தகவல் அறியும் உரிமை சட்டப்படி: மிக குறைந்த கட்டணத்தில் தேர்வு விடைத்தாள் நகல்

பதிவு செய்த நாள் : 11 மே 2019

தேர்வு முடி­வு­கள் எப்­போது வெளி­யா­கும் என்று மாண­வர்­கள் காத்­தி­ருப்­பார்­கள். மாண­வர்­கள் தேர்­வுக்­காக கஷ்­டப்­பட்டு படித்து தேர்வு எழு­து­கின்­ற­னர். அவர்­கள் எதிர்­பார்த்த மதிப்­பெண்­ணுக்­கும் குறை­வாக இருந்­தால், தாங்­கள் எழுதி, திருத்­திய விடைத்­தாள்­களை பார்க்க வேண்­டும் என்று நினைப்­பது இயற்­கையே.

2011ல் உச்­ச­நீதி மன்­றம் வர­லாற்று சிறப்­பு­மிக்க தீர்ப்பை வழங்­கி­யது. தக­வல் பெறும்  உரிமை சட்­டம்–2005 படி விடைத்­தாள்­க­ளும் தக­வல்­களே என்ற தீர்ப்பை வழங்­கி­யது. (சி.பி.எஸ்.சி மற்­ற­வர்­கள், எதிர் ஆதித்ய பந்­தோ­பத்யா, மற்­ற­வர்­கள். சிவில் அப்­பீல் எண் 6454/2011)

இவ்­வாறு உச்­ச­நீதி மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யி­ருந்­தா­லும் கூட, கம்­பெனி செக­ரட்­டரி படிப்பை படிக்­கும் மாண­வர் பராஸ் ஜெயின், அவ­ரது விடைத்­தாள் நகல்­களை பெற ரூ.500 கட்ட வேண்­டும் என்று அவர் படித்த ‘இன்ஷ்­டி­யூ­டிட் ஆப் கம்­பெனி செக­ரட்­ட­ரிஸ் ஆப் இந்­தியா’ வலி­யு­றுத்­தி­யது. இதை எதிர்த்து பராஸ் ஜெயின் டில்லி உயர்­நீதி மன்­றத்­தி­லும், உச்­ச­நீதி மன்­றத்­தி­லும் வழக்கு தொடர்ந்து, தனக்கு சாத­க­மான தீர்ப்பை பெற்­றார். பராஸ் ஜெயின் வழக்கு தொடர்ந்து சாத­க­மான தீர்ப்பை பெற்­ற­தால் தற்­போது பல்­க­லைக்­க­ழ­கங்­கள், தேர்வு வாரி­யங்­கள் உட்­பட தேர்வை நடத்­தும் எல்லா அமைப்­பு­க­ளும், நிறு­வ­னங்­க­ளும், தக­வல் அறி­யும் உரிமை சட்­டத்­தின்­படி மாண­வர்­கள் எழு­திய விடைத்­தாள் நகல்­களை வழங்க வேண்­டும். ஒரு பக்­கத்­திற்கு ரூ.2 என்ற கட்­ட­ணத்தை மட்­டும் வசூ­லித்து விடைத் தாள்­க­ளின் நகல்­களை வழங்க வேண்­டும்.  

2012ல் பராஸ் ஜெயின் இன்ஷ்­டி­யூ­டிட் ஆப் கம்­பெனி செக­ரட்­ட­ரிஸ் ஆப் இந்­தி­யா­வில் படித்­தார். அப்­போது தனது விடைத்­தாள் நகல்­களை கேட்­டார். தக­வல் அறி­யும் உரிமை சட்­டம் இருந்­தா­லும் கூட, அவர் படித்த இன்ஷ்­டி­யூ­டிட் ஆப் கம்­பெனி செக­ரட்­ட­ரிஸ் ஆப் இந்­தியா, விடைத்­தாள் நக­லின் ஒரு பக்­கத்தை ரூ.2க்கு கொடுக்க மறுத்­தது. விடைத்­தாள் நகல் பெற கட்­ட­ண­மாக ரூ.500 செலுத்த வேண்­டும் என்று கூறி­யது.

பராஸ் ஜெயின் படித்த நிறு­வ­னம் தக­வல் அறி­யும் உரிமை சட்­டப்­படி விடைத்­தாள்­க­ளின் நகலை கொடுக்க மறுத்த போது, அவர் டில்லி உயர்­நீதி மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­தார். இந்த வழக்­கில் அவரே நேரில் வாதிட்­டார். வழக்­க­றி­ஞர்­களை அமர்த்­திக் கொள்­ள­வில்லை. படிக்­கும் எல்லா மாண­வர்­க­ளும் வசதி படைத்­த­வர்­கள் அல்ல. அதிக கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­வ­தால், விடைத்­தாள்­க­ளின் நகல்­களை அவர்­க­ளால் பெற முடி­யாது என்று வாதிட்­டார். டில்லி நீதி­மன்­றம் இவ­ருக்கு சாத­க­மாக தீர்ப்பு வழங்­கி­யது. இதை எதிர்த்து செய்த மேல்­மு­றை­யீட்டை உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நீதி­பதி என்.வி.ரமணா,நீதி­பதி எஸ்.அப்­துல் நசீர் ஆகி­யோர் கொண்ட அமர்வு விசா­ரித்து, சென்ற ஏப்­ரல் 19ம் தேதி பராஸ் ஜெயி­னுக்கு ஆத­ர­வாக தீர்ப்பை வழங்­கி­னார்­கள். தற்­போது வழக்­க­றி­ஞ­ராக பணி­யாற்­றும் பராஸ் ஜெயின் லாஜி­கல்­இந்­தி­யன் நிரு­ப­ரி­டம் கூறு­கை­யில்,

 “ஒரு மாண­வன் அல்­லது மாணவி அவ­ரது விடைத்­தாள்­க­ளின் நகலை தக­வல் அறி­யும் உரிமை சட்­டத்­தின் படி கேட்­டால், தேர்வை நடத்­தும் அமைப்பு இந்த சட்­டப்­படி விதிக்­கப்­பட்­டுள்ள கட்­ட­ணத்தை வசூ­லித்து விடைத்­தாள் நகல்­களை வழங்க வேண்­டும். உதா­ர­ண­மாக ஒரு பக்­கத்­திற்கு இரண்டு ரூபாய் மட்­டுமே வசூ­லிக்க வேண்­டும். இனி மாண­வர்­கள், மாண­வி­கள் தங்­கள் விடைத்­தாள் நகல்­களை பெற ரூ.500, ரூ.1000 என அதிக கட்­ட­ணத்தை செலுத்த தேவை­யில்லை” என்று தெரி­வித்­தார்.

வழக்­க­றி­ஞர் பராஸ் ஜெயின், மற்­றொரு வழக்­க­றி­ஞர் குமார் சானு என்­ப­வ­ரு­டன் சேர்ந்து “வெஸ்­டில் பார் பப்­ளிக்­இன்ஸ்­டி­ரஸ்ட்” [Whistle for Public Interest. WHIP] பொது­ந­லன் பிரச்­னை­களை ஊது­தல் (கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரல்) என்ற அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். இதில் உள்ள இளம் வழக்­க­றி­ஞர்­கள் தங்­க­ளின் வாத திற­மையை மக்­கள் பிரச்­னை­களை தீர்ப்­ப­தற்­கும், அரசு அலு­வ­லங்­க­ளில் வெளிப்­ப­டை­தன்­மை­யை­யும், பொறுப்­பு­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பாடு­ப­டு­கின்­ற­னர். 2016ல் சி.பி.எஸ்.இ விடைத்­தாள்­க­ளின் நகல்­களை பெற ரூ.1,200 வரை கட்­ட­ணம் வசூ­லிப்­ப­தா­க­வும், தக­வல் உரிமை சட்­டத்­தின்­படி விடைத்­தாள்­க­ளின் நகல்­களை கொடுக்க மறுப்­ப­தா­க­வும், வெஸ்­டில் பார் பப்­ளிக்­இன்ஸ்­டி­ரஸ்ட் கவ­னத்­திற்கு வந்­தது.

இவ்­வாறு ஒவ்­வொரு வரு­ட­மும் தேர்வை நடத்­தும் அமைப்­பு­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள், நிறு­வ­னங்­கள் போன்­றவை விடைத்­தாள் நகல்­களை பெற அதிக அளவு கட்­ட­ணம் வசூ­லிக்­கின்­ற­னர். இவ்­வாறு செய்­வது லட்­சக்­க­ணக்­கான மாண­வர்­க­ளின் அடிப்­படை உரி­மை­களை மீறு­வது மட்­டு­மல்ல, உச்­ச­நீ­தி­மன்­றத்­தை­யும் அவ­ம­திப்­ப­தா­கும்.

2016ல், வெஸ்­டில் பார் பப்­ளிக்­இன்ஸ்­டி­ரஸ்ட் இணை நிறு­வ­னர் குமார் சானு, சி.பி.எஸ்.இ சேர்­ம­னுக்கு எதி­ராக நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை தாக்­கல் செய்­தார். அப்­போ­தைய உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் டிவி­ஷன் பெஞ்ச் நீதி­ப­தி­கள் ரஞ்­சன் கோகி, பி.சி.பந்த் ஆகி­யோர் கொண்ட அமர்வு, சி.பி.எஸ்.சி மற்­ற­வர்­கள், எதிர் ஆதித்ய பந்­தோ­பத்யா வழக்­கில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் உத்­த­ர­வு­களை சி.பி.எஸ்.இ சேர்­மன் கண்­டிப்­பாக கடை­பி­டிக்க வேண்­டும். தக­வல் அறி­யும் உரிமை சட்­டப்­படி விடைத்­தாள் நகல்­களை வழங்க வேண்­டும் என்று உத்­த­ர­விட்­ட­னர்.