பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 86

பதிவு செய்த நாள் : 12 மே 2019

சிவா­ஜியை இயக்கி வெற்­றி­கள் கொடுத்­துக்­கொண்­டி­ருந்த ஸ்ரீதர், ‘உரி­மைக்­கு­ரல்’ மூலம் எம்.ஜி.ஆரை இயக்­கத் தொடங்­கி­னார். இத­னால் நட்­சத்­திர யுத்­தத்­தில் சிக்­கிக்­கொண்­டார் ஸ்ரீதர். அப்­போது அந்த யுத்­தத்­தில் தலை­யைக் கொடுக்­கா­மல் பாது­காப்­பா­கக் கள­மா­டிக்­கொண்­டி­ருந்­தார் கோபு. நண்­பர்­கள் இரு­வ­ரும் பிரிந்து விட்­ட­தா­கவே பல பத்­தி­ரி­கை­கள் எழுதி வந்த நேரத்­தில், விழா ஒன்­றில் சந்­தித்­துக்­கொண்ட கோபு­வும் ஸ்ரீத­ரும் நீண்ட நேரம் பேசிக்­கொண்­டார்­கள்.

 அப்­போது கோபு, ஸ்ரீத­ரி­டம் ‘உரி­மைக்­கு­ரல்’ வெற்­றிக்கு வாழ்த்­துக்­கள் ஸ்ரீ. நீ ஏன் சிவாஜி அண்­ண­னு­டன் சம­ர­சம் செய்து கொண்டு பாதி­யி­லேயே நிற்­கும் ‘ஹீரோ 72’ படத்தை முடிக்­கக் கூடாது? எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேரை­யும் இயக்­கி­னால் உனக்­குப் பெரு­மை­தானே?’ என்று கேட்­ட­வு­டனே ஸ்ரீதர், அந்த யோச­னையை ஏற்­றார்.

‘ஹீரோ 72’ படத்­தின் பெயரை ‘வைர நெஞ்­சம்’  என்று மாற்றி, மீதி­யி­ருக்­கும் தேதி­க­ளுக்­காக படப்­பி­டிப்பை நடத்­தப்­போ­வ­தாக அறி­விக்க, சிவா­ஜி­யும் வருத்­தங்­க­ளை­யெல்­லாம் விட்­டு­விட்டு ஸ்ரீத­ருக்கு கால்­ஷீட் கொடுக்க ‘வைர நெஞ்­சம்’ 1975 நவம்­பர் 2 அன்று வெளி­யாகி ஸ்ரீதர், இரண்டு சூப்­பர் ஸ்டார்­க­ளுக்­கும்  பொது­வான இயக்­கு­நர் என்ற உண்­மையை உறுதி செய்­தது.

‘வைர நெஞ்­சம்’ படத்­தின் போது சித்­ரா­ல­யா­வுக்கு நிதி நெருக்­கடி கார­ண­மாக ஒரு லட்ச ரூபாய் வரை எனக்­குப் பணம் தேவைப்­பட்­டது. வீனஸ் கிருஷ்­ண­மூர்த்தி  பஞ்­சா­பி­லி­ருந்த ஒரு பைனான்­சி­ய­ரி­ட­மி­ருந்து  அதற்கு ஏற்­பாடு செய்­தார். படம் முடி­வ­டைந்து ரிலீ­சுக்­குத் தேதி குறித்­தா­கி­விட்­டது.

ஜெமினி கலர் லேபில் படத்­தின் பிரிண்ட்­கள் தயா­ரா­கி­விட்­டன. படத்­தின் பைனான்­சி­யர் தனக்கு வர­வேண்­டிய பணம் வந்­து­விட்­டது, படத்­தின் பிரிண்ட்­களை எடுத்­துச் செல்ல அனு­ம­திக்­க­லாம் என்று அனு­மதி கடி­தம் கொடுத்­தால்­தான் பிரிண்ட்­கள் வெளியே வர­மு­டி­யும் என்­கிற நிலைமை.

பத்து நாட்­கள் முன்­பி­ருந்தே கிருஷ்ண மூர்த்­தி­யி­டம் பைனான்­சி­யர் பணத்தை செட்­டில் செய்து விட­லாம், எவ்­வ­ளவு பணம் தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டி­ருந்­தார் ஸ்ரீதர்.

பைனான்­சி­ய­ரைப் பார்க்க முடி­ய­வில்லை, கணக்கு பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்று பதில் சொன்­னார் கிருஷ்­ண­மூர்த்தி!

அவர் உத­வி­யா­ளர் கிட்­டு­வும் அதே பதிலை சொல்லி டென்­ஷ­னாக்­கிக் கொண்­டி­ருந்­தார்.  படம் ரிலீ­சாக இன்­னும் இரண்டே இரண்டு நாட்­கள். பைனான்­சி­ய­ரின் பண விஷ­யம் செட்­டில் ஆகா­மல், படத்­தின் பிர­தி­கள் ‘லேபி­லேயே இருந்­தன. ஏற்­க­னவே படத்­த­யா­ரிப்­பில் அடி மேல் அடி வாங்­கி­யி­ருந்த நான் கையைப் பிசைந்­த­படி, வக்­கீல் என். சி. ராக­வாச்­சா­ரியை நாடி­னேன்.

 அவர் உட­னடி நட­வ­டிக்­கை­யில் இறங்கி ஒரு வழக்கு போட்டு, ஜெமி­னி­யில் ஒரு லட்ச ரூபாய் கட்­டி­விட்டு, பிர­தி­களை எடுத்­துச் செல்ல கோர்ட் உத்­த­ரவு பெற்­றுத் தந்­தார்.  நானும் பணம் கட்­டி­னேன்.

 அடுத்த சில மணி நேரங்­க­ளில்  கிட்­டு­வி­ட­மி­ருந்து டெலி­போன் வந்­தது.  பைனான்­சி­ய­ருக்கு அச­லும் வட்­டி­யு­மாக ஒரு லட்­சத்து 42 ஆயி­ரம் ( எழு­ப­து­க­ளில் நடந்­தது. இன்­றைய பல கோடி­க­ளுக்கு சமம்).

ஸ்ரீத­ருக்கு அதிர்ச்சி!

‘எப்­படி அவ்­வ­ளவு ஆகும்  என்று கேட்­டால் ‘அது அப்­ப­டித்­தான்’  என்­றார் கிருஷ்­ண­மூர்த்தி.

 ‘நான் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கும் இந்த விஷ­யத்­தில் நீங்­கள் ஏன் கோர்ட் வரை போனீர்­கள்?  பைனான்­சி­யர் கோப­மாக இருக்­கி­றார்’ என்­றார். ஸ்ரீத­ருக்கு வேறு வழி தெரி­ய­வில்லை.

 படம் ரிலீஸ் ஆன­துக்கு அப்­பு­றம் ஆறு மாதங்­கள் வரை கேஸ் நடந்­தது. அசல் லட்ச ரூபா­யு­டன் நியா­ய­மான வட்­டி­யோடு தர­வேண்­டும்’ என்று கோர்ட்­டில் தீர்ப்பு ஆகி­யது. நானும் பணத்தை செட்­டில் செய்­தேன்.

ஆரம்ப காலம் முதல் அண்­ணன் – தம்­பி­யாய் பழகி வந்த நாங்­கள் இரு­வ­ரும் ஒரு­வர் மற்­ற­வ­ரு­டைய உயர்­வி­லும் தாழ்­வி­லும்  தோளோடு தோளாய் நின்ற கிருஷ்­ண­மூர்த்தி இடை­யில்  இப்­படி நடந்து கொண்­ட­தில் இன்­னும் எனக்கு வருத்­தம் உண்டு.

 எம்.ஜி.ஆரும் நானும் இணைந்து பணி­யாற்­றிய ‘உரி­மைக்­கு­ரல்’ பிர­மாத வெற்றி அடைந்­த­தன் விளை­வாக, மறு­ப­டி­யும் இதே காம்­பி­னே­ஷ­னில் படம் எடுக்­கத் தீர்­மா­னித்­தோம். ‘நானும் ஒரு தொழி­லாளி’  என்­பது புதிய படத்­துக்கு நான் கொடுத்த தலைப்பு!

எம்.ஜி.ஆரி­டம் பூரண ஒத்­து­ழைப்­புத் தர, இரண்டு நாட்­கள் படப்­பி­டிப்பு நடந்­தது.  இந்­தக் கட்­டத்­தில் எனக்கு ஒரு தயக்­கம் வந்­தது. எம்.ஜி.ஆரி­டம் போய் ‘ என்­னவோ, கதை திருப்­தி­யாக அமை­யா­தது போலவே ஒரு எண்­ணம் இருந்­துக்­கிட்­டி­ருக்கு.  இந்த நிலை­யில் படப்­பி­டிப்பு தொடர்­வது சரி­யா­கத் தோணலை’ என்­றேன்.

 அவ­ரும் அதை ஏற்­றுக்­கொண்டு, ‘அதுக்­கென்ன’ வேறு கதை ரெடி பண்­ணுங்க. கொஞ்ச நாள் போகட்­டும். மறு­படி படப்­பி­டிப்பு ஆரம்­பிக்­க­லாம்’ என்று லேசாக எடுத்­துக்­கொண்டு பேசி­னார்.

 இதற்­குள் ஸ்ரீதர் மூன்றே மூன்று கதா­பாத்­தி­ரங்­க­ளு­டன் ஒரே ஒரு இண்­டோர், ஒரே ஒரு அவுட்­டோர் என்று நிலை­களை உரு­வாக்கி புது­மை­யான ஒரு கதை தயார் செய்­தார்.

‘ இது தமி­ழில் எடு­ப­டாது’ என்று ஸ்ரீத­ருக்­குத் தோன்­றி­யது.

கார­ணம், அவ­ளுக்­கென்று ஓர் மனம்,’  ‘அலை­கள்’ போன்ற ஸ்ரீத­ரின் படங்­கள் கடு­மை­யாக தோல்­வி­ய­டைந்­தன. ‘அலை­கள்’ படத்­தில் கதா­நா­ய­க­னான  செல்­வ­கு­மார் என்ன ஆனார் என்­பதே தெரி­ய­வில்லை.

 ‘அதே கண்­கள்’ படத்­தின் வில்­லன் வசந்­த­கு­மார் போல, அவர் அந்த ஒரு படத்­தோடு சரி! இத்­த­னைக்­கும் ‘ அதே கண்­கள்’ பெரிய வெற்­றிப்­ப­டம். ஏவி.எம். தயா­ரித்­தது.

 இந்த மூன்று பேர் கதையை தெலுங்­கில் நாகேஸ்­வ­ர­ராவை வைத்து எடுக்­க­லாமா என்று ஸ்ரீத­ருக்­குள் ஏகப்­பட்ட மனக்­கு­ழப்­பம்.

 ‘ இது சரி­ப­டாது’ என்று விட்­டு­விட்­டார்.

 கன்­ன­டத்­தில்  அப்­போது ‘கிளாஸ்’ படங்­கள் நிறைய வந்து கொண்­டி­ருந்­தன. எனவே, என் மூன்று கேரக்­டர்­களை கொண்ட கதை­யைக் கன்­ன­டத்­தில் எடுக்க தீர்­மா­னித்­தார் ஸ்ரீதர்.

இந்­தப் படத்தை எடுக்க வீனஸ் பிக்­சர்ஸ் பெங்­க­ளூரு விநி­யோ­கஸ்­தர்­களை சந்­தித்து ‘ முத­லீடு செய்ய முடி­யுமா ?  விநி­யோக உரி­மையை எடுக்க முடி­யுமா?’  என்று கேட்டு வர நினைத்­தார் ஸ்ரீதர்.

 மறு­நாள் காரில் பெங்­க­ளூரு புறப்­பட்­டார். நண்­பர் சார­தி­யு­டன் பெங்­க­ளூரு கிளம்­பி­னார். மறு­நாள் அங்­கி­ருந்து காரில் புறப்­பட்­டோம். பெங்­க­ளூ­ரு­வில் காந்தி நகர் என்ற பகு­தி­யில் சினிமா விநி­யோ­கக் கம்­பெ­னி­கள் நிறைய உண்டு. அந்­தப் பக்­கம் கார் செல்­லும் போது ஈஸ்­வரி பிக்­சர்ஸ் என்ற போர்டு கண்­ணில் பட்­டது. உடனே சாரதி ஒரு விஷ­யத்­தைச் சொன்­னார்.

(தொட­ரும்)