தேனீக்களை முடக்கும் பூச்சி மருந்துகள்!

பதிவு செய்த நாள் : 12 மே 2019

தாவ­ரங்­கள் செழிக்க உத­வும் தேனீக்­க­ளுக்கு உணவு, தேன். அந்­தத் தேனை எடுக்க அவை வெகு­துா­ரம் பறந்து சென்று கூட்­டுக்­குத் திரும்ப வேண்­டும். தேனீக்­கள், பூக்­க­ளி­லி­ருந்து தேனை எடுக்­கை­யில், பூக்­க­ளின் மக­ரந்­தங்­க­ளை­யும் சுமந்து, பரப்­பு­கின்­றன.

இந்த இரண்டு செயல்­க­ளுக்­கும் வேட்டு வைப்­பவை, பூச்சி மருந்­து­கள். பயிர்­க­ளில் துாவப்­ப­டும் பூச்சி மருந்­து­களை தெரி­யா­மல் உண்­ப­தால், தேனீக்­க­ளின் பறக்­கும் திறன் குறை­வ­தோடு, பறக்­கும் துார­மும் குறை­கி­றது என, லண்­ட­னைச் சேர்ந்த இம்­பீ­ரி­யல் கல்­லுாரி விஞ்­ஞா­னி­கள் கண்­ட­றிந்­துள்­ள­னர்.

அவர்­க­ளது ஆய்­வின்­படி, பூச்­சிக்­கொல்­லி­க­ளில் உள்ள நிகோ­டி­னாய்டு என்ற நச்­சுக்­களை தேனீக்­கள் உட்­கொள்ள நேர்­வ­தால், அவற்­றின் பறக்­கும் பரப்­ப­ளவு, 80 சத­வீ­தம் வரை குறைந்­து­வி­டு­கின்­றன. இத­னால் தாவ­ரங்­க­ளுக்­கி­டையே நிக­ழும் அயல்­ம­க­ரந்­தச் சேர்க்­கை­யும் வெகு­வா­கக் குறைந்­து­

வி­டும் என, விஞ்­ஞா­னி­கள் கரு­து­கின்­ற­னர்.