கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 9–05–19

பதிவு செய்த நாள் : 09 மே 2019

‘ஏ’ நாட் ஜஸ்ட் பார் ஆப்பிள்!  'A' not just for apple

மாணிக்­கம் என்ற பெயரை ஆங்­கில எழுத்­துக்­க­ளில் எப்­படி எழு­து­கி­றோம்? Manickam என்று பொது­வாக எழு­தப்­ப­டு­வதை நான் பார்த்­தி­ருக்­கி­றேன். இப்­போது எண் கணி­தம் என்ற பெய­ரில் மாற்­றப்­ப­டும் ஸ்பெல்­லிங்கை நான் கணக்­கில் எடுத்­துக்­கொள்­ள­வில்லை!

இந்­தப் Manickam என்ற பெய­ரில் வரும் முதல் உயி­ரெ­ழுத்­தின் உச்­ச­ரிப்­போடு கூடிய சில சொற்­களை பார்ப்­போம்.

மாஸ்­டர் master

மார்க் mark

மார்க்­கெட் market

மாஸ்க் mask

மார்ச் march

மார்ப்­பிள் marble

மார்ஷ் marsh

மேற்­படி சொற்­க­ளின் முதல் அசை (அதா­வது  'ma'), 'மா'ணிக்­கம், 'மா'ப்பிள்ளை, 'மா'மரம் போன்ற சொற்­க­ளில் உள்­ள­தைப்­போ­லத்­தான் ஒலிக்­கி­றது.

'மாஸ்­டர்' master என்று சொல்­லுக்­குப் பல் பொருள்­கள் உண்டு.

1.மாஸ்­டர் = ஆசி­ரி­யர்

ஸ்கூல்­மாஸ்­டர் = பள்ளி ஆசி­ரி­யர்

ஹெட்­மாஸ்­டர் = தலைமை ஆசி­ரி­யர்

அவர் ஹிஸ்­டரி மாஸ்­டர் டீசஸ் வெரி வெல். Our history master teaches very well.

எங்­கள் சரித்­திர ஆசி­ரி­யர் மிக­வும் நன்­றா­கப் பாடம் எடுக்­கி­றார்.

2.    ஒரு குறிப்­பிட்­டத் துறை­யில் அதி­கத் திறன் பெற்­ற­வர்

'மாஸ்­டர்' என்ற அடை­மொ­ழி­யு­டன் குறிப்­பி­டப்­ப­டு­கி­றார்.

 'மாஸ்­டர்' பெயின்­டர் (master painter) = மிக உயர்ந்த திற­னுள்ள ஓவி­யர்

3.    'மாஸ்­டர்' என்ற சொல்­லுக்கு எஜ­மான் என்ற பொரு­ளும் உண்டு.

'த டாக் லுக்ட் ஆட் இட்ஸ் மாஸ்­டர்'. The dog looked at its master. அந்த நாய் தன்­னு­டைய எஜ­மா­னனை நோக்­கி­யது.

4.    ஒரு துறையை 'மாஸ்­டர்' செய்­வது என்­றால் அதில் மிகச் சிறந்த திறமை பெறு­வது என்று பொருள்.

ஹீ ஹேஸ் ரியல்லி மாஸ்­டர்ட்d dத ஆர்ட் ஆஃப் மியூ­சிக். He has really mastered the art of music. இசை என்ற கலையை அவன் உண்­மை­யி­லேயே மாஸ்­டர் செய்­தி­ருக்­கி­றான். அதா­வது இசை­யில் மிக உயர்ந்த திற­மை­யும் ஞான­மும் பெற்­றி­ருக்­கி­றான் என்று பொருள்.

'யூ மஸ்ட் மாஸ்­டர் இங்­கி­லீஷ் இன் திரீ யர்ஸ்'. You must master English in three years. மூன்று வரு­டங்­க­ளில் நீ ஆங்­கி­லத்தை நன்­றாட கற்­று­வி­ட­வேண்­டும்.

திரு­வள்­ளு­வர் செட்d dதேட் யூ மஸ்ட் மாஸ்­டர் வாட் யூ லர்ன். Tiruvalluvar said that you must master what you learn.

நீ எதைக் கற்­கி­றாயோ அதை நன்கு கற்க வேண்­டும், அதை சந்­தே­கம் இல்­லா­மல் கற்க வேண்­டும் என்­றார் திரு­வள்­ளு­வர் (கற்க கச­ட­றக் கற்­பவை).

'யூ ஆர் த மாஸ்­டர் ஆஃப் யுவர் dடெஸ்­டனி'. You are the master of your destiny. உன்­னு­டைய விதி­யின் தலை­வன் நீ தான் (அதா­வது உன்­னு­டைய விதியை நிர்­ண­யிப்­ப­வன் நீ தான்).

எம்.ஏ. (மாஸ்­டர் ஆஃப் ஆர்ட்ஸ்)

எம்.எஸ்சி. (மாஸ்­டர் ஆஃப் ஸயன்ஸ்) ஆகி­யவை முது­நிலை பட்­டப் படிப்­பு­க­ளைக் குறிக்­கின்­றன.

பெரி­ய­வர்­க­ளுக்கு அடை­மொ­ழி­யாக 'மிஸ்­டர்' போடு­வ­தைப் போல், சிறு­வர்­க­ளுக்கு 'மாஸ்­டர்' என்று போடு­கி­றோம்.

'மார்க்' (mark) என்­றால் முத­லில் நினை­வுக்கு வரு­வது மதிப்­பெண்.

'ஹவ் மேனி மார்க்ஸ் dடிட்d  யூ gகெட் இன் எக­னா­மிக்ஸ்'? How many marks did you get in


economics? பொரு­ளா­தா­ரத்­தில் நீ எவ்­வ­ளவு மதிப்­பெண்­கள் பெற்­றாய்?

dடோன்ட் வர்ரி இஃப் யூ gகோட் லெஸ் மார்க்ஸ் dதிஸ் டைம்…யூ கேன் gகெட் bபெட்­டர் மார்க்ஸ் இன் dத கமிங் எக்z­­ஸாம்ஸ். Don’t worry if you got less marks this time..you can get better marks in the coming exams. இந்­தத் முறை குறைந்த மதிப்­பெண்­கள் வாங்­கி­விட்­டாய் என்­றால் கவ­லைப்­ப­டா­தே

வ­ரு­கிற தேர்­வு­க­ளில் இதை விட நல்ல மதிப்­பெண்­கள் உன்­னால் வாங்க முடி­யும்.

'மார்க்' (mark) என்­றால் தழும்பு, வடு முத­லி­ய­வற்­றை­யும் குறிக்­கும். 'அ மோல் ஆன் ஹிஸ் ஃபோர்­ஹெட் இஸ் ஹிஸ் பர்த்­மார்க்'. A mole on his forehead is his birthmark.

நெற்­றி­யிலே இருக்­கும் மச்­சம்­தான் அவ­ரு­டைய அடை­யாள வடு.

'யூ மஸ்ட் மேக் அ மார்க் இன் லைஃப்'. You must make a mark in life என்ற வாக்­கி­யத்­தில் 'மார்க்' என்­றால் சாதனை, சமூ­கத்­தில் பலர் மதிக்­கிற நிலை. வாழ்க்­கை­யில் பலர் மெச்­சு­கிற வண்­ணம்  வெற்­றி­பெற வேண்­டும் என்று பொருள்.

புள்ளி, அரை புள்ளி முத­லிய நிறுத்த குறி­கள், பங்க்­சு­யே­ஷன் மார்க்ஸ் (punctuation marks) என்று குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன.

'தேர் ஆர் 14 பங்­சு­யே­ஷன் மார்க்ஸ் இன் இங்­கி­லீஷ்'. There are 14 punctuation marks in English. ஆங்­கி­லத்­தில் 14 நிறுத்த குறி­கள் உள்­ளன.

'மார்க் மை வர்ட்ஸ்…ஹீ வில் டூ த கன்ட்ரி பிரவ்ட்d' .

Mark my words. He will do the country proud. என் சொற்­க­ளைக் கவனி. அவன் தேசத்­திற்­குப் புகழ் சேர்ப்­பான்.

dத இம்­பார்­டென்ட் பாஸே­ஜெஸ் ஆர் மார்க்ட் வித் அ ரெட் பென்­ஸில். The important


passages are marked with a red pencil.

சிகப்பு பென்­ஸி­லைக்­கொண்டு முக்­கி­ய­மான பகு­தி­கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

'ஆஸ்  அ மார்க் ஆஃப் ரெஸ்­பெக்ட் டு த டிபார்ட்­டெட் லீடர், த மெம்­பர்ஸ் அப்­ஸர்வ்ட் டூ மினிட்ஸ் ஸைலென்ஸ்'. As a mark of respect to the departed leader, the members observed two minutes silence. மறைந்த தலை­வ­ருக்கு மரி­யாதை செலுத்­தும் வித­மாக, உறுப்­பி­னர்­கள் இரண்டு நிமிட மவ­னம் அனுஷ்­டித்­தார்­கள். (அதா­வது மறைந்த தலை­வ­ருக்­குத் தங்­க­ளு­டைய மரி­யா­தை­யைக் குறிக்­கும் முக­மா­க…­­என்று பொருள்).

'மார்க்' (mark) என்­ப­து­டன் 'கெட்' (ket) சேர்த்­தால், மார்க்­கெட் (market). இது ஏறக்­கு­றைய தமிழ்ச் சொல்­போ­லவே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

'மார்க்­கெட்' என்­றால் சந்தை….மந்­தை­வெளி மார்க்­கெட், மூர் மார்க்­கெட் என்­ப­து­போல…

மார்க்­கெட் அது பங்கு சந்­தை­யை­யும் குறிக்­கும்.

ஒரு நடி­க­ருக்கு இருக்­கும் அல்­லது இல்­லா­மல்­போ­கும் மவு­சை­யும் அது குறிக்­கும்.

'தேட் ஆக்­டர் ஹேஸ் லாஸ்ட் ஹிஸ் மார்க்­கெட்'. That actor has lost his market. அந்த நடி­கர் தன்­னு­டைய மார்க்­கெட்டை இழந்­து­விட்­டார். அவ­ருக்­குத் திரைப்­பட ரசி­கர்­கள் மத்­தி­யி­லும் அத­னால் திரைப்­பட சந்­தை­யி­லும் மவுசு இல்லை என்று பொருள்.

'டேக் ஆஃப் யுவர் மாஸ்க் (mask) அண்ட் ஸ்பீக் டு மீ'. Take off your mask and speak to me. உன்­னு­டைய முக­மூ­டியை எடுத்­து­விட்டு என்­னு­டன் பேசு.

'மார்ச்' (march) மாதம் சென்­று­விட்­டது. மே வந்­து­விட்­டது. ஆனா­லும் அவ­னைக் காணோம். March has gone. May has come. But he is not to be seen. மார்ச் ஹேஸ் gகோன். மே ஹேஸ் கம். பட் ஹீ இஸ் நாட் டு பீ ஸீன்.

மாணிக்­கம் என்ற பெய­ரின் முதல் உயிர் எழுத்து ஒலியை ஒட்­டித்­தான் 'மாஸ்­டர்' master, மார்க் mark, மார்க்­கெட் market, மாஸ்க் mask, மார்ப்­பிள் marble (சல­வைக்­கல்), மார்ஷ் marsh (சதுப்பு  நிலம்), மார்ச் march என்ற சொற்­க­ளின் உயிர் எழுத்து உச்­ச­ரிப்பு அமை­கி­றது.

ஆனால் அதே  'a', 'மே' (may), 'மேஸன்' (mason), மேட் (made) போன்ற சொற்­க­ளில் 'ஏ' என்ற ஒலி­யு­டன் ஒலிக்­கி­றது.

Cat, cap, map, nap, snap போன்ற சொற்­க­ளில் அது 'ஆப்­பிள்' என்ற சொல்­லில் வரும் முதல் உயிர் எழுத்து ஒலி­யு­டன் ஒத்­தி­ருக்­கி­றது.