மாடு­களை வனப்­ப­கு­தி­யில் மேய கூட்­டிச் செல்­லும் போது, பல விலங்­கு­களை அரு­கா­மை­யில்  இருந்து பார்த்­துள்­ளேன். ஆனால் நான் வளர்ந்து பெரி­ய­னா­கும் போது விலங்­கு­க­ளின் எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக குறைந்­து­விட்­டது.

அப்­போ­தி­ருந்த வனப்­ப­கு­தி­யும்,  சர­ணா­ல­ய­மும் இப்­போது இல்லை. மனி­தர்­களை போலவே இந்த பூமி­யில் எல்லா உரி­மை­க­ளும் உடைய விலங்­கு­களை பாது­காக்க வேண்­டும் என்ற எண்­ணம் எனக்கு ஏற்­பட்­டது. அந்த விலங்­கு­க­ளும் மனி­தர்­களை போல­தான். இன்­னும் சொல்­லப்­போ­னால் அவை கள்­ளம் கப­டம் இல்­லா­தவை. மனி­தர்­களை விட சிறந்­தவை என்று பாட்­ரிக் விளக்­கி­னார். கென்­யா­வில் சாவோ பிராந்­தி­யத்­தில் சுற்­றுச் சுழலை காப்­ப­தற்­கும். மனி­தர்­க­ளுக்­கும், விலங்­கு­க­ளுக்­கும் தண்­ணீர் தட்­டுப்­பா­டின்றி கிடைக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­காக பாட்­ரிக், “மோவாவா வன­வி­லங்கு அறக்­கட்­டளை” (Mwalua Wildlife Trust) என்ற அமைப்பை நிறு­வி­யுள்­ளார்.

இந்த அமைப்­பைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு­வி­னர் மனி­தர்­க­ளும், வன­வி­லங்­கு­க­ளும் இணக்­க­மாக வாழும் முறையை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். அத்­து­டன் வன விலங்­கு­க­ளுக்கு அவை வாழும் இடத்­தி­லேயே தண்­ணீரை வழங்­கு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

பல்­வேறு சமூக குழுக்­க­ளு­டன் இணைந்து வனங்­களை பாது­காப்­பது பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். சுற்­றுச்­சூ­ழலை மறு­சீ­ர­மைப்பு செய்­ய­வும், கென்­யா­வின் இயற்­கை­யும், பல்­லு­யிர் பாது­காப்­பை­யும் உறுதி செய்து நியா­ய­மான வழி­யில் அதிக அளவு பொரு­ளீட்­டு­வ­தற்­கான முயற்­சி­க­ளை­யும் செய்­கின்­ற­னர்.

“எனது மனது பூரா­வும் இயற்­கையே ஆக்­கி­ர­மித்­துள்­ளது. இதற்­காக நான் செய்­யும் வேலை­யில் கிடைக்­கும் திருப்தி எவ்­வ­ளவு பணம் சம்­பா­தித்­தா­லும் கிடைக்­காது. நான் எதிர்­பார்ப்­பது என்­ன­வெ­னில் எதிர்­கால சந்­த­தி­யி­னர் வன­வி­லங்­கு­களை பாது­காக்க வேண்­டும். பிரா­ணி­களை நேசிக்க வேண்­டும். இயற்­கையை பாது­காக்க வேண்­டும் என்­பது தான். அரை நாள் குடிப்­ப­தற்கு தண்­ணீர் கிடைக்­கா­விட்­டால் நாம் என்ன பாடு­ப­டு­வோம் என்­பதை கற்­பனை செய்து பார்க்­கின்­றேன். இத­னால் விலங்­கு­க­ளுக்கு தண்­ணீர் கிடைப்­பதை உறுதி செய்ய பாடு­ப­டு­கின்­றேன். அடுத்த தலை­முறை கண்டு ரசிக்க நாம் இந்த அழ­கான விலங்­கு­களை பாது­காக்க வேண்­டும். இதற்கு நாம் எல்­லோ­ருமே பொறுப்பு. இயற்­கையை மீட்­டெ­டுத்து, பாது­காக்க வேண்­டும். இயற்கை நமக்கு திருப்பி கொடுக்­கும். இந்த பூமி நமக்கு தேவை” என்று பாட்­ரிக் கூறி­னார்.

நன்றி: லாஜி­கல்­இந்­தி­யன் இணை­ய­த­ளம்.