அரசுப் பள்ளிகளில் 7000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்

பதிவு செய்த நாள் : 07 மே 2019 12:39

பழனி,

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள 7,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பழனியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,

2019-2020 கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தேர்தல் முடிவுக்கு பிறகு பள்ளிக் கல்வித்துறைக்கு தனிச் சேனல் தொடங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்றார்.

9, 10, 11-ம் வகுப்புகளுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் திட்டம் உள்ளது.

ஏற்கனவே 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரும். இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் உள்ள 7,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்தார்.