மரங்களே நம்மை காக்கும் தெய்வங்கள்...!

பதிவு செய்த நாள் : 09 மே 2019

பெண்­ணிய போரா­ளி­யான முனை­வர். பெண்­ணி­யம் செல்­வக்­கு­மா­ரிக்கு மிகச் சமீ­பத்­தில் " ஆச்­சார்யா சக்­தி­வி­ருது " அளிக்­கப்­பட்­டது. புதுச்­சேரி மாநி­லத்­தில் உள்ள ஆச்­சார்யா நிறு­வ­னம் இவ்­வி­ருதை வழங்கி பெரு­மை­ப­டுத்­துள்­ளது.  

இவர்  தமி­ழ­கத்­தில் பிறந்து புதுச்­சே­ரி­யில் வாழ்க்­கைப்­பட்­ட­வர். செல்­வ­கு­மாரி  ஆசி­ரி­யப்­ப­ணி­யில் இரு­பத்­தைந்து ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தொடர்ந்து பணி­யாற்றி வரு­கி­றார். இவ­ருக்கு இலக்­கி­யப்­ப­ணி­யும் சமூ­கப்­ப­ணி­யும் என் இரு கண்­கள் என­லாம். அந்த அள­விற்கு அவற்­றோடு ஈடு­பா­டும் நெருங்­கிய தொடர்­பும் கொண்­ட­வர்.

கட­லூ­ரில் உள்ள சோனங்­குப்­பம் என்ற சிற்­றூ­ரில் சாதா­ரண நடுத்­தர மீன­வக்­கு­டும்­பத்­தில் பிறந்து வளர்ந்­த­வர். ஊரி­லேயே முதன்­மு­த­லாக கல்­லூ­ரி­யில் படித்­த­வர் இவர்­தான்.  இளங்­கலை தமிழ் படித்­து­பின் புது­வைப்­பல்­க­லை­யில் முது­கலை படித்­தார். தனது கல்­லூரி காலத்­தி­லேயே படிக்­காத முதி­ய­வர்­க­ளுக்­குப் படிக்­கக் கற்­றுக்­கொ­டுப்­பார்.அன்­றைக்கே ஊரில் மரங்­களை நட்­டு­வ­ளர்ப்­ப­திலே ஆர்­வங்­கொண்டு இருந்­தார். 'மரங்­களே நம்­மைக் காக்­கும் தெய்­வங்­கள் என்­பது இவ­ரது நம்­பிக்கை. அத­னால் இயற்­கை­யின்­மீது ஆறாக் காத­லும் மாறாப்­பற்­றும் உடை­ய­வ­ராக திகழ்ந்­தார். தற்­பொ­ழுது தான் வசிக்­கின்ற சோலை­ந­க­ரில் முந்­நூ­றுக்­கும் மேற் பட்ட மரங்­கள் நட்டு வளர்த்­துள்­ளார். பொது­சே­வை­யில் ஆதீத ஆர்­வ­மும் ஈடு­பா­டும் கொண்­ட­வ­ராக விளங்­கு­கி­றார்

இவர் ஆசி­ரி­யப்­பணி செய்து விட்டு வீடு திரும்­பும் போது மாலை வேளை­க­ளில் குழந்­தை­களை அழைத்து வட்­ட­மாக உட்­கார வைத்து அவர்­க­ளுக்கு கதை­க­ளைச் சொல்லி மகிழ்­விக்­கி­றார். இவரை குழந்­தை­கள் அன்­போடு"ஆன்டி "என்று  அழைப்­பர். அவர் குழந்­தை­க­ளுக்கு ராசா­ராணி கதை­யி­லி­ருந்து தற்­கால கதை­கள் வரை என சொல்­வார். அதோடு குழந்­தை­க­ளை­யும் கதை சொல்ல வைப்­பார். ‘‘நான் நல்ல கதைச்­சொல்லி என்­ப­தால் புதி­தா­கத் தோன்­றும் மாயா­சா­லக் கதை­களை நானா­கவே உடனே உரு­வாக்­கிச்­சொல்­வேன். சில­பொ­ழு­து­க­ளில் சொதப்­ப­லாகி, குழந்­தை­கள் சிரிப்­பர். குழந்­தை­க­ளோடு அள­வ­ளாவி, விளை­யா­டு­வ­தில் அலா­திப் பிரி­யம் எனக்­கு. முன்­னாள் பிர­த­மர் விபி­சிங்கிடம்

உங்க­ளுக்­குப் பிடித்­த­மான பொழு­து­போக்கு எது என்று கேட்­ட­பொ­ழுது" எனக்கு என் பேரப்­பிள்­ளை­க­ளு­டன் விளை­யா­டு­வ­து­தான்" என்­றா­ராம். அது­போல் குழந்­தை­க­ளி­டம் குழந்­தை­யாக மாறி விளை­யா­டு­வ­தில் ஒரு பேரின்­பம் கிடைப்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றேன்.

நான் சில  நூல்­க­ளைப் படைத்து வெளி­யிட்­டி­ருக்­கி­றேன். என் முனை­வர் பட்ட ஆய்வு நூல் "திரு­நங்­கை­யர் வாழ்­நி­லை­யும் பால்­நி­லை­யும்"என்­ப­தா­கும். ஏழாண்­டு­கள் களப்­பணி செய்து எழு­தப்­பட்ட ஆய்­வு­நூல் இது. நியூ­செஞ்­சுரி பதிப்­ப­கத்­தின் மூலம் வெளி­யி­டப்­பட்ட முதல் கவி­தை­நூல் "பெண்­ணி­யம் பேசு­கி­றேன்", புதுச்­சேரி கலைப்­பண்­பாட்­டு­து­றை­யின் நிதி­யு­த­வி­யு­டன் வெளி­வந்த இரண்­டா­வது நூல் "ஈர்ப்பு". பாட்­டுக்­கவி பார­தி­யின்­மேல் காதல் கொண்டு எழு­திய கவி­தை­நூல் "அகத்தீ," அடுத்­த­தாக இலங்­கை­யில் சிறந்த கவிதை நூலுக்­கான விருது கிடைத்த நூல் "கரைந்­த­ழும் கடல்"என்­ப­தா­கும்

மேலும் பல ஆய்­வுக் கட்­டு­ரை­கள்   நாட்­டுப்­பு­ற­வி­யல் ஒப்­பா­ரிப்­பா­டல்­கள் பற்றி எழு­தி­யுள்­ளேன். " சிங்­கா­ர­வே­ல­ரும் பெரி­யா­ரும்", "அறி­வு­ம­தி­யும் அவர்­தம் படைப்­பு­க­ளும்,குறிப்­பி­டத்­த­குந்த கட்­டு­ரை­க­ளா­கும்." பழந்­த­மிழ் இலக்­கி­யத்­தில் பெண் புனை­வு­கள்" என்ற கட்­டுரை உல­கத்­த­மி­ழா­ராய்ச்சி நிறு­வ­னத்­தில் ஆய்­வு­கட்­டு­ரை­யா­கத் தொகுக்­கப்­பட்­டுள்­ளது .

பிரான்­சி­லி­ருந்து வெளி­வ­ரும் தமிழ்­நெஞ்­சம் மின்­னி­த­ழின் இணை­யா­சி­ரி­யர். உல­கின் பல­நா­டு­க­ளி­லி­ருந்­தும் தமிழ்க்­க­வி­ஞர்­கள், சிறு­க­தை­யா­சி­ரி­யர்­கள் எனத் தமிழ்­நெஞ்­சத்­தில் எழு­தி­வ­ரு­கின்­ற­னர்.    இது­வரை நூற்­றுக்­கும் மேற்­பட்ட  நூல்­க­ளைக் குறைந்த செல­வில் பதிப்­பித்­தி­ருக்­கின்­றேன்.. நிறைய எழுத்­தா­ளர்­கள் புத்­த­கம் போட வாய்ப்­பில்­லாச் சூழ­லில் அவர்­களை ஊக்­கு­விக்­கும் பொருட்­டு­கு­றைந்த செல­வில்  பதிப்­பித்­தி­ருக்­கின்­றேன்.

இலக்­கி­ய­வா­தி­கள் பலர் இது­கு­றித்­துப் பாராட்­டு­வது எனக்கு உத்­வே­கம் அளிக்­கி­றது என்­றால் மிகை­யில்லை. பெண்­கள் முன்­னேற்­றத்­திற்­கா­கப் பாடு­பட்­டு­வ­ரு­கி­றேன். "மகிழ்ச்சி பெண்­கள் நலப்­பே­ரவை" மீன­வப் பெண்­கள் முன்­னேற்ற அமைப்பு" " நீலக்­க­டல் மக­ளிர் சங்­கம்" போன்ற பெண்­க­ளுக்­காக சங்­கங்­கள் ஏற்­ப­டுத்தி, செய­லாற்றி வரு­கி­றேன்" என்­றார்.