அதிர்ச்சி தந்த ஸ்டைல்!

பதிவு செய்த நாள் : 10 மே 2019

திரு­நெல்­வேலி, பாளை­யம்­கோட்டை, இக்­னே­ஷி­யஸ் உயர்­நி­லைப்­பள்­ளி­யில், 1994ல், 6ம் வகுப்பு படித்­தேன். அப்­போது, தின­ம­லர் நாளி­த­ழில், புகைப்­ப­டத்­திற்கு, 'கமென்ட்' எழு­தும் போட்டி நடத்­து­வர்.

அதில் பங்­கேற்­கும் அப்பா, அஞ்­சல் அட்­டை­யில் எழு­து­வதை கவ­னிப்­பேன். மெய்­யெ­ழுத்­துக்­க­ளில், புள்ளி வைப்­ப­தற்கு பதில், சிறு வட்­டம் போடு­வார்!

இதை பார்த்து, எனக்­கும் அப்­படி எழுத ஆசை ஏற்­பட்­டது. தமிழ் தேர்­வின் போது, மெய்­யெ­ழுத்­துக்­க­ளில் புள்­ளிக்கு பதில், சிறு­வட்­டம் போட்­டி­ருந்­தேன். தேர்­வில் முதல் மதிப்­பெண் கிடைக்­கும் என்ற கன­வில் இருந்த எனக்கு, தோல்வி கிடைத்­தது.

விடைத்­தாளை வழங்­கிய போது, என் கண்­க­ளில், தாமி­ர­ப­ரணி பாய்ந்­தது. மெய்­யெ­ழுத்­துக்­க­ளில், சிறு வட்­ட­மிட்­டி­ருந்த பகு­தி­க­ளில், சிவப்­பு­மை­யால் குறி­யிட்டு சுட்­டி­யி­ருந்­தார். கண்­ணீ­ரு­டன், அதற்கு விளக்­கம் கேட்­டேன்.

'நீ எழு­தி­யது, மெய்­யெ­ழுத்­துக்­கள் அல்ல; அவை, 'டொம்பி' என்ற புள்ளி எழுத்­துக்­கள். தமிழ் மொழிக்கு உரிய சிறப்பு பிற மொழி­க­ளில் கிடை­யாது. மெய்­யெ­ழுத்­துக்கு, புள்ளி தான் போட வேண்­டும். இந்த தவறை, மீண்­டும் செய்ய கூடாது என்­த­ப­தற்­கா­கவே, 'பெயில் மார்க்' வழங்­கி­னேன்...' என உணர்த்தி, 90 மதிப்­பெண் வழங்­கி­னார்.

அந்த ஆசி­ரி­யைக்கு நன்றி கூறி­ய­து­டன், அப்பா ஸ்டைலுக்கு, 'டாட்டா' காட்­டி­னேன்.

–- சு.ப்ரிய­தர்­ஷினி, பாளை­யம்­கோட்டை.