கழு­தை­யி­டம் கற்ற பாடம்!

பதிவு செய்த நாள் : 10 மே 2019

விரு­து­ந­கர், சஞ்­சீவி நாத­பு­ரம் பள்­ளி­யில், 1980ல், 7ம் வகுப்பு படித்­துக் கொண்­டி­ருந்­தேன். வகுப்­பில், குறும்பு, சேட்டை அதி­கம் செய்­வேன். தீபா­வளி பண்­டிகை நெருங்­கிய போது, சர­வெடி ஒன்றை, கழுதை வாலில் கட்டி, பற்ற வைக்க முயன்­றேன்.

அப்­போது கழுதை, எட்டி உதைத்­தது. என் தொடை இடுக்­கில் வீங்கி கடும் வலி ஏற்­பட்­டது. இதை, பெற்­றோ­ரி­டம் சொல்ல பயந்து, தாங்கி தாங்கி சமா­ளித்து நடந்­தேன்.

என் பக்­கத்து வீட்­டில் வசித்த வகுப்பு ஆசி­ரி­யர் சடாச்­ச­ரம், என் பெற்­றோ­ரி­டம் இதை கூறி­விட்­டார். அத்­து­டன் நிற்­க­வில்லை...

மறு­நாள், வகுப்­ப­றை­யில் இச்­சம்­ப­வத்தை கூறி, 'இது போல், சேட்டை செய்­யா­தீங்க...' என, அறி­வு­ரைத்­தார்.

வலி­யில் முன­கி­ய­படி, 'பிரா­ணி­களை துன்­பு­றுத்த கூடாது' என, அன்று உறுதி ஏற்­றேன். இப்­போது என் வயது, 53. அந்த உறு­தியை, இன்­றும் செயல்­ப­டுத்தி வரு­கி­றேன்!

–- பொன்­கு­ம­ர­வேல், ராஜ­பா­ளை­யம்.