தேன் மெழுகையும் காசாக்கலாம்...! – சுமதி

பதிவு செய்த நாள் : 09 மே 2019

பழனி மலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆதிவாசி சமூகத்தினரிடமிருந்து  அதிகப்படியான தேன் வாங்கப்பட்டதால் நிஷிதா வசந்த், பிரியாஸ்ரீ மணி இருவரும் 2015-ம் ஆண்டு கொடைக்கானலைச் சேர்ந்த Hoopoe on a Hill என்கிற கம்பெனியை துவங்கினார்கள். இதில்  ஆர்கானிக் தேனை பதப்படுத்தி, பேக் செய்து விற்பனை செய்வது. அத்துடன் ஆர்கானிக் தேன் தொடர்புடைய பொருட்களையும் ஆன்லைனிலும் ஆப்லைனிலும் விற்பனை செய்வது. பிரியாஸ்ரீ கூறு­கை­யில்,

“அதி­கப்­ப­டி­யாக இருந்த தேன்­மெ­ழு­கைக் கொண்டு என்ன செய்­ய­லாம் என வியந்து கொண்­டி­ருந்­தோம். காஸ்­மெ­டிக்ஸ் சந்­தை­யில் ஏற்க­னவே பல நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வரு­வ­தால் எங்­க­ளுக்கு அந்­தப் பகு­தி­யில் செயல்­பட விருப்­பம் இல்லை,” பிரியா என்­றார்.

மற்ற தொழில் முனை­வோர்­கள் போன்றே இந்­நி­று­வ­னர்­கள் இரு­வ­ரும் புதுமை படைத்­த­னர். “அந்த சம­யத்­தில் கன­டா­வில் இருந்து என்­னு­டைய உற­வி­னர் ஒரு­வர் அழ­கான தேன்­மெ­ழுகு ராப்­பர்­களை (Beeswax wraps) அனுப்­பி­வைத்­தார். நாங்­க­ளும் தேன் மெழுகு ராப்­பர் தொடர்­பான வணி­கத்­தில் ஈடு­பட தீர்­மா­னித்­தோம்,” என்­றார்.

தேன்­மெ­ழுகு ராப்­பர்­கள் மறு­ப­யன்­பாட்­டிற்கு உகந்­தது. மக்­கும்­தன்மை கொண்­டது. எனவே உண­வுப் பொருட்­களை பிரெஷ்­ஷாக வைக்க பயன்­ப­டுத்­தப்­ப­டும் பிளாஸ்­டிக்­கால் ஆன ராப்­பர்­க­ளுக்கு சிறந்த மாற்­றாக பார்க்­கப்­பட்டு வர­வேற்பை பெற்று வரு­கி­றது. பல ஆய்­வு­க­ளுக்­குப் பிறகு Hoopoe on a Hill பல வகை­யான தேன்­மெ­ழுகு ராப்­பர்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

துணி­க­ளால் தயா­ரிக்­கப்­ப­டும் இந்த ராப்­பர்­க­ளின் மேற்­ப­ரப்பு தேன்­மெ­ழு­கி­னால் ஆனது. உணவு வகை­களை சேமிக்­க­வும் வேறு இடங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­க­வும் பயன்­ப­டும் இந்த ராப்­பர்­கள் தற்­போது இவர்­க­ளது வலை­த­ளம் வாயி­லாக விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. இந்த ராப்­பர்­கள் பெரிய அளவு, நடுத்­தர அளவு, சிறி­யது என மூன்று அள­வு­கள் சேர்ந்த ஒரு பேக்­காக கிடைக்­கி­றது. வெவ்­வேறு அச்­சு­க­ளு­ட­னும் வண்­ணங்­க­ளு­ட­னும் கிடைக்­கும் பேக்­கின் விலை 390 ரூபாய்.

வரு­வாய் ஈட்ட தேன் விற்­ப­னை­யில் ஈடு­பட்­டி­ருந்த பழங்­குடி மக்­கள் தேன் வாங்க விருப்­ப­முள்­ளதா என நிறு­வ­னர்­கள் இரு­வ­ரி­ட­மும் கேட்­ட­னர். ஆரம்­பத்­தில் இரு­வ­ரும் சிறிய அள­வில் வாங்கி நண்­பர்­க­ளுக்­கும் உற­வி­னர்­க­ளுக்­கும் கொடுத்­த­னர். விரை­வில் அவர்­கள் வாங்கி சேமித்த தேன் அளவு அதி­க­மாக இருந்­த­தால் விற்­பனை செய்ய நினைத்­த­னர்.

கொடைக்­கா­ன­லில் இருந்த இவர்­க­ளது வீட்­டில் ஹூப்பி பறவை அடிக்­கடி வந்து செல்­லும். எனவே இவர்­கள் பதப்­ப­டுத்­தப்­ப­டாத இயற்­கை­யான தேனை விற்­பனை செய்­யும் இவர்­க­ளது கம்­பெ­னிக்கு  அந்­தப் பெய­ரையே வைத்­த­னர். நிறு­வ­னர்­கள் இரு­வ­ரும் பழங்­குடி சமூ­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து தேனை வாங்கி வீட்­டில் இருந்த சிறிய அறை­யில் சேமித்து வைத்து ஆப்­லை­னில் சில்­லறை வர்த்­தக முறை­யில் விற்­பனை செய்­த­னர். அவர்­க­ளுக்கு உதவ அந்­தப் பகு­தியை சேர்ந்த நான்கு பெண்­களை பணி­யி­ல­மர்த்­திக்­கொண்­ட­னர்.

பரு­வ­நிலை, பூக்­கள், தேன் உற்­பத்தி செய்­யும் தேனீ­யின் வகை ஆகி­ய­வற்­றைப் பொறுத்து தேன் வழங்­கப்­ப­டும். தற்­ச­ம­யம் மருத்­துவ குணத்­திற்கு பிர­ப­ல­மான ஜாமும் தேன், பல்­வேறு மலர்­க­ளில் இருந்து சேக­ரிக்­கப்­பட்ட தேன், யூக­லிப்­டஸ், Cerana, Dammer போன்ற அரிய வகை­கள் என பல்­வேறு வகை­க­ளில் வழங்­கு­கி­றது. வடி­கட்­டும் செயல்­முறை முடிந்­த­தும் தேன் கண்­ணாடி பாட்­டில்­க­ளில் பேக் செய்­யப்­ப­டு­கி­றது.

Hoopoe on a Hill அதிக பெண்­களை பணி­யி­ல­மர்த்தி அதிக தயா­ரிப்­பு­க­ளை­யும் இணைத்­துக்­கொண்டு வருங்­கா­லத்­தில் சிறப்­பாக வளர்ச்­சி­ய­டைய உள்­ளது.

”நாங்­கள் சமீ­பத்­தில் தேன்­மெ­ழுகு கிரேயான்ஸ் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளோம். இதற்கு தேன்­மெ­ழுகு மற்­றும் உண­வுத் தயா­ரிப்­பிற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டும் கலர்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இது குழந்­தை­க­ளுக்கு பாது­காப்­பா­னது. மேலும் புது­மை­யான பொருட்­களை இணைத்­துக்­கொள்ள திட்­ட­மிட்டு வரு­கி­றோம்,” என்­றார் ப்ரியாஸ்ரீ.