பெண் பிரசவிக்கும் ஓர் உயிர் இயந்திரம்...! – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 09 மே 2019

மே இரண்­டா­வது ஞாயிறு அன்­னை­யர் தினம். இதை உங்­கள் பார்­வை­யில் எப்­படி பார்க்­கி­றீர் என பெண் செயற்­பாட்­டா­ளர் நாச்­சி­யாள் சுகந்­தி­டம்

கேட்­ட­போது. "உல­கின் 750 கோடி மனி­தப் புன்­ன­கை­யின் யுனி­வர்­சல் உரிமை, ஆதிப் பெண்­ணின் கரு­வ­றைக்கே சொந்­தம். அவ­ளில் இருந்து இத்­தனை கோடி இன்­ப­மாய் பெருக்­கெ­டுத்து, கடந்த நொடி பிறந்த குழந்தை வரை மனித குலத்­தைப் படைத்து அளிக்­கும் தாய்மை, பெண்­மை­யின் தனிச்­சி­றப்பு. ஒரு பெண், தாய் ஆக தன் உட­லால், மன­தால் செய்­யும் தியா­கங்­க­ளுக்கு இணை­யாக எது­வும் இல்லை இந்­தப் பிர­பஞ்­சத்தில்....

இங்கு ஆணும், பெண்­ணு­மாய் பிறந்து வாழ்­வ­தன் முதல் அர்த்­தம், அடுத்­தொரு உயிரை உரு­வாக்­கு­வ­து­தான். அந்த உயிரை தனது கரு­வில் வாங்கி பெண் தாயா­கும் அற்­பு­தம் ஆணுக்­குத் தக­வல்; பெண்­ணுக்­குப் பெரு­வாழ்வு, பேர­னு­ப­வம். அவஸ்­தை­கள் பல அனு­ப­வித்து தன் உயி­ருக்­குள் உயிர் வளர்த்து உல­குக்­குக் கொடுக்­கும் ஒவ்­வொரு ஜன­ன­மும், அவள் கரு­ணை­யின் கொடை.

சிசு­வா­கக் கையில் தவ­ழும் காலத்­தில் இருந்தே, பெண் குழந்­தையை ஒரு­வ­னின் மனை­யா­கத் தயார்­ப­டுத்­தியே வளர்த்­தெ­டுக்­கும் சமூக அமைப்பு இது. அவள் சிவப்­பா­கப் பூசிக் குளிப்­பாட்­டப்­ப­டும் குளி­யல் பொடி­யில் இருந்து, கண் மை, வளை­யல், கொலுசு அலங்­கா­ரம் வரை, அனைத்­துக்­கும் அதுவே ஆதா­ரம். ஓடி விளை­யா­டும் வய­தில் அடி­ப­டும்­போ­து­கூட, 'இன்­னொரு வீட்­டுக்கு வாழப் போற புள்ள, வம்­சத்த வளர்க்­கப் போறவ, சேதா­ர­மில்­லாம கொடுக்­க­ணும்' என்றே பத­றும் கிழ­வி­களை நாம் பார்த்­தி­ருக்­கி­றோம். அவள் பூப்­பெய்­தி­ய­வு­டன், 'தாய்மை அடை­யத் தயா­ரா­கி­விட்­டாள்' என்று நல்­லெண்­ணெய், நாட்­டுக்­கோழி முட்டை என அவள் கருப்­பைக்கு கவ­னிப்­பு­கள் அதி­க­மா­கும்.

இப்­படி இந்த உல­கம் பெண்ணை ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் பிர­ச­விக்­கும் உயிர் இயந்­தி­ர­மா­கவே பார்க்­கி­றது. ஆனால், அந்த தாய்­மைக்­கான தக­வ­மைப்­புக்­காக அவள் உடல் கடக்க நிர்­பந்­திக்­கப்­பட்­டுள்ள வலி­கள் பற்­றிய அக்­க­றையோ கரி­ச­னமோ இந்த உல­குக்கு இருப்­ப­தில்லை. ரத்­த­மும் ரண­மு­மான மாத­வி­டாய் வேத­னையை ஒவ்­வொரு மாத­மும் அனு­ப­விக்க வேண்­டும். 'நான் ஏன் பெண்­ணா­கப் பிறந்­தேன்?' என்று எல்லா பெண்­க­ளும் ஏதா­வது ஒரு மாத­வி­டாய் நாளில் நொந்­த­வர்­க­ளா­கவே இருப்­பார்­கள்.

திரு­ம­ணம்... குழந்­தைப் பேற்­றுக்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சமூக ஒப்­பந்­தம். அது­வரை பிறந்த வீட்­டில் வளர்ந்த சூழல் அப்­ப­டியே வேரோடு பெயர்க்­கப்­பட, புதிய இடத்­தில் நடப்­ப­டு­கி­றாள் பெண். அவ­ளது வாழ்க்கை மாறிப்­போ­கி­றது. குறிப்­பாக, திரு­ம­ணத்­துக்­குப் பின்­பான மாத­வி­லக்கு தரு­ணங்­கள் அவ­ளுக்கு வேறு­வே­றான அனு­ப­வங்­க­ளைத் தரு­கின்­றன. 'இந்த மாதம் எந்த நாள்?' என்று காலண்­டர் தேடிக் குறித்­து­வைத்து பட­ப­டப்­போடு காத்­தி­ருக்­கி­றாள். குடும்ப விசே­ஷம், நல்­லது, கெட்­டது, கோயில் கும்­பிடு, கண­வ­னோடு சுற்­றுலா உள்­ளிட்ட எல்லா விஷ­யங்­க­ளுக்கு முன்­னும் 'இந்த நாள் இந்த மாதத்­தில் எப்போ துவங்­குது?' என்­பதே கேள்­வி­யா­கி­றது. தாய்மை அடை­யத் தாம­த­மா­னால் ஊரும் உற­வு­க­ளும் அவள் மன­தில் சொரு­கும் அம்­பு­கள் கிழிக்க, வெளிப்­ப­டும் மாத­வி­டாய் ரத்­தம் அவள் கண்­ணீ­ரின் குருதி வடி­வ­மா­கி­றது.

பெண் வாழ்­வின் மிக முக்­கி­ய­மான கால­கட்­டம், அந்த ஒரு நாளில் இருந்­து­தான் தொடங்­கு­கி­றது. 'தேதி தள்­ளிப்­போ­யி­ருக்கே? அப்போ?!' என்று மன­தில் மின்­னல் வெட்ட, ஓர் உயிர் தனக்­குள் மொட்­ட­விழ்ந்து அன்­போடு பற்­றிக்­கொண்டு விட்­டது என்று அறி­யும் அந்­தத் தரு­ணம்... பெண் வாழ்­வில் பொக்­கிஷ நொடி. அது வார்த்­தை­கள் தோற்று மகிழ்ச்சி கண்­ணீர் வடி­வத்­துக்கு மாறும் நிமி­டம். காதல், காமம் கடந்து தாய்­மைக்கு நக­ரும் அதி­அற்­புத காலம். கூடவே, 'இனி ஒன்­பது மாதங்­க­ளுக்கு மாத­வி­லக்கு தொந்­த­ரவு இல்லை' என்று மன­சுக்­குள் ஒரு மகிழ்ச்­சிக் குயில் ரக­சி­ய­மாய்க் கூவும்.

எந்த மகிழ்­வும் வலி­யின்­றிக் கிடைக்­காது என்­பதே பெண்­ணு­ட­லுக்­கான பொது விதி. கர்ப்­ப­கா­லம், அதில் முதன்­மை­யா­னது. அதிர நடக்­காதே, சட்­டென எழாதே, மல்­லாந்து படுக்­காதே என்ற அறி­வு­ரை­களை கவ­ன­மா­கப் பின்­பற்றி, தன் பனிக்­கு­டத்­தில் வள­ரும் குட்­டிச் செல்­லத்­துக்­காக புது வாழ்­வைத் தொடங்­கு­வாள். குமட்­டும் இரும்­புச் சத்து மாத்­தி­ரை­களை கட­மை­யென மறு­யோ­ச­னை­யின்றி விழுங்­கு­வாள். 'குழந்­தைக்கு நல்­லது' என்று யார் எதைச் சொன்­னா­லும் செய்­வாள், சாப்­பி­டு­வாள்.

மசக்கை, கர்ப்­ப­கா­லத்­தின் தண்­டனை. சில­ருக்கு நான்கு மாதங்­க­ளு­டன் நின்­று­போ­கும் அந்த வாந்­தி­யும் குமட்­ட­லும் மயக்­க­மும். சில­ருக்கு ஒன்­பது மாதம் வரை உடன் வந்து படுத்­தி­வி­டும்.

'எல்­லாம் உன் குழந்­தைக்­கா­கத்­தான்' என்று மன­தைத் தட்­டித் தட்டி தன்னை சமா­தா­னம் செய்து கொள்­வாள். மாதங்­கள் உருள உருள, உடல் விரிந்து, வயிறு பெருத்து, தோலே தழும்­பாகி, எடை கூடி,  பனிக்­கு­டம் நிறைந்து... கண்­ணாடி அவ­ளையே அவ­ளுக்கு அந்­நி­ய­மா­கக் காட்­டும். உடல் அள­வில் இருந்து அழகு வரை, தன் இளமை கண் முன்னே கட­க­ட­வெ­னக் கரைந்­தா­லும், தாய்­மை­யின் பூரிப்பு கண்­க­ளில் மினுங்­கச் சிரிப்­பாள்.

கரு­வ­றை­யில் கண்­மூ­டித் துயி­லும் செல்­லம் கேட்­கும் என்­ப­தற்­காக கை நிறைய கண்­ணாடி வளை­யல்­கள் அடுக்­கு­வாள். பிடித்த பாடல்­கள் கேட்­பாள். அந்­தி­யில் நடைப்­ப­யிற்சி செய்­வாள். தனக்­குள் வள­ரும் அந்த குட்டி உயிர் இந்த உலகை எட்­டிப் பார்க்­கும் தவத்­தில் எண்­ணிலா தெய்­வங்­களை வேண்­டிக்­கொள்­வாள். மறு பேச்­சின்றி குழந்­தை­யின் நலன் ஒன்­றையே மன­தி­லும் சுமந்து தாய்மை காலத்­தில் மகிழ்­வு­று­வாள். தன் உடல் படும் அத்­தனை வேத­னை­க­ளை­யும் தாய்­மை­யின் இயல்­பென்று ஏற்­றுக் கொள்­வாள்.  

தாய்மை

பிர­ச­வம் என்­பது ஓர் உயி­ரின் ஜன­னம் மட்­டு­மன்று, அது இரண்டு உயிர்­க­ளின் ஜன­னம் என்­பதை அவள் அறி­வாள். பிர­சவ அறைக்­குள் நுழை­யும் பெண்­ணுக்கு எவ்­வ­ளவு தைரி­யம் சொல்­லப்­பட்­டா­லும், 'நான் திரும்பி வந்­து­வி­டு­வேனா?' என்ற ஒற்­றைக் கேள்வி நெஞ்­சைக் கிள்­ளவே செய்­யும். அந்­தக் கேள்­வி­யை­யும் தன் மழ­லைச் செல்­லத்­தின் அழு­கு­ரல் கேட்க அதட்டி அடக்­கி­விட்டு, தன்­னையே தரு­கி­றாள் ஒரு தாய். 'இந்த உல­கிற்கு என் உயி­ரி­லி­ருந்து ஒரு குழந்­தையை பரி­ச­ளிக்­கப்­போ­கி­றேன்' என்ற உறுதி, மகிழ்வு எல்­லாம் இடுப்பு வலி­யில் மாயம் ஆகி­டும். அடுத்­த­டுத்து முது­குத் தண்­டில் ஒற்றை வலி பிரம்­ப­டி­யாய் உயிர்­வரை நக­ரும். ஒவ்­வொரு வலி­யும் எங்கு துவங்கி எங்கு முடி­கி­ற­தென்று மனம் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கும். புயல் காற்­றில் ஆலம் விழு­து­கள் உடைந்து விழு­வ­தைப் போல, அந்த குட்­டிச் செல்­லம் பனிக்­கு­டம் கடந்து வெளி­வர முயற்­சிக்­கும் கணம்  இடுப்பு எலும்­பு­கள் விலக, தொடை­கள் கதற, அந்த வலி அவளை உலுக்க, மூச்­சுப் பிடித்து, கைகள் முறுக்கி, பிர­சவ வலி பிர­பஞ்­சத்­தில் அறை­கி­றது, பனிக்­கு­டம் தாண்டி அந்த மீன் குட்டி மருத்­து­வ­ரின் கைக­ளில் தவழ்­கி­றது. உயிர் கொடுத்து உயிர் தந்­த­வ­ளின் கண்­கள் அதன் பிஞ்­சுப் பாதத்­தில் உருள்­கி­றது. ஆம், அந்­தச் செல்ல அழு­கு­ர­லில் அவள் அத்­தனை வலி­க­ளை­யும் சட்­டெ­னத் தொலைத்­து­விட்டு மகிழ்­வு­று­கி­றாள். அவள் மார்­பு­கள் ஊறத் துவங்­கு­கின்­றன.

எந்­தப் பெண்­ணுக்­கும் பெற்­றுப் போட்­ட­தோடு தாய்­மைக்­கான பொறுப்­பு­கள் முடிந்து விடு­வ­தில்லை. குழந்தை வயிற்­றில் வள­ரும் வரை தேவ­தை­யாக பார்க்­கப்­பட்­ட­வள், இனி ஆயி­ரம் தேவ­தை­க­ளின் ஒற்றை உரு­வான அம்மா. தான் பெற்ற குழந்­தைக்­காக எப்­பொ­ழு­தும், எதை­யும் தியா­கம் செய்­கி­றாள். அந்த குழந்­தையை மைய­மா­கக் கொண்டே அவள் வேலை, உணவு, கனவு எல்­லாம் தீர்­மா­னிக்­கப்­ப­டும். தாயான பின் பெண்­ணுக்­கென்று தனிப்­பட்ட சந்­தோ­சங்­களோ கன­வு­களோ அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. தன் மழ­லை­யின் கண்­க­ளின் வழி­யாக தன் உல­கத்­தைக் காணத் துவங்­கு­கி­றாள். தன் கடைசி மூச்சு வரை தன் தாய்­மைக்கு ஒரு மாற்­றும் குறைந்து விடா­மல் வாழும் பெண்­ணி­னத்­துக்­குச் சொல்­வோம் உணர்­வு­பூர்­வ­மான வாழ்த்து!