பாட்டிமார் சொன்ன கதைகள் – 215 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 10 மே 2019

மகாபாரதம் வாழ்க்கையின் தத்துவம்!

மகா­பா­ர­தம் தெரிந்து கொள்­வ­தற்கு முன் மகா­பா­ரத குறித்த அடிப்­படை தெரிந்­தாக வேண்­டும்.  வியா­ச­ரி­டம் பல கதை­கள் இருந்­தது. ஒவ்­வொரு கால கட்­டத்­தி­லும் நடந்த சம்­ப­வங்­கள் பின்­னர் சிரித்­தி­ர­மாகி பின்­னர் நாடோ­டிக்­க­தை­க­ளாக காற்­றில் கரைந்து விடக்­கூ­டாது என்று நினைத்­தார் வியா­சர்

வியா­சர் சொல்ல விநா­ய­கர் எழு­தி­னார். வட மொழி­யில் இருந்­த­தை­த­மி­ழில் வில்­லி­புத்­தூ­ரார் கம்­ப­னைப் போல பாடல்­க­ளாக்­கி­னார். வினா­ய­கர் ஒரு கல்­லின் மேல் மகா­பா­ர­தக் கதை­களை எழு­தி­னார்.

 ஒரு காவி­யம் தயா­ரா­கிக்­கொண்­டி­ருந்­தது. அந்­தக் காலம் முதல் இந்­தக் காலம் வரை எழுத்­தா­ளர்­க­ளுக்கு பெரும் தலை­வ­லி­யாக இருப்­பது அந்த கதைக்­கான தலைப்பு!

 வியா­வ­ருக்­கும் அப்­படி ஒரு சிக்­கல் எழுந்­தது.  பெய­ரில் என்ன இருக்­கி­றது. ரோஜா­வுக்கு என்ன பெயர் வைத்­தா­லும் அது ரோஜா­வாக பரி­ம­ளிக்­கச் செய்­கி­றதே!

பாரத நாட்­டில் எல்லா மதத்தை  சேர்ந்­த­வர்­க­ளுக்கு பொது­வாக அமை­யப்­போ­கு­மிந்த  காவி­யத்­திற்கு பார­தம் என்று பெய­ரிட்­டார்.

பர­த­குல சரித்­தி­ரம் பார­தம்.  பாரத நாட்­டின் புது­வு­டை­மை­யான இதி­காச ரத்­தி­னம் பார­தம். இதை நாலு வேதங்­க­ளோடு சேர்த்து திருப்­தி­ய­டை­யாத கதைப் பிரி­யர்­கள் இதன் பெரு­மை­யைக் குறித்­தும் ஒரு கதை கட்­டி­யி­ருக்­கி­றார்­கள்.

 தேவர்­கள் ஒரு காலத்­தில் ஒரு தரா­சக்­கொண்ண்டு வந்து வேதங்­களை ஒரு தட்­டி­லும்,, பார­தத்தை ஒரு தட்­டி­லும் வைத்து நிறுத்­துப் பார்த்­தார்­க­ளாம் உப­நி­ஷத்­துக்­க­ளோடு கூடிய வேதங்­களை காட்­டி­லும் பார­தம் அதிக பார­மா­யி­ருந்­த­தால், மக்த்­தா­ன­தா­க­வும் ` ரஸங்­கள், ரஸ­பா­வங்­கள் ‘ என்ற பார­முள்­ள­தா­க­வு­மி­ருந்­த­தால் ` மஹா பார­தம்’ என்று பெயர்  வந்­த­தாம். பெய­ரைப் பற்றி கவலை ஆசி­ரி­ய­ருக்­கும் இருந்­தது போல, பெய­ரின் பொருள் நயங்­க­ளைப் பற்­றிய கவலை நம் முன்­னோ­ருக்கு இருந்­த­தென்று ஊகிக்­க­லாம்

 மகா பார­தம் எழுதி முடித்­த­தும், வியா­ச­ரின் கவ­லை­க­ளெல்­லாம் பறந்து விட்­டன. மனசு பூரண திருப்தி அடைந்­தது. இவ்­வ­ளவு பெரிய அழ­கான கதைத் திரட்டு உல­கத்­தில்  வேறு எந்த நாட்­டி­லும் இல்லை. எந்த  மொழி­யி­லு­மில்லை. உல­கத்­தி­லுள்ள பல கதை­க­ளுக்­கும் ஆதா­ர­மான இந்த மகா பார­தத்­தில் வெண்­கல மணி ஓசைப் போல் கணீ­ரென்று வியா­சர் கதை சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும் குரலை இன்­றும் கேட்­க­லாம்.

 நமது பாரத நாட்­டில் ராமா­ய­ணம், மகா­பா­ர­தம் இரண்­டை­யும் இதி­கா­சங்­கள் என்று சொல்­வார்­கள்.

 இதி­கா­சங்­கள் என்­றால் என்ன?

 லெள­கீக வாழ்க்­கை­யின் எல்லா பகு­தி­க­ளை­யும் உள்­ள­டக்கி,  ஒரு பெருங்­கதை எழு­தக்­கூ­டிய  சக்தி இன்று எந்த எழுத்­தா­ள­ருக்­கா­வது உண்டா ?

நாக­ரீ­கம் வளர்ந்­து­விட்ட நிலை­யில், ஒரு நாட்­டுக்­கும், இன்­னொரு நாட்­டுக்­கும் இடையே உள்ள தூரம் குறைந்து விட்ட நிலை­யில், பல நாட்டு விஷ­யங்­க­ளை­யும் படிக்­கக் கூடிய வாய்ப்பு இருக்­கின்ற நிலை­யில் நம் மூதா­தை­யர்­களை விட நாம் அறி­ஞர்­கள் என்று கரு­து­கின்ற நிலை­யில் சக­வ­வி­த­மான குணா­தி­ச­யங்­க­ளைக் கொண்ட பல பாத்­தி­ரங்­களை உரு­வாக்கி ஒரே கதை­யாக எழு­து­கின்ற சக்தி இன்று யாருக்­கா­வது உண்டா ? எனக்­குத் தெரிந்த வரை இல்லை’ என்று அர்த்­த­முள்ள இந்­து­ம­தத்­தில் சொல்­லி­யி­ருப்­பார் கண்­ண­தா­சன்.

 அவரே தொட­கி­றார்.`  நம்­மு­டைய இதி­கா­சங்­களை கதை­கள் என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள். அந்த கற்­ப­னைக்கு ஈடு கொடுக்க உல­கத்­தில் வேறு ஒரு எழுத்­தா­ள­னும் பிறக்­க­வில்லை.

 பெருங்­க­தை­க­ளும் அவற்­றுக்­குள் உப கதை­க­ளு­மாக மாறு­பட்ட நமது இதி­கா­சங்­க­ளில் பாத்­தி­ரப் படைப்­புத்­தான் எவ்­வ­ளவு அற்­பு­தம்   அவை கூறும் வாழ்க்­கைத் தத்­து­வங்­கள் தான் எத்­தனை?

  நம்­பிக்கை,  அவ­நம்­பிக்கை,  ஆண­வம்,  மீட்சி, காதல்,  கற்பு, ராஜ­தந்­தி­ரம், குறுக்கு வழி, நட்பு, அன்பு, பணிவு, பாசம், கடமை.

 இப்­படி வாழ்க்­கை­யில் எத்­தனை கூறு­கள் உண்டோ அத்­த­னை­யை­யும் நமது இதி­கா­சங்­கள் காட்­டு­கின்­றன.  மகா­பா­ரத்­ததை எடுத்­துக் கொள்­ளுங்­கள்...

பொறு­மைக்­குத் தரு­மன், துடி­து­டிப்­புக்கு  பீமன், ஆண்­மைக்­கும் வீரத்­திற்­கும் அருச்­சு­னன், மூத்­தோர் வழி­யில் முறை முறை தொடர நகு­லன், சகா­தே­வன். பஞ்­ச­பூ­தங்­க­ளை­யும் தன்­னுள் அடக்கி  கொண்டு சக்தி மிக்க ஆன்­மா­வாக பாஞ்­சாலி. உள்­ள­தெல்­லாம் கொடுத்து இனி கொடுப்­ப­தற்கு ஒன்று மேயில்லை என்று நினைக்­கும் கர்­ணன். நேர­மை­யான ராஜ­தந்­தி­ரத்­திற்கு  எடுத்­து­காட்­டாக கண்­ணன். கெட்ட ராஜ­தந்­தி­ரத்­திற்கு சகுனி,  தீய குணங்­க­ளின் மொத்த வடி­வ­மாக கவுர­வர்­கள்,  தாய்ப்­பா­சத்­திற்கு எடுத்­துக்­காட்­டாக ஒரு குந்தி, நேர்­மை­யான கட­மை­யா­ள­னாக விது­ரன், பாத்­தி­ரங்­க­ளின் சிருஷ்­டி­யி­லேயே சம்­ப­வங்­கள் உருக்­கொண்டு விட்­டன.

இந்த பாத்­தி­ரங்­க­ளின் குணங்­களை மட்­டும் சொல்­லி­விட்­டால்  கதை என்­பது தற்­கு­றிக்­கும் புரி­யும். இந்­தக் கதை ஆண­வத்­தின் அழிவை தரு­மத்­தின் வெற்­றியை மட்­டும் குறிக்­க­வில்லை.

லெள்­கீக வாழ்க்­கை­யி­லும் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பயன்­ப­டக்­கூ­டிய படிப்­பினை இருக்­கி­றது.

கதை­யின் இறு­தி­யான கள­மான குரு­ஷேத்­தி­ரத்­தின் கதை­யில் மொத்த வடி­வத்­திற்­கும் தீர்ப்பு வழங்­கப்­ப­டு­கி­றது. அது­வரை சொல்லி வந்த நியா­யங்­கள் தொகுத்து வழங்­கப்­ப­டு­கின்­றன.

பக­வத் கீதை மகா­பா­ர­தக் கதை­யின் சுருக்­க­மா­கி­ வி­டு­கி­றது.

 அர­சி­யல் சமு­தாய நீதிக்கு அதுவே கைவி­ளக்­கா­கி­வி­டு­கி­றது.

 கண்­ணனை கட­வு­ளா­கக் கருத வேண்­டாம். பரந்­தா­னம், வையத்­துள் வாழ்­வாங்கு வாழ்ந்ந்து வானு­ரை­யும் தெய்­வத்­துள் வைக்­கப்­பட்­ட­வன் என்­பதை எண்­ணிப் பார்த்­தாலே போதும்.

 கீதையை தேவ நீதி­யாக ஏற்­றுக்­கொள்­ளா­விட்­டா­லும் மனித நீதி­யாக உன் கண்­முன்­னால் தெரி­யும்.

கண்­ணன் வெறும் கற்­ப­னை­தான் என்­றால், கற்­பனா சிருஷ்­டி­க­ளில் எல்­லாம் அற்­புத சிருஷ்டி, கண்­ண­னின் சிருஷ்டி  ஊழ்­வினை பற்றி தெரிய வேண்­டுமா பார­தம் படி. முற்­ப­கல் செய்­யின் பிற்­ப­கம் விளை­யுமா பார­தம் படி ஒன்றை நினைத்­தால் வேறொன்று விளை­யுமா? பார­தம் படி.

(தொடரும்)