மாறி­யது நெஞ்­சம்!

பதிவு செய்த நாள் : 10 மே 2019

திரு­வா­ரூர் மாவட்­டம், திருத்­து­றைப்­பூண்டி, அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1962ல், 4ம் வகுப்பு படித்­தேன். அப்­போது, மாண­வர்­க­ளி­டம் ஒரு வினோத பழக்­கம் உண்டு!

சட்­டை­யில், கீழ் பட்­டன்­களை மட்­டும் போட்டு, மேலுள்ள சில பட்­டன்­களை கழட்டி, காலரை துாக்­கி­விட்­ட­படி, மார்பை நிமிர்த்தி நடப்­பர்.

இது, ஆசி­ரி­யர்­க­ளுக்கு பிடிக்­காது. அந்த மாண­வர்­களை, கெட்ட வார்த்­தை­யால் திட்டி, அடி­யும் கொடுப்­பர்; நானும் இதற்கு விதி­வி­லக்­கல்ல.

அப்­போது, அறி­வி­யல் பாட ஆசி­ரி­யாக பால­சுப்­பி­ர­ம­ணி­யன் புதி­தாக பொறுப்­பேற்­றி­ருந்­தார். மன­தைக் கவ­ரும் வகை­யில் பாடம் நடத்­து­வார். ஒரு­நாள் என்னை அழைத்து, 'தம்பி... நமக்கு தேவை, திறந்த மார்பு அல்ல... திறந்த நெஞ்­சமே! முத­லில் பட்­ட­னைப்­போடு...' என்று, சிரித்­த­படி சொன்­னார்.

கோப­மாக திட்­டா­மல் அவர் கூறிய வார்த்­தை­கள், 56 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­ன­ரும் நினை­வில் நிற்­கி­றது.

இப்­போது, யாரு­டைய சட்டை பட்­ட­னா­வது திறந்­தி­ருந்­தால், அந்த ஆசி­ரி­ய­ரின் அறி­வுரை தான் நினை­வுக்கு வரும். அந்த அற்­புத ஆசானை, 72 வய­தி­லும் நினைத்து மகிழ்­கி­றேன்.

–- எஸ்.கந்­த­சாமி, திரு­வா­ரூர்