டி.வி.பேட்டி: .தமிழ் கற்கிறேன் ! – வீணா

பதிவு செய்த நாள் : 12 மே 2019

* ‘‘சிவா மன­சுல சக்­தி’’­யில் (விஜய் டிவி) ‘பைர­வி’­யாக நெகட்­டிவ் கேரக்­ட­ரில் மிரட்டி வரு­ப­வர் வீணா.

* அவ­ரு­டைய முழு பெயர், வீணா பொன்­னப்பா.

* ஜன­வரி 6, 1990ல் பிறந்­தார்.

* கர்­நா­டக மாநி­லத்­தி­லுள்ள கொடகு அவ­ருக்கு பூர்­வீ­கம்.

* ஆனால், அவர் இப்­போது வசிப்­பதோ, மைசூ­ரில்.

* 5 அடி 3 அங்­கு­லம் உய­ரத்தை கொண்­ட­வர்.

* அவ­ரு­டைய வெயிட், 59 கிலோ.

* மடி­கே­ரி­யி­லுள்ள புனித ஜோசப்ஸ் கான்­வென்ட்­டில் பள்­ளிப்­ப­டிப்பை முடித்­தார்.

* உஜி­ரே­யி­லுள்ள எஸ்.டி.எம். கல்­லூ­ரி­யில் பட்­டப்­ப­டிப்பை பயின்­றார்.

* 2013ல் ‘‘சிஐடி கர்­நா­டகா’’ கன்­னட சீரி­ய­லில் அறி­மு­க­மா­னார். அதில் சிஐடி கேரக்­ட­ரில் நடித்து பிர­ப­ல­மா­னார்.

* அதன்­பின் ‘‘பிலி ஹென்ட்தி’’ சீரி­ய­லில் மிடுக்­கான போலீஸ் கேரக்­ட­ரில் நடிக்­கும் வாய்ப்பை பெற்­றார். அதை­ய­டுத்து ‘‘ஹர­ஹர மகா­தேவா’’, ‘‘கின்­னரி’’, ‘‘புட்­மல்லி’’, ‘‘வாரஸ்­தாரா’’ போன்ற கன்­னட சீரி­யல்­க­ளில் நடித்­தார்.

* ‘‘அம்பி நிங்க் வய­சாய்த்தோ’’, ‘‘சீதா­ராமா கல்­யாணா’’ போன்ற கன்­னட படங்­க­ளி­லும் நடித்­தி­ருக்­கி­றார்.

* ஜீ தமி­ழில் ஒளி­ப­ரப்­பான ‘ஸ்ரீ விஷ்ணு தசா­வ­தா­ரம்’’ தமி­ழில் டப் செய்­யப்­பட்ட தெலுங்கு சீரி­ய­லில் மோகி­னி­யாக நடித்­தி­ருக்­கி­றார்.

* தற்­போது ‘‘நா பேரு மீனாட்சி’’ தெலுங்கு சீரி­ய­லி­லும் நடிக்­கி­றார்.

* வீணா­வின் ஹாபி, டிரா­வல் பண்­ணு­வ­து­தான்.

* தாய்­மொழி கன்­ன­டம் தவிர தெலுங்கு, ஆங்­கில மொழி­கள் தெரி­யும். தமிழ் தெரி­யாது. கற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றார்.

* தமிழ் படத்­தில் நடிப்­ப­தற்கு மிக­வும் ஆசை­யாம்!

 – இரு­ளாண்டி