ராசிக்கல் அணிந்தால் யோகம் வருமா? – ஜோதிடர் டாக்டர் எம்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 12 மே 2019

ஜோதிடம் பார்க்க வருபவர்கள் ஜாதகம் பார்த்து விட்டு பரிகாரத்தை இறுதியில் கேட்பார்கள். நான் என் ராசிப்படி எந்த அதிர்ஷ்டக் கல்லை நான் அணிந்தால் என்ன செய்தால், நான் பெரிய ஆளாக முடியும் அல்லது  நான் நினைத்த காரியம் நடக்கும் அல்லது நான் முன்னேற முடியும் போன்றவற்றை இறுதியாக கேட்கின்றனர்.  இன்னும் சிலர் நேரடியாகவே நான் எந்த கல் போட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கேட்கின்றனர்.

நவரத்தினங்களுக்கு சக்தி உண்டா?

ஆதி காலத்தில் அதாவது அந்த காலத்தில் கோயிலின் கருவூலத்தின் அடியில்  நவரத்தின கற்களை போட்டுவிட்டு அதன்மேல்ன் கடவுளின் சிலையை வைத்துத்தான் அபிஷேகமும் பூஜையும் செய்கின்றனர். அந்த அளவிற்கு கோயிலுக்கு சக்தியை ஊட்டக்கூடிய அளவிற்கு இந்த நவரத்தின கற்கள் பயன்தருகின்றன.

மேலும், அந்த காலத்தில் மன்னர்கள் தங்கள் கிரீடம் மற்றும் ஆடை ஆபரணங்களிலும் குறிப்பாக மோதிரத்திலும் இந்த ரத்தினங்களை பதித்து அணிகின்றனர். முன்பெல்லாம் நவரத்தின கற்களை  அரசர்களும் பெரும் செல்வந்தர்களுமே பயன்படுத்தி வந்துள்ளதை நாம் அறியலாம்.

மேலும், இதற்குச் சான்றாக சிலப்பதிகாரத்திலும், கண்ணகி கோவலன் கதையிலும் இந்த ரத்தினத்தை வைத்தே ஒரு பெரும் காப்பியமே உருவானது. நவரத்தின கற்கள் மகிமையை சாம்ராஜ்யத்தையே இழக்கக் கூடிய அளவிற்கு ரத்தினக் கற்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. ஒரு சிலர் பொதுவாகவே நவரத்தினங்களுக்கு சக்திஉண்டு என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மருத்துவத்திற்கும் ரத்தினத்திற்கும் சம்பந்தம் உண்டா?

மருத்துவத்திற்கும் ரத்தினத்திற்கும் சம்பந்தம் உண்டா  என்றால் நிச்சயம் உண்டு. எப்படி என்றால், சித்த மருத்துவத்தில் முத்துவைக் கொண்டுதான் முத்துப் பற்பம் தயார் செய்கின்றனர். அதே போன்றுதான் பவளத்தை வைத்துக் கொண்டுதான் பவளப்பற்பத்தை உருவாக்குகின்றனர். இவற்க்றைக் கொண்டு உடல் நலத்திற்குச் சிகிக்சை தருகின்றனர். சித்தர்கள் கண்டுபிடித்த சித்த மருத்துவத்திலும் இதன் பயனை நாம் அறியலாம்.

ஆங்காங்கே நவரத்தின கற்களின் கடைகளில் வெளியே ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கற்களை எதிரே எழுதி உள்ளனர்.  அதன்படி மக்கள் அணி கின்றனர் அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் கொடுத்துள்ளேன்.

மேஷம்     –    பவளம்

ரிஷபம்     –    வைரம்

மிதுனம்     –    மரகதம்

கடகம்     –    முத்து

சிம்மம்     –    மாணிக்கம்

கன்னி     –    மரகதம்

துலாம்     –    வைரம்    

விருச்சிகம்     -–    பவளம்

தனுசு     –    புஷ்பராகம்

மகரம்     –    நீலம்

கும்பம்     –    நீலம்

மீனம்     –    புஷ்பராகம்

 மேற்கண்ட பட்டியலின்படி இந்த ராசிக்கு இந்த கற்கள்தான் அணிய வேண்டும் என்று ரத்தின கடைக்காரர்கள் விளம்பர பலகைகளில் போட்டு வைத்துள்ளனர். ஆனால் அவ்வாறு நவரத்தின கற்களை அணிந்தால் நிச்சயமாக பலன் தருமா என்றால் கேள்விக்குறிதான்.

உதாரணமாக, மேஷ ராசி நபர்கள் 3 பேரை எடுத்துக் கொள்வோம் .மேற்கண்ட அட்டவணைப்படி மேஷ ராசிக்கார அன்பர்கள் மூன்று பேரும் பவளத்தை அணிந்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது என்றே சொல்லலாம்.

எப்படியெனில் மூன்று பேரில்  ஒருவருக்கு மிக உயர்ந்த நற்பலன்களும், மற்ற இருவர்களில் ஒருவருக்கு சாதாரண பலன்களும் மீதம் உள்ள ஒரு நபருக்கு மாறாக தீமையான பலன்களும் நடக்கும்.

‘‘எனது ராசிக்கேற்ற கற்கள் தானே அணிந்தேன்? அப்படி இருந்தும் ஏன் என் வாழ்வில் நற்பலன்கள் நடக்கவில்லை?’’ என்று பலர் அச்சப்பட்டும் கேட்கின்றனர். பொதுவாக ராசிக்கற்கள் பயன் தரும் என்பது உண்மையா என்றும் கேட்கின்றனர்.

இன்னும் சிலர் உங்கள் எண் கணிதப்படி அதாவது நியூமராலஜிபடியும் மற்றும் பெயரியல்படியும் கற்களை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வதால் அதிர்ஷ்டங்களை அள்ளித் தர இயலும் என்றும் ஆங்காங்கே ஒரு சில ஜோதிடர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அந்த அட்டவணையும் கீழே கொடுத்துள்ளேன்.

எண்கணிதப் படி ராசிக்கல் அணியும் முறை

எண் கணிதப்படி நவரத்தின கற்கள்:

1 10 19 28    –    மாணிக்கம்

2 11 20 29    –    முத்து

3 12 21 30    –    புஷ்பராகம்

4 13 22 31    –    கோமேதகம்

5 14 23    –    மரகதம்

6 15 24     –    வைரம்

7 16 25    –    வைடூரியம்

8 17 26     –    நீலம்

9 18 27     –    பவளம்

தொடர்ச்சி அடுத்த இதழில்