சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 391– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 08 மே 2019

நடி­கர்­கள் : விஜய், அசின், ராஜ்­கி­ரண், மித்ரா குரி­யன், வடி­வேலு, ரோஜா செல்­வ­மணி, மகா­ரா­ஜன் மற்­றும் பலர். இசை : வித்­யா­சா­கர், ஒளிப்­ப­திவு :  என்.கே. ஏகாம்­ப­ரம், எடிட்­டிங் : கே.ஆர். கவு­ரி­சங்­கர், தயா­ரிப்பு :  கலைப்­புலி எஸ். தாணு, திரைக்­கதை, இயக்­கம் : சித்­திக்.

பூமி­நா­தன் (விஜய்), பண­ப­ல­மும், ஆள்­ப­ல­மும் உள்ள நிலச்­சு­வான்­தா­ர­ரான முத்­து­ரா­ம­லிங்­கத்தை (ராஜ்­கி­ரண்) தனது காட்­பா­த­ராக நினைக்­கி­றான். தனது தாய்,தந்­தை­யின் விருப்­பப்­படி அவ­ருக்கு பாடி­கார்­டாக போகி­றான். முத்­து­ரா­ம­லிங்­கத்­தின் மகனை விரும்பி இறந்து போன தனது மக­ளுக்காக பழி­வாங்க மகா­ரா­ஜன் முத்­து­ரா­ம­லிங்­கத்­தின் மக­ளான மீராவை கொல்ல முயற்­சிக்­கி­றான். தனது மக­ளுக்கு காவ­ல­னாக பூமியை நிய­மிக்­கி­றார். பூமி­யும் இடை­யில் நிறுத்­திய தன் ப­டிப்பை தொட­ரு­வ­தாக கூறி மீரா­விற்கு கல்­லூ­ரி­யி­லும் காவ­லாக இருக்­கி­றான். பூமி தன்னை பின்­தொ­டர்­வதை விரும்­பாத மீரா தன் தோழி மது­வு­டன் (மித்ரா குரி­யன்) இணைந்து அம்­முக்­குட்டி என்ற பெய­ரில் பூமிக்கு போன் செய்து அவ­னது கவ­னத்தை கலைக்­கி­றாள்.

போன் பேச்­சு­க­ளால் முகம் அறி­யாத அம்­முக்­குட்­டியை விரும்­பத் தொடங்­கு­கி­றான் பூமி. சிறிது காலத்­தில் மீரா­வும் பூமியை விரும்­பு­கி­றாள். இரு­வ­ரும் சந்­திக்க நினைத்­தும் சூழ்­நிலை சாத­க­மாக இல்லை. மீரா என்று தெரி­யா­ம­லேயே அம்­முக்­குட்­டி­யோடு ஊரை விட்டு செல்­வ­தற்கு பூமி சம்­ம­திக்­கி­றான். ஆனால் விஷ­யம் தெரிந்து கோப­மா­கும் முத்­து­ரா­ம­லிங்­கம் பூமியை தடுப்­ப­தற்கு ஆள் அனுப்­பு­கி­றார். முத்­து­ரா­ம­லிங்­கத்தை ஏமாற்­று­வ­தற்­காக அவ­ரி­டம் பூமி வேறொரு பெண்ணை விரும்­பு­வ­தா­க­வும் அவ­ளு­டன் செல்­லப்­போ­வ­தா­க­வும் மீரா கூறு­கி­றாள். பூமி­யி­டம் உண்­மையை கூறு­வ­தற்­காக போனோடு மதுவை அனுப்­பு­கி­றாள் மீரா. முத்­து­ரா­ம­லிங்­கம் ரயில் நிலை­யத்­திற்கு தனது ஆட்­களை அனுப்பி பூமி­யோடு எந்­தப் பெண்­ணும் இல்­லை­யென்­றால் அவனை கொன்­று­வி­டு­மாறு கூறு­கி­றார்.

இர­யி­லில் அம்­முக்­குட்­டிக்­காக காத்­தி­ருக்­கும் பூமி தன்னை நோக்கி வந்த மதுவை அம்­முக்­குட்­டி­யாக நினைத்து அணைத்­துக் கொள்­கி­றான்.  முத்­து­ரா­ம­லிங்­கத்­தின் ஆட்­க­ளும் பூமி­யின் காத­லியை பார்த்­து­விட்­ட­தாக அவ­ருக்கு தக­வல் அனுப்­பு­கி­றார்­கள். அவர்­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­காக பூமியை அணைத்­துக்­கொள்­ளும் மது­விற்கு போனில் அழைப்பு வரு­கி­றது. உண்­மையை பூமி­யி­டம் சொல்­வ­தற்­காக மீரா அழைப்­பது புரிந்­தும் மது போனை வீசி எறி­கி­றாள். அனை­வ­ரும் அதிர்ச்­சி­யா­கும் விதத்­தில் இது­வ­ரை­யி­லும் ர­க­சி­ய­மாக தனக்­குள்ளே பூமியை நேசித்து வந்த மது கிடைத்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி பூமி­யோடு இணை­கி­றாள். மது­வின் சதி புரிந்­தும் மீரா மவுன­மா­கி­றாள்.

சில வரு­டங்­கள் கழித்து, உயர் ப­தவி வகிக்­கும் அதி­கா­ரி­யாக பூமி தன் மகன் சித்­தார்த்­து­டன் முத்­து­ரா­ம­லிங்­கத்­தின் ஊருக்கு வரு­கி­றான். உடல்­நிலை சரி­யில்­லாத முத்­து­

ரா­ம­லிங்­கத்தை சந்­திக்­கும் பூமி, மீரா இன்­னும் திரு­ம­ண­மா­கா­மல் இருப்­பது தெரிந்து வருத்­த­ம­டை­கி­றான். சித்­தார்த் குழந்­தை­யாக இருக்­கும்­போதே நோய்­வாய்ப்­பட்டு மது இறந்­தி­ ருந்­தா­லும் நடந்­த­வற்றை டைரி­யில் எழுதி தனது மக­னி­டம் சேரு­மாறு செய்­தி­ருக்­கி­றாள். உண்­மையை தெரிந்­தி­ருக்­கும் சித்­தார்த் ஊரி­லி­ருந்து கிளம்­பும் நாளில் மீராவை அம்­மா­வென அழைப்­ப­தோடு தங்­க­ளோடு வரு­மாறு கூறு­கி­றான். அதிர்ச்­சி­யா­கும் பூமி கோபப்­பட முத்­து ­ரா­ம­லிங்­கம் சமா­தா­னப்­ப­டுத்தி மீராவை அவர்­க­ளோடு அனுப்பி வைக்­கி­றார்.

மூவ­ரும் ஊர் திரும்­பும் போது இர­யில் புறப்­ப­டு­வ­தற்­குள் தனது அம்மா மது­வின் ஆசைப்­படி அந்த டைரியை பூமி­யி­ட­மி­ருந்து மறைத்து குப்­பை­யில் போடு­கி­றான் சித்­தார்த். ஆனால், சித்­தார்த்துக்கு தெரி­யா­மல் அந்த டைரியை கைப்­பற்­றும் பூமி முழு­வ­து­மாக அதை படித்து முடிக்­கி­றான். தன்னை விரும்­பிய அம்­முக்­குட்டி மீரா­தான் என்று அறிந்து கொள்­ளும் பூமி முழு மன­தோடு மீராவை ஏற்­றுக்­கொள்­கி­றான். மகிழ்ச்­சி­யான குடும்­ப­மாக பய­ணத்தை தொடர்­கி­றார்­கள்.