கோடை ரெசிபி!

பதிவு செய்த நாள் : 10 மே 2019

ஜூஸ் தயாரிப்பதில் இருந்து சற்று மாறுபட்டது ஸுமூத்தி. சாறு எடுப்பதற்கு ஜூஸர் அல்லது மிக்சிக்கு பதிலாக இதில் பிளண்டர் பயன்படுகிறது. இதனால், நார்ச்சத்து இழப்பு தவிர்க்கப்படுகிறது.

அவகாடோ ஸுமூத்தி

தேவையானவை

அவகாடோ பழம் - 1

வாழைப்பழம் - ½ கப்

கிரீக் யோகர்ட் - 1 ½ கப்

ஃபிரெஷ் ஆரஞ்சு சாறு - 3 ஆரஞ்சுகளில் இருந்து பெறப்பட்டது

தேன் - ¼ கப்

ஐஸ் - 3 கப்

அவகாடோ, வாழைப்பழம், யோகர்ட், ஆரஞ்சு சாறு, தேன் மற்றும் ஐஸ் ஆகியவற்றை ஒன்றாக பிளண்டரில் இட்டு மென்மையாகும்வரை அரைத்தால், சுவையான பானம் ரெடி. ஜில்லென்று ஸூமூத்தியைப் பரிமாறுங்கள்.