பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 12–5–19

பதிவு செய்த நாள் : 12 மே 2019

இலங்­கை­யில் நடந்த வெடி­குண்டு சம்­ப­வங்­களை பார்த்­த­போது துக்­கம் நெஞ்சை அடைக்­கத்­தான் செய்­கி­றது. இது கிறிஸ்­த­வர்­கள் மீது திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்ட தாக்­கு­தல். ஏன், எதற்கு இந்­தத் தாக்­கு­தல் என்று ஆராய்ந்­த­போது பல திடுக்­கி­டும் உண்­மை­கள் இருக்­கத்­தான் செய்­கின்­றன.

 இஸ்­லாம் ஒரு அன்­பான, நேச­மான, நேர்­மை­யான மதம். ஆனால் அந்த மதத்­தின் பேரால் ஒரு வெறி கொண்ட பிரி­வி­ன­ருக்கு இப்­போது இரண்டு நோக்­கங்­கள்.  முத­லில் கிறிஸ்­த­வர்­களை விட உல­கத்­தில் இஸ்­லா­மி­யர்­க­ளின் ஜனத்­தொகை அதி­க­மாக இருக்க வேண்­டும். 2.  தேவைப்­ப­டும்­போது அவர்­களை கொல்­வது. இது  ஆசி­ய­ப­கு­தி­க­ளில் தனது ஆதிக்­கத்தை அதி­க­ரிக்க சீனா நடத்­தும் ஒரு  நிழல் யுத்­தமோ என்று சந்­தே­கிக்­கா­ம­லும் இருக்க முடி­ய­வில்லை. ஆசி­யா­வில் நடக்­கப்­போ­கும்  உச்­சக்­கட்ட போர் இந்­தியா – சீனா போர்­தான் என்று பல புத்­த­கங்­க­ளில் நான் படித்­தி­ருக்­கி­றேன்.  முத­லில் சீனா­வைப் பற்றி இந்த தலை­முறை கொஞ்­ச­மா­வது தெரிந்து கொள்ள வேண்­டும்.

புதிய சீனா பற்­றிய சில தக­வல்­கள்:

*    ஒரு இனத்­தின் விடு­தலை உணர்ச்சி மக்­க­ளோடு மக்­க­ளாக இரண்­ட­றக் கலக்கு மானால், அந்த விடு­தலை உணர்ச்­சியை எந்த வல்­லா­திக்க அர­சு­க­ளா­லும் அடக்க முடி­யாது என்­ப­தைக் கண்­க­ளுக்­குக் கண்­ணாடி போட்டு காட்­டும் வர­லாறு.

* உல­கத்­தில் வாழ்­வி­ழந்து நிற்­கும் இனங்­க­ளுக்­கும், வாழத்­து­டிக்­கும் இனங் களுக்­கும் பாட­மாக அமைந்த இனத்­தின் வர­லாறு.

*  மக்­க­ளுக்­காக மக்­களே முன்­னெ­டுக்­கும் புரட்­சியே நிலைத்து நிற்­கக்­கூ­டி­யது என்­பதை உல­கிற்­குக் காட்­டும் உண்மை வர­லாறு.

* மக்­க­ளின் பலத்தை மக்­கள் மொழி­யில் பேசி விடு­தலை உணர்வை உயிர்ப்பு நிறைந்த வேகத்­தோடு உலக வல்­ல­ர­சு­க­ளின் பலத்­துக்கு இணை­யாக வளர்த்­தெ­டுத்த நாட்­டின் வீர வர­லாறு.

* பள்­ளி­யுண்டு படிப்­புண்டு என்­றி­ருந்த சீன  மாண­வர்­கள் படிப்பை தூக்­கி­யெ­றிந்து விட்டு படை­யில் சேர்ந்து ‘ புதிய சீனா’ எனும் புரட்சி மாளி­கை­யைக் கட்­டி­ய­மைத்த வர­லாறு.

* சமு­தாய சீர­ழி­வு­க­ளின் இருப்­பி­ட­மாக இருந்த பிற்­போக்­குக் கூடா­ரங்­க­ளி­லி­ருந்து முற்­போக்கு எண்­ணம் கொண்ட இளஞ்­சீ­னர்­கள் செயல் செய்­யப்­பு­றப்­பட்டு மெய்ப்­பித்­துக் காட்­டிய புதிய சீனா­வின் வர­லாறு.

* பழ­மை­யும் – புது­மை­யும் இணைந்த சீனப் பேரி­னத்தை உலக வல்­ல­ர­சு­க­ளின் நடு­வில் தலை­நி­மிர்ந்து நடக்க வைத்த இளை­ய­வர் இயக்­கத்­தின் வீர வர­லாறு.

* உயிர்த்­து­டிப்­பும் உன்­னத வாழ்­வும், வாழ்ந்து உழைப்­புக்கு  உயர்வு தந்து உல­கத்­துக்கு முன்­னோ­டி­யாக வாழும் பழம்­பெ­ரும் இனத்­தின் வர­லாறு.

*  பழம் பெருமை பேசிப் பய­னில்லை. விழிப்­பு­ட­னி­ருக்­கும் இனத்­துக்­குத்­தான் வாழ்­வுண்டு என்­பதை உணர்த்­தும் மூத்த இனத்­தின் வர­லாறு.

* வல்­லா­திக்க நாடு­க­ளில் கையாட்­டிப் பொம்­மை­யாக இருந்த சீன முடி­ய­ர­சுக்கு எதி­ராக மக்­க­ளுக்கு அர­சி­யல் அறிவை ஊட்டி குடி­ய­ரசு மாளி­கையை எழுப்­பிய ‘ புதிய சீனா’ எனும் பெரு­நி­லம் பழுத்த வர­லாறு.

*  துரத்தி வரும் பீரங்­கிப்­ப­டை­க­ளை­யும், வான்­ப­டை­க­ளை­யும் துச்­ச­மென மதித்து லட்­சி­யப் பய­ணத்­தில் ஒரு­மித்த குர­லு­டன் கைகோர்த்து நின்று வீரப்­போர் புரிந்த இனத்­தின் வர­லாறு.

* ஒரு நாட்­டின் விடி­ய­லுக்கு நூல­றி­வும் – உடல் வலி­வும் தேவை என்­பதை உணர்ந்து, கல்வி அறி­வோடு புத்­து­ணர்ச்­சியை குழைத்­துக் காட்­டிய புது­ம­லர்ச்சி இயக்­கத்­தின் வர­லாறு.

* அக­வாழ்­வி­லும் புற­வாழ்­வி­லும் பழம் பெரு­மை­மிக்க சீன நாக­ரீ­கம் சிதை­வுற்ற போது அதன் மறு­வாழ்­வுக்கு வழி­ய­மைத்து புத்­தெ­ழுச்சி ஊட்­டிய புதிய சீனா­வின் வர­லாறு.

* கல்வி, அச்சு, தாள், பீங்­கான், பட்டு, வெடி­ம­ருந்து, காந்த ஊசி,  போன்ற வற்றை உரு­வாக்கி உலக நாக­ரீ­கத்­துக்கு முன்­னோடி யாகத் திகழ்ந்த புதிய சீனா­வின் வர­லாறு.

* நாட்­டில் நல்­ல­வர்­க­ளும் உண்டு, தீய­வர்­க­ளும் உண்டு. கெட்­ட­வர்­களை ஓங்க விடா­மல் நல்­ல­வர்­களை உய­ரச் செய்­வ­தற்­காக எழு­தப்­பட்ட நாட்டு வர­லாறு.

* ஒரு இனம் தன் உரி­மை­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­காக சொல்­லொ­ணாத் துய­ரங்­களை, துன்­பங்­களை நீந்­தித்­தான் ஆக­வேண்­டும் என்­ப­தைக் காட்­டும் வர­லாறு.

*  ஆண்ட இனத்­துக்­கும், (மஞ்சு இனம்) ஆளப்­பட்ட சீன இனத்­துக்­கும் ஏற்­பட்ட மோதல்­க­ளும், பழமை படிந்த தனது நாட்­டின் மீது புதுமை எண்­ணங்­கள் மூலம் அர­சி­யல் பால் புகட்­டிய சன்­யாட்­சென் மாபெ­ரும் தலை­வ­னா­க­வும் தந்­தை­யா­க­வும் போற்­றப்­பட்ட வர­லாறு.

* இனப்­பற்­றும் – மொழிப்­பற்­றும்– நாட்­டுப்­பற்­றும் தியாக உணர்­வும் – சீன வாழ்க்­கை­யும் நிரம்­பி­ய­வர்­கள் எண்­ணிக்­கை­யில் குறைந்­த­வர்­க­ளாக இருப்­பி­னும், அரும்­பெ­ரும செய­லைச் செய்ய முடி­யும் என்­பதை உல­குக்­குக் காட்­டும் வர­லாறு.

* பல்­வேறு அடிமை ஒப்­பந்­தங்­களை பிரிட்­டன், பிரான்ஸ், ஜெர்­மனி, உரு­சியா, அமெ­ரிக்கா, ஜப்­பான் ஆகிய வல்­லாட்சி சுரண்­டல் நாடு­கள் விழித்­தெ­ழுந்து நாட்டை மீட்­டெ­டுத்த வர­லாறு.

1. சீனா­வின் ( 1.10.1949)ல் மாசே­துங் தலை­மை­யில் பொது­வு­டைமை ( கம்­யூ­னிஸ்டு) ஆட்சி நிறு­வப்­பட்­டது வரை­யுள்ள வர­லாறு அந்­நாட்டு வர­லாறு. அதற்­குப் பின்­னர் கடந்த  57 ஆண்­டு­க­ளில் நடந்­த­வற்­றைப் பற்­றிச் சுருக்­க­மாக சில செய்­தி­களை காண்­போம்.

2. 1950-–53ல் நடை­பெற்ற கொரி­யப் போரில் வட­கொ­ரி­யா­வுக்கு ஆத­ர­வாக சீனா, போரிட்டு அமெ­ரிக்க அர­சின வல்­லாண்­மையை தடுத்து நிறுத்­தி­யது. 1950லேயே சீனா திபெத் நாட்­டிற்­குள் தன் படையை அனுப்பி தன் நேரடி ஆட்­சிக்­குள் கொண்டு வந்­தது.  1959ல் தலாய் லாமா இந்­தி­யா­விற்கு ஓடி வந்­து­விட்­டார். 57-–58லிருந்து சீனா­வுக்கு உரு­சி­யா­வுக்­கும் இணக்­க­மான உறவு அற்­று­விட்­டது. 60க்குப் பின் உரு­சிய வல்­லு­னர்­கள் சீனாவை விட்­டுச் சென்று விட்­ட­னர்.

3. 1958-–62 ஆண்­டு­க­ளில் முன்­னேற்­றப் பெரும் புரட்­சியை  GREAT LEAP FORWARD  சீன அரசு செயல்­ப­டுத்­தி­யது. 1930களில் உரு­சி­யா­வில் ஸ்டாலின் செய்­தது போல் வேளாண்­மை­யில் கூட்­டுப் பண்ணை அதா­வது கொம்­யூன் முறை ( ஒவ்­வொன்­றும் சுமார் 10ஆயி­ரம் ஏக்­கர்; 5ஆயி­ரம் குடும்­பங்­கள்) புகுத்­தப்­பட்­டது. ‘நமது நாட்­டுக்­குப் பொருத்­தம் நாமே நடத்­தும் கூட்­டுப் பண்ணை விவ­சா­யம்’ என்று எண்ணி  புகுத்­தப்­பட்ட இம்­முறை உரு­சி­யா­வில் வெற்­றி­ய­டை­யா­தது போலவே சீனா­வி­லும் வெற்­றி­ய­டை­ய­வில்லை.

 1980க்குப் பின்­னர் மீண்­டும் உழ­வர்­க­ளின் தனி­யு­ரி­மை­களை மதிக்­கும் செயல்­பா­டு­கள் சீனா­வில் தொடங்கி, 1990க்குப்­பின் மேலும் விரி­வா­கி­யுள்­ளன. முன்­னேற்­றப் பெரும் புரட்­சிக் காலத்­தில் உண­வுப் பற்­றாக்­குறை கார­ண­மா­க­வும் பிற கார­ணங்­க­ளி­னா­லும் சீனா­வில் இறந்­த­வர்­கள் தொகை சுமார்  3 கோடி. எனி­னும் இக்­கா­ல­கட்­டத்­தில் ஓர­ளவு தொழில், பொரு­ளா­தார துறை­க­ளில் முன்­னேற்­றம் ஏற்­பட்­ட­தும், சீனா வல்­ல­ரசு ஆன­தும் உண்­மை­தான்.

4.1962ல் சீனா இந்­தி­யா­வின் வட­கி­ழக்­கில் அரு­ணா­ச­லப் பிர­தே­சம் மீது படை­யெ­டுத்­தது. ஆயி­னும் விரை­வில் போர் நிறுத்­தம் ஏற்­பட்­டது. அண்மை ஆண்­டு­க­ளில் இந்­தி­யா­வின் வட­கி­ழக்­குப் பகுதி, காஷ்­மீ­ரின் லடாக் பகு­தி­கள் பற்றி இந்­தி­யா­வுக்­கும் சீனா­விற்­கும் இடை­யே­யுள்ள சச்­ச­ர­வைத் தீர்க்க முயற்­சி­கள் நடந்து வரு­கின்­றன. புத்த ஈன்ற நாடும், பெரும் எண்­ணிக்­கை­யில் புத்த சம­யத்­த­வர் வாழும், நாடும் நல் காலத்­தி­லா­வது இணக்­கத்­து­டன் வாழ முற்­ப­டுமா என்­பது தான் பல­ரின் ஏக்­க­மா­கும்.

5.முன்­னேற்­றப் பெரும் புரட்­சி­யா­னது மேலி­ருந்து கீழே (அதா­வது பொது­வு­டைமை கட்­சித் தலை­மை­யும் அர­சும் கட்­ட­ளை­யிட்டு) செயல்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்கு நேர்­மா­றாக  ‘கீழி­ருந்து மேல்’ (தலை­மையை நொறுக்கு- BOMBARD THE HEADQUARTERS) என்ற கோட்­பாட்­டில் மாபெ­ரும் புரட்சி ( the great revolution) 1966 மே முதல் 1969 முடிய மூன்று ஆண்­டு­க­ளில் செயல்­ப­டுத்­தி­னார் தலை­வர் மா.சே. துங். கட்­ட­விழ்த்து விடப்­பட்ட செங்­கொடி ஏந்­திய இளை­ஞர்­க­ளுக்கு முழு அதி­கா­ரம் தரப்­பட்­டது. அறிவு அனு­ப­வம், கட்­டுப்­பாடு இல்­லாத இந்த விட­லை­யர்­கள் கையில் சிக்கி பல­கோடி சீனர்­கள் அடி, உதை, சித்­ர­வதை, மர­ணம், பொருள் இழப்பு ஆகி­ய­வற்­றுக்கு ஆளா­யி­னர். குரங்­குக் கையில் கிடைத்த பூமாலை போல் அர­சி­லும், கட்­சி­யி­லும், ஆட்­சி­யி­லும் நாடு முழு­வ­தும் பெருங்­கு­ழப்­பம் ஏற்­பட்­டது. ராணு­வம் மட்­டுமே இப்­பு­ரட்­சி­யின் நேரடி மற்­றும் மறை­முக பாதிப்­பால் ஏறத்­தாழ 4 கோடி சீனர்­கள் மடிந்­த­னர் என்று கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

6.  அமெ­ரிக்க குடி­ய­ர­சுத் தலை­வர் நிக்­சன் சார்­பில் 1971ல் கிசிங்­கர் சீனா சென்று மாசே­துங்கை சந்­தித்­தார். 1972ல் நிக்­சனே மாசே­துங்கை சந்­தித்­தார். அதற்­குப் பின் படிப்­ப­டி­யாக சீனா – அமெ­ரிக்க உறவு வளர்ந்து வந்­துள்­ளது.  மாசே­துங் 09-.09.1976ல் இறந்த பின்­னர், மாசே­துங்­கின் மனைவி ஜியாங்­கு­யில், மற்­றும் அவ­ரு­டைய மூன்று நண்­பர்­கள் ஆகிய நால்­வர் கும்­பலை டெங் சியா­பிங் கைது செய்து அடக்­கி­விட்டு டெங்க் சியோ­பிங் சாத­க­மா­ன­வர்­கள் மட்­டுமே ஆட்­சி­யைப் பிடித்­த­னர். இதில் நடு­வி­லி­ருந்து 1993 வரை டெங் சியோ­பிங் தலை­மை­யில் பொது­வு­டைமை கட்சி தலைமை அமைப்­பின் நிலக்­குழு உறுப்­பி­னர் அறு­வ­ரி­டம் ஆட்­சி­யின் தலைமை அதி­கா­ரம் இருந்­தது.

சீனா கதை­யின் அடிப்­படை இது­தான். நாள­டை­வில் சீனா­வைப் பற்றி பேச­வேண்­டிய அவ­சி­யம் நிச்­ச­யம் வரும்.                  ***