கெட்­ட­வளா நடிக்­கி­றது ஜாலியா இருக்கு! – சவு­மியா

பதிவு செய்த நாள் : 08 மே 2019

கோர்ட்­டில், கறுப்பு அங்­கி­யு­டன் நீதி­பதி முன்­னால் நின்று கொண்டு ‘யுவர் ஆனர்...’ என்று சொல்லி வாதாட வேண்­டி­ய­வர், சவு­மியா. ஆனால், கேமரா முன்பு நின்று கொண்டு நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

‘நாய­கி’­­யில் நடித்து வரும் அவரை சந்­தித்த போது –

‘‘அப்பா என்னை ஒரு வழக்­க­றி­ஞ­ராக பார்க்­க­ணும்னு ஆசைப்­பட்­டாரு. அத­னால, நான் வக்­கீ­லுக்கு படிச்­சேன். படிக்­கும் போது எனக்­கும் வக்­கீ­லா­க­ணும் அப்­ப­டீங்­கற ஆர்­வத்­தோ­டு­தான் படிச்­சேன். பள்­ளி­யி­லே­யும், கல்­லுா­ரி­யி­லே­யும் கலை விழாக்­கள்ல கலந்­துக்­கு­வேன். அந்த சம­யத்­திலே, ‘‘நீ ரொம்ப பியூட்­டி­புல்லா இருக்கே. டான்ஸ் சூப்­பரா ஆடுறே. நீ ஏன் நடிக்­கக்­கூ­டாது?’’ அப்­ப­டீன்னு எனக்­குள்ளே நடிப்பு ஆசையை பிரண்ட்ஸ் எல்­லா­ரும் துாண்டி விட்­டாங்க.

மதுரை என்­னோட சொந்த ஊரு. நான் ஒரே பொண்­ணுங்­கி­ற­தால, எங்க வீட்ல எனக்கு பயங்­க­ரமா ‘செல்­லம்’ கொடுப்­பாங்க. படிப்பு முடிஞ்­ச­தும் நடிக்க போறேன்னு சொன்ன போது  அப்பா அதுக்கு ஒத்­துக்­கலே. ஒரு பொண்ணா இருக்­கி­ற­தால, அப்பா ரொம்ப யோசிச்­சாங்க. அத­னால, சென்­னைக்கு வந்து ஒரு ஐடி கம்­பெ­னி­யிலே ஒர்க் பண்ண ஆரம்­பிச்­சேன். கிட்­டத்­தட்ட மூணு வரு­ஷமா அப்­பாவை சம்­ம­திக்க வைக்­கி­ற­துக்கு போரா­டி­னேன். அப்­பு­றம், ஒரு வழியா அப்பா சம்­ம­திச்­சிட்­டாரு. முதன்­மு­தலா ‘பேர­ழ­கி’­­யிலே நடிக்­கி­ற­துக்கு சான்ஸ் கிடைச்­சிச்சு. அதுக்­கப்­பு­றம் ‘ரோஜா’­­விலே நடிச்­சேன். பட், இந்த ரெண்டு சீரி­யல்­கள்­ல­யும் என் கேரக்­டர் சொல்­லிக்­கிற மாதிரி இல்லே. அத­னால, நான் ரொம்ப ‘அப்­செட்’ ஆனேன். ஆனா, நல்ல வேளையா ‘நாய­கி’ன்னு ஒரு சூப்­பர் சீரி­யல் எனக்கு அமைஞ்­சி­டுச்சு. எனக்­குன்னு ஒரு நல்ல அடை­யா­ளத்தை கொடுத்­துச்சு. இதிலே நடிக்க வந்த பிற­கு­தான் நடிப்பு பத்தி பல விஷ­யங்­களை தெரிஞ்­சுக்க முடிஞ்­சிச்சு. ‘சுஹா­சி­னி’ங்­கிற நெகட்­டிவ் கேரக்­டர்ல நடிக்­கி­றது ரொம்ப ஜாலியா இருக்கு. வெளியே எங்கே போனா­லும் என்னை அடை­யா­ளம் கண்­டு­பி­டிச்­சி­டு­றாங்க. அது மட்­டு­மில்லே... பெண்­கள் பல­ரும் என்­னோட உதட்­ட­சைவு பிர­மா­தமா இருக்­கி­றதா பாராட்­டு­றாங்க.

ஒரு சம­யம் – ஒரு கடைக்கு ஷாப்­பிங் போயி­ருக்­கும் போது ஒரு பெண் என்­கிட்ட ‘‘உங்க உத­டு­கள் கியூட்டா இருக்கு!’’ அப்­ப­டீன்னு சொன்­னாங்க. அந்த சம­யத்­திலே, எப்­படி ரீயாக்ட் பண்­ற­துன்னே எனக்கு தெரி­யலே. அப்­பு­றம்.... ‘‘நீங்க சூப்­பரா நடிக்­கி­றீங்க, பயங்­கர கியூட்டா இருக்­கீங்க!’’ன்னும் பாராட்­டும் போது அவ்­வ­ளவு சந்­தோ­ஷமா இருக்கு. ஒரு கலை­ஞிக்கு இதை­விட வேற என்­னங்க வேணும்?’’