பிசினஸ் : ஏன் பிசினஸ்...! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 09 மே 2019

எல்லா மனி­தர்­க­ளுக்­கும் ஆசை உண்டு. எனக்­கும் ஓர் ஆசை உண்டு. நம் நாட்­டில் பிசி­னஸ் செய்­கி­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை இன்­னும் பல நுாறு மடங்கு அதி­க­ரிக்க வேண்­டும் என்­பதே என் ஆசை. இதற்கு, பிசி­னஸ் அல்­லது தொழில் செய்­வது குறித்த அறிவை நம் மக்­க­ளி­டையே பரப்ப ஓர் இயக்­கமே தொடங்­கப்­பட வேண்­டும். நம் இளை­ஞர்­க­ளுக்கு ஏதோ ஒரு நிறு­வ­னத்­தில் நல்ல சம்­ப­ளத்­து­டன் வேலை என்­றில்­லா­மல், எதிர்­கா­லக் கன­வு­களை நிஜ­மாக்­கும் பிசி­னஸ் உல­கில் தைரி­ய­மாக நுழை­யத் தேவை­யான சூழல் உரு­வாக்­கித் தரப்­பட வேண்­டும். கல்­லூ­ரிப் படிப்பை முடித்த இளை­ஞர்­கள் பிசி­னஸ் உல­கில் காலடி எடுத்­து­வைக்­கும் வழி­க­ளைச் சொல்­லப் போகி­றேன். ஏற்­க­னவே தொழில் செய்து வரு­ப­வர்­கள், ஏதா­வது தவறு செய்­தி­ருந்­தால் அந்­தத் தவறை திருத்­திக்­கொண்டு, சரி­யாக, வெற்­றி­க­ர­மா­கச் செய்­யும் வழி­களை என் அனு­ப­வத்­தி­லி­ருந்து உங்­க­ளு­டன் பகிர்ந்து கொள்­ளப் போகி­றேன். ஆக, நான் கற்­றதை உங்­க­ளுக்­குக் கற்­றுத்­தர கடை விரித்­து­விட்­டேன். இதி­லி­ருந்து உங்­க­ளுக்­குத் தேவை­யா­னதை எடுத்­துக்­கொள்ள அழைக்­கி­றேன்.

சன் பார்மா நிறு­வ­னத்­தின் அதி­பர் திலிப் சங்வி பற்றி உங்­க­ளுக்­குத் தெரி­யுமா...

32 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வெறும் 10,000 ரூபா­யில் திலிப் சங்வி தொடங்­கிய சன் பார்மா நிறு­வ­னத்­தின் இன்­றைய சந்தை மூல­தன மதிப்பு சுமார் இரண்டு லட்­சம் கோடி ரூபாய்க்கு மேல். இந்த நிறு­வ­னத்­தின் வரு­மா­னம் சுமார் 27,286 கோடி ரூபாய். திலிப் சங்வி என்­கிற ஒரு தொழில் அதி­ப­ரால் எப்­படி இவ்­வ­ளவு பெரிய சாத­னை­யைச் செய்ய முடிந்­தது?

திலிப்­பின் தந்­தை­யார், மும்­பை­யில் மருந்­துக் கடை ஒன்றை நடத்தி வந்­தார். கல்­லூ­ரி­யில் படிக்­கிற காலத்­தில் தன் தந்­தைக்கு உதவி செய்­வ­தற்­காக அந்த மருந்­துக் கடை­யில் வேலை பார்ப்­பார் திலிப். அந்­தச் சம­யங்­க­ளில், மருந்­து­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை அவர் சரி­யா­கப் புரிந்­து­கொண்­டார். மருந்து விற்­பனை செய்­யும் தொழி­லில் இருக்­கிற நெளி­வு­சு­ளி­வு­களை பிராக்­டி­க­லா­கத் தெரிந்து கொண்­டார்.

அவர் படித்து முடித்­த­வு­டன், தன் தந்­தை­யைப்­போல மருந்­துக்­கடை நடத்­து­வதே தன் லட்­சி­யம் என்று இருந்­து­வி­ட­வில்லை. வேறு நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து மருந்து வாங்கி விற்­பதை விட, நாமே மருந்து தயா­ரித்து விற்­றால் என்ன என்று யோசித்­தார். இந்த யோசனை அவரை ஒரு சிறிய மருந்து தயா­ரிக்­கும் நிறு­வ­னத்­தைத் தொடங்க வைத்­தது.

அவ­ரது முதல் முயற்சி சரி­யாக அமை­யவே, அடுத்து அதை­வி­டச் சிறி­தும் பெரி­து­மா­கப் பல முயற்­சி­கள். அதி­லும் வெற்றி கிடைக்க, அடுத்­த­டுத்து சிறிய மற்­றும் பெரிய மருந்து நிறு­வ­னங்­களை வாங்­கி­னார். ரான்­பாக்ஸி நிறு­வ­னம் இன்று இவர் கையில் இருக்­கி­றது. இந்த 32 ஆண்­டு­க­ளில் உலக அள­வில் ஐந்­தா­வது பெரிய மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் அதி­ப­ராக உயர்ந்­தி­ருக்­கி­றார் திலிப் சங்வி.

பழ­கிய பாதை­யி­லேயே நடக்­கும் நம்­மைப் போன்ற ஒரு மனி­த­ராக திலிப் சங்வி இருந்­தி­ருந்­தால், என்ன செய்­தி­ருப்­பார்? தன் தந்­தை­யின் மருந்­துக் கடையை இன்­னும் சிறப்­பாக நடத்­து­வது எப்­படி என்­று­தான் யோசித்­தி­ருப்­பார். அதன்­மூ­லம் ஒரு மருந்­துக்­க­டை­யைப் பத்து மருந்­துக் கடை­யாக விஸ்­த­ரித்­தி­ருப்­பார். ஆனால், மருந்து விற்­ப­னையை விட்­டு­விட்டு, மருந்து தயா­ரிப்பு என்று அடுத்­தக் கட்­டத்தை நோக்கி அவர் நகர்ந்­த­து­தான் இன்­றைக்கு எல்­லோ­ரும் அவரை பார்க்க வைத்­தி­ருக்­கி­றது.

இன்­றைக்­கும்­கூட மருந்­துத் தயா­ரிப்பை அவர் கெட்­டி­யா­கப் பிடித்­துக் கொண்­டி­ருக்­கிற அதே நேரத்­தில், பல புதிய தொழில்­க­ளில் உள்ள வாய்ப்­பு­க­ளைக் கவ­னிக்­கத் தவ­று­வ­தில்லை. அடுத்­த­டுத்த பிசி­னஸ் முயற்­சி­கள்­தான் திலிப் சங்­வியை இன்­னும் புதிய உய­ரத்­துக்­குக் கொண்­டு­போ­யி­ருக்­கி­றது. பத்­தா­யி­ரம் ரூபா­யில் பிசி­னஸ் தொடங்­கிய திலிப், இன்று பல லட்­சம் கோடி ரூபாய்க்கு அதி­பதி.

எதற்கு திலிப்­பின் கதை­யைச் சொன்­னேன் தெரி­யுமா...

பிசி­னஸ் செய்­வ­தன் மூலமே பல ஆயி­ரம் கோடி ரூபாயை ஒரு­வர் சம்­பா­திக்க முடி­யும் என்­பதை எடுத்­துச் சொல்­லத்­தான். இதற்கு விதி­வி­லக்கு இருக்­க­லாம். ஆனால், பிசி­னஸ் மூலம் கிடைக்­கும் பணம் வேறு எதி­லும் கிடைக்­காது என்­பது மட்­டும் நிச்­ச­யம்.

இன்­றைக்கு கல்­லூ­ரிப் படிப்பு படித்து முடிக்­கிற நிலை­யில் இருக்­கிற நம் இளை­ஞர்­க­ளின் ஒரே எதிர்­பார்ப்பு, படித்து முடித்­த­வு­டன் ஒரு நல்ல நிறு­வ­னத்­தில் வேலைக்­குச் சேர்த்­து­விட வேண்­டும் என்­ப­தா­கவே இருக்கிறது.

பெற்­றோ­ரின் எதிர்­பார்ப்­பும் அது­வே­தான். இத்­தனை ஆண்­டு­க­ளா­கச் செலவு செய்து குழந்­தை­க­ளைப் படிக்க வைத்த பெற்­றோர். இனி­மே­லா­வது அவர்­கள் மூலம் கொஞ்­சம் வரு­மா­னம் கிடைக்­கட்­டுமே என்று நினைப்­பது நியா­ய­மான ஆசையே.

மேற்கு நாடு­க­ளில், குறிப்­பாக, அமெ­ரிக்­கா­வில் இப்­படி யோசிப்­ப­தில்லை. அங்கு கல்­லூ­ரிப் படிப்பை முடித்­த­வு­டன், வேலைக்­குச் செல்­லும் நோக்­கத்­துக்­குத் தரும் மரி­யா­தையை பிசி­னஸ் தொடங்­கு­வ­தற்­கும் தரு­கி­றார்­கள். அத­னால்­தான் அங்கு புதிது புதி­தாக பிசி­னஸ் செய்­யும் ‘ஸ்டார்ட் அப்’ (சிறிய அள­வி­லான புதிய பிசி­னஸ் முயற்சி) நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை மிக அதி­க­மாக இருக்­கி­றது.

வித்­தி­யா­ச­மான ஐடி­யாக்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு சிறிய அள­வில் அவர்­கள் தொடங்­கும் ‘ஸ்டார்ட் அப்’­கள் பிற்­பாடு மிகப் பெரிய அள­வில் வளர்ந்து பல பில்­லி­யன் டாலர்­க­ளைச் சம்­பா­தித்­துத் தந்­து­வி­டு­கி­றது. அமே­ஸான், கூகுள், பேஸ்­புக் என இதற்கு எத்­த­னையோ உதா­ர­ணங்­க­ளைச் சொல்ல முடி­யும். ஆனால், நம்­ம­வர்­கள் பிசி­ன­ஸில் நுழை­யத் தயங்க முக்­கி­யக் கார­ணமே, எடுத்த எடுப்­பி­லேயே வரு­மா­னம் கிடைக்­காதே என்­ப­து­தான். தவிர, பிசி­னஸ் தொடங்க மூல­த­ன­மும் வேண்­டுமே! அது நம்­மி­டம் இல்­லையே என்று தயங்கி நின்­று­வி­டு­கி­றார்­கள் நம்­ம­வர்­கள்.

ஆனால், சிறிய அள­வி­லா­வது ஒரு தொழி­லைத் தொடங்கி, அதை அடுத்­தச் சில ஆண்­டு­க­ளுக்­குச் சரி­யா­கச் செய்­தால், அதன்­மூ­லம் உங்­க­ளுக்கு நிச்­ச­யம் வரு­மா­னம் வரத் தொடங்­கும். இந்த வரு­மா­னம் உங்­கள் தொழில் வளர்ச்­சிக்­கேற்ப பல மடங்­காக உய­ரும். ஏதோ ஒரு நிறு­வ­னத்­தில் உய­ர­தி­கா­ரி­யாக ஓய்வு பெறும்­போது கிடைக்­கும் பணத்­தை­விட பல நூறு மடங்கு அதிக பணம் பிசி­ன­ஸில் கிடைக்­கும்.

ஓலைக்­கு­டி­சை­யில் பிறந்த சாதா­ரண மனி­த­னைக்­கூ­டப் பொரு­ளா­தார உச்­சத்­துக்­குக் கொண்­டு­போய்­வி­டு­கிற வல்­லமை

பிசி­ன­சுக்கு உண்டு. ஜெயிக்க வேண்­டும் என்­கிற வெறி­யும், கடின உழைப்­பும், வித்­தி­யா­ச­மாக யோசிக்­கும் திற­மை­யும் இருந்­தால், திலிப் சங்வி தன் வாழ்­நா­ளில் அடைந்த வெற்றி நம் எல்­லோ­ருக்­கும் சாத்­தி­யம்­தான்!

இதைப் படித்­த­வு­டன், நான் பிசி­னஸ் செய்­யப் போகி­றேன் என்று முடி­வெ­டுத்­த­வர் களுக்கு என் வாழ்த்­துக்­கள்