கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 178

பதிவு செய்த நாள் : 06 மே 2019

‘திருவிளையாடல்’ திரைப்படமும் புராணமும்!

தமிழ் சினிமா சரித்­தி­ரத்­தில், 1965ம் ஆண்டு வெளி­யான ‘திரு­வி­ளை­யா­டல்’ ஒரு மிகப்­பெ­ரிய வெற்­றிப்­ப­ட­மாக அமைந்­து­விட்­டது.

அது ஒரு புரா­ணப் பட­மா­க­வும் பக்­திப் ­பட­மா­ க­வும்  இருந்­தா­லும், எல்­லோ­ரை­யும் ஈர்க்­கும் வகை­யில் அமைந்­தி­ருந்­தது. அதிர்ஷ்­ட­வ­ச­மாக அதன் பிரதி இன்­னும்  புத்­தம் புதி­தா­கக் காணக்­கி­டைக்­கி­றது.

சிவாஜி கணே­சன், சாவித்­திரி, நாகேஷ், தேவிகா, முத்­து­ரா­மன், ஏ.பி.நாக­ரா­ஜன் போன்­றோ­ரின் தேர்ந்த நடிப்­பும், பாட்டு நட்­சத்­தி­ரங்­க­ளான  கே.பி.சுந்­த­ராம்­பாள், டி.ஆர்.மகா­லிங்­கம் முத­லி­யோ­ரின் சிறந்த பாட்­டும் பங்­க­ளிப்­பும், அட்­ட­கா­ச­மான அரங்க அமைப்­பு­க­ளும் (கங்கா), கண்­ணுக்கு இத­மான வண்ண ஒளிப்­ப­தி­வும் (கே.எஸ்.பிர­சாத்), சிறந்த இசை­ய­மைப்­பும் (கே.வி.மகா­தே­வன்), ‘திரு­வி­ளை­யா­டல்’ படத்தை சிரஞ்­சீ­விப் பட­மாக முன்­னி­றுத்­து­கின்­றன.

‘திரு­வா­ல­வாய்’ என்று பெயர் பெற்ற மது­ரை­யம்­ப­தி­யில் கோயில்­கொண்­டுள்ள சுந்­த­ரேஸ்­வ­ரர் என்ற சொக்­க­நா­த­ரின் திரு­வி­ளை­யா­டல்­களை முன் வைக்­கி­றது, ‘திரு­வி­ளை­யா­டல் புரா­ணம்’.

பதி­னோ­றாம் நூற்­றாண்­டில் வாழ்ந்து, தேவா­ரங்­களை மீட்ட நம்­பி­யாண்­டார் நம்பி  திரு­வி­ளை­யா­டல் புரா­ணத்தை முத­லில் எழு­தி­னார். இதைத் தொடர்ந்து வேறு சில­ரும் சொக்­கே­ச­ரின் விளை­யா­டல்­களை  நூலாக்­கி­யி­ருந்­தா­லும்,  பதி­னா­றாம் நூற்­றாண்­டில் வாழ்ந்த பரஞ்­சோதி முனி­வர் எழு­திய ‘திரு­வி­ளை­யா­டல் புரா­ணம்’, இறவா இலக்­கி­ய­மா­கத் திகழ்­கின்­றது.

சுந்­த­ரேஸ்­வ­ரர் தனது பக்­தர்­க­ளைக் காக்­க­வேண்டி நிகழ்த்­திய 64 லீலை­களை ஆடம்­ப­ரம் இல்­லாத எளி­மை­யான நடை­யில் சொல்லி, அதில் பக்தி மணத்­தை­யும் சைவ சம­யத்­தின் தத்­து­வச்­செ­றி­வை­யும் இழை­யோ­டச் செய்­தார் பரஞ்­சோதி முனி­வர்.

மவு­னத்­தில் மகா பெரிய தத்­து­வங்­களை உப­தே­சம் செய்­யும் தட்­சி­ணா­மூர்த்­தியை எப்­படி நினைக்­க­வேண்­டும் என்று ஒரு பாட­லில் கூறு­கி­றார் பரஞ்­சோதி முனி­வர். ‘சொல்­லா­மல் சொன்­ன­வரை, நினை­யா­மல் நினைந்­தால்  நிரந்­தர விடு­தலை கிடைக்­கும்’ என்று அவர் சொல்­லு­கி­ற­போது, ஜென் தத்­து­வம் செந்­த­மி­ழின் வண்­ணங்­க­ளில் மிளிர்­கி­றது.

சமஸ்­கி­ருத மொழி­யில் ‘ஹாலாஸ்ய மகாத்­மி­யம்’ என்ற பழம் நூல், சுந்­த­ரேஸ்­வ­ரர் மேற்­கொண்ட 64 திரு­வி­ளை­யா­டல்­களை விரித்து உரைக்­கி­றது. திரு­மலை நாயக்­க­ரின் அமைச்­ச­ராக இருந்த நீல­கண்ட தீட்­சி­தர், ‘சிவ­லீ­லார்­ண­வம்’ என்ற பெய­ரில் திரு­வி­ளை­யா­டல் புரா­ணத்தை சமஸ்­கி­ருத மொழி­யில் மகா­கா­வி­ய­மாக வடித்­தார்.

 


சிவத்­தொண்­டர்­க­ளின் வர­லா­று­கள் நாட­கங்­க­ளி­லும் ஆரம்­ப­கால தமிழ்த்­தி­ரைப்­ப­டங்­க­ளி­லும் இடம்­பெற்­றி­ருந்­தா­லும், திரு­வி­ளை­யா­டல் புரா­ணம் இடம்­பெ­றா­மல் இருந்­தது. இந்த நிலை ­யில்­தான், பிர­பல கதா­கா­லட்­சேப நிபு­ணர் ‘சூல­மங்­க­லம்’ வைத்­தி­ய­நாத பாக­வ­த­ரின் தொடர்­பால், அதை ‘சிவ­லீலா’ என்ற பெய­ரில் 25.12.39 அன்று அவ்வை சகோ­த­ரர்­கள் நாட­க­மாக அரங்­கேற்­றி­னார்­கள்.  ‘சிவ­லீலா’ மிகப்­பெ­ரிய வெற்­றியை அடைந்­தது. அழ­கான சிறு­வ­னாக அவ்வை சகோ­த­ரர்­க­ளின் குழு­வில் அப்­போது இணைந்த ஏ.பி.நாக­ரா­ஜன், ‘சிவ­லீ­லா’­­வில் பார்­வ­தி­யா­க­வும் மீன­வப் பெண் கயற்­கண்­ணி­யா­க­வும் நடித்­துப் புகழ் பெற்­றார்.

‘சம்­பூர்ண ராமா­ய­ணம்’ (1958) எடுத்து முடித்­த­தும். ‘சிவ­லீ­லா’வை  திரைப்­ப­ட­மா­கத் தயா­ரிக்­கும் திட்­டம் தயா­ரிப்­பா­ளர் எம்.ஏ.வேணு­விற்கு இருந்­தது.  ஆனால் அதன்  தயா­ரிப்பு தாம­த­மாகி, கடை­சி­யில் ஏ.பி.நாக­ரா­ஜ­னின் கதை,வச­னம், தயா­ரிப்பு, இயக்­கம் ஆகி­ய­வற்­றில் 1965ல் படம் வெளி­வந்­தது. தரு­மிக்­குப் பொற்­கிழி தந்த பட­லம், வலை­வீ­சிய பட­லம் போன்­ற­வற்­று­டன், விறகு விற்­றப் பட­ல­மும் நாட­கத்­தில் இடம் பெற்­றி­ருந்­தது. ‘திரு­வி­ளை­யா­டல்’ படத்­தி­லும் இவை மிக அழ­காக சித்­த­ரிக்­கப்­பட்­டன.

நாட­கத்­தில் இடம்­பெற்ற விறகு விற்ற பட­லத்­தைக் குறித்து எழு­தும்­போது, அது தமிழ் இசை­யின் பெரு­மையை விளக்­கப் பயன்­பட்­டது என்­றார் டி.கே. சண்­மு­கம். ‘திரு­வி­ளை­யா­டல்’ படத்­தி­லும், தமிழ் திரை­யி­சை­யின் மகத்­து­வத்தை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில்­தான் இந்த பட­லம் அமைந்­தி­ருந்­தது.

பால­மு­ர­ளி­கி­ருஷ்ணா பாடிய, ‘ஒரு நாள் போதுமா’,  டி.ஆர்.மகா­லிங்­கம் பாடிய, ‘இல்­லா­த­தொன்­றில்லை’ என்ற விருத்­தம்,  ‘இசைத்­த­மிழ் நீ செய்த அரும் சாதனை’ என்ற பாட­லும், டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன் பாடிய ‘பாட்­டும் நானே  பாவ­மும் நானே’ மற்­றும் ‘பார்த்தா பசு­ம­ரம்’... சிவ­பெ­ரு­மான் விறகு விற்று மது­ரை­யின் மாண்பை காப்­பாற்­றிய பகு­தி­யில் இப்­படி ஐந்து வெற்­றிப் பாடல்­கள் அமைந்­தி­ருப்­பது, அதன் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்­து­கி­றது.

ஹேம­நா­தன் என்ற பெரும் இசைப்­பு­ல­வன், மது­ரை­யில் வர­குண பாண்­டி­ய­னின் சபை­யில் சிறப்­பா­கப் பாடி, மன்­ன­னின் பாராட்­டைப் பெறு­கி­றான். ஆனால் ஹேம­நா­தன் பாராட்­டை­யும் பரி­சு­க­ளை­யும் பெற மட்­டும் வர­வில்லை. பாண்­டிய நாட்டு இசைப்­பு­ல­வர்­களை இசைப்­போட்­டிக்கு அழைத்து, தன்­னி­டம் அவர்­கள் தோற்­றால் தன்­னு­டைய பாட்­டுக்­குப் பாண்­டிய நாடே அடிமை, அதன் பிறகு யாரும் பாடு­வ­தற்கு வாயைத் திறக்­கக்­கூ­டாது என்­கி­றான். பாண­பத்­தி­ரர் என்ற பாண்­டிய நாட்­டுப் பாட­கர், ஹேம­நா­த­னு­டன் அடுத்த நாள் இசைப்­போட்­டி­யில் ஈடு­ப­டு­வார் என்று முடி­வா­கி­றது.

இந்த நிலை­யில் பாண­பத்­தி­ரர், தன்­னைக் காப்­பாற்­றும்­படி, ஆல­வாய் அப்­ப­னான சோம­சுந்­த­ரேஸ்­வர  கட­வு­ளி­டம் சர­ண­டை­கி­றார். விறகு விற்­ப­வ­னாக வெளிப்­பட்ட சுந்­த­ரேஸ்­வ­ரர், ஹேம­ நா­தன் தங்க வைக்­கப்­பட்­டி­ருக்­கும் வீட்­டின் திண்­ணை­யில் ஒரு பாட்டை எடுத்­து­வி­டு­கி­றார்.

இந்த பாட்­டில் கதி­க­லங்­கிப்­போன ஹேம­நா­தன்,  தன்­னு­டைய சீடர்­க­ளு­டன்  அர்த்த ராத்­தி­ரி­யில் இடத்­தைக் காலி செய்­து­விட்டு ஓடி­வி­டு­கி­றான். தன்­னு­டைய பக்­தர் பாண­பத்­தி­ர­ருக்­கா­க­வும் பாண்­டிய நாட்­டின் மானத்­தைக் காப்­பாற்­றும் முறை­யி­லும் சொக்­க­நா­தர் இந்த விளை­யாட்டை செய்­த­ரு­ளி­னார். இது­தான் ‘திரு­விை­ள­யா­டல்’ திரைப்­ப­டத்­தில் நாம் பார்க்­கும் விறகு விற்­றப் பட­லத்­தின் முக்­கி­ய­மான கதை­யோட்­டம்.

இந்த சம்­ப­வங்­களை முன் வைக்­கும் போது, பரஞ்­சோ­தி­யா­ரின் ‘திரு­வி­ளை­யா­டல்’ புரா­ணத்திற்­கும் ஏ.பி.நாக­ரா­ஜ­னின் திரைக்­க­தைக்­கும் சில முக்­கி­ய­மான வித்­தி­யா­சங்­

கள் உள்­ளன.

‘திரு­வி­ளை­யா­டல்’ படத்­தில், ஹேம­நா­த­னு­டன் போட்­டி­யிட வேண்­டிய பாண­பத்­தி­ரர், ‘‘பக்தி பாடல்­கள் நன்­றா­கப்­பா­டு­வார், ஆனால் சங்­கீ­தத்­தில் மேதை அல்ல’’ என்று குறிப்­பி­டப்­ப­டு­கி­றார்.

ஆனால் திரு­வி­ளை­யா­டல் புரா­ணத்­தின் பாண­பத்­தி­ரர், இசைப்­பு­ல­வர், இசைக்­க­லை­யில் பேர்­போ­ன­வர், பாணர்­குல தில­கம் என்று சித்­த­ரிக்­கப்­

ப­டு­கி­றார். புரா­ணத்­தின்­படி, பாண­பத்­தி­ரர் வர­குண பாண்­டி­ய­னின் தந்­தை­யா­கிய ஸ்ரீவல்­ல­பன் காலத்­தி­லும் அர­சவை புல­வ­ராக இருந்­த­வர். அதன் அடை­யா­ள­மாக பட்டு மணி­மா­லை­யும் பெற்­ற­வர்.

‘திரு­வி­ளை­யா­டல்’ படத்­தில், பாண­பத்­தி­ரரை ‘வெறும்’ பக்­திப் பாட­க­ரா­கக் காட்டி, ஹேம­நா­த­னு­டன் போட்டி என்று வந்­த­வு­டன் அவர் பயந்து ஒதுங்­கு­வ­தாக ஏ.பி.நாக­ரா­ஜன் சித்­த­ரிக்­கி­றார்.

ஆனால் இவற்­றை­யெல்­லாம் புரா­ணம் வேறு­வி­த­மாக அணு­கு­கி­றது. முதல் கட்­டத்­தில், போட்­டிக்­கான சவாலை ஹேம­நா­தன் விடுப்­ப­தா­கப் புரா­ணம் கூற­வில்லை.

வர­குண பாண்­டி­ய­னின் சபை­யில் பாடிய பிறகு, தன்­னு­டைய பெரு­மையை ஹேம­நா­தன் தம்­பட்­டம் அடிக்­கி­றான்....இந்த செருக்­கான போக்­கும் ஹேம­நா­த­னின் அகம்­பா­வ­மும் திரைப்­ப­டத்­தில் மிக அழ­காக சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால் பாண்­டிய நாட்டை தன்­னு­டைய இசைக்கு அடி­மை­யாக்க நினைக்­கும் ஹேம­நா­த­னின் செயல்­பாடு, புரா­ணத்­தில் இல்லை.  ‘திரு­வி­ளை­யா­டல்’ படக்­க­தை­யில் நாம் காணும் விஷ­யம் அது.

திரு­வி­ளை­யா­டல் புரா­ணத்­தின்­படி, ஹேம­நா­தன் தன்­னைப் பற்றி அதி­க­மா­கப் புகழ்ந்­து­ கொண்­ட­வு­டன், பாண்­டிய மன்­னன் வர­கு­ணன்­தான், ஹேம­நா­த­னுக்­கும் தன்­னு­டைய அர­சவை இசைப்­பு­ல­வ­ரான பாண­பத்­தி­ர­ருக்­கும் போட்டி வைக்க எண்­ணு­கி­றான்!

சோழ நாட்டு இசைப் புல­வ­னான ஹேம­நா­தனை இசைப் போட்­டி­யில் வெல்ல முடி­யுமா என்று வர­கு­ணன் முத­லில் பாண­பத்­தி­ர­ரி­டம் கேட்­கும் போது, திரு­வி­ளை­யா­டல் புரா­ணத்­தின்­படி, அவர் சவாலை ஏற்­கி­றார்.      ‘‘அஞ்­சேன் அஞ்­சேன் ஒரு­வர்க்­கும்

அஞ்­சா­திங்கு வந்­த­வனை

மிஞ்ச அஞ்­சும்­படி பாடி வென்றே

ஓட்­டி­வி­டக் கட­வேன்’’

என்­கி­றார் பாண­பத்­தி­ரர்!

ஆனால் மதுரை நகர் எங்­கும் சென்று கச்­சே­ரி­கள் செய்­யும் ஹேம­நா­த­னின் சீடர்­க­ளின் இசை­யைக் கேட்­ட­தும், பாண­பத்­தி­ர­ருக்கு சந்­தே­கம் வந்­து­வி­டு­கி­றது. சீடர்­க­ளின் பாட்டே இப்­ப­டி­யென்­றால் ஹேம­நா­த­னின் பாட்­டும் இசைப் புல­மை­யும் எப்­ப­டி­யி­ருக்­கும் என்ற பயம் பாண­பத்­தி­ர­ரைக் கவ்­விக்­கொள்­கி­றது.

ஹேம­நா­த­னின் சீடர்­கள் இந்த வகை­யில் ஆற்­றல் உடை­ய­வர்­க­ளாக, புரா­ணத்­தில் சித்­த­ரிக்­கப்­ப­ டு­கி­றார்­கள். ஆனால், படத்­திலோ அவர்­கள் எள்ளி நகை­யா­டப்­ப­டு­கி­றார்­கள். ஹேம­நா­த­ரின் சீடர்­களை மொட்­டை­க­ளா­க­வும் குட்­டை­க­ளா­க­வும் தடித்­த­வர்­க­ளா­க­வும் குடு­மி­க­ளா­க­வும்  காட்டி, திரைக்­கதை ஏள­னம் செய்­கி­றது.  

ஹேம­நா­த­னு­டன் போட்­டி­யி­டு­வது குறித்து பாண­பத்­தி­ர­ருக்­குப் பயம் முளைத்த போதி­லும், சொக்­கன் இருக்­கி­றான், பார்த்­துக்­கொள்­வான் என்று மனதை தேற்­றிக்­கொள்­கி­றார். இது புரா­ணத்­தின் கூற்று.  இதை, திரைப்­ப­டத்­தில் சொக்­க­ரி­டம் பாண­பத்­தி­ரர் சர­ணா­கதி செய்­யும் காட்­சி­யாக (‘இசைத் தமிழ் நீ செய்­யும் அரும் சாதனை’), மிக அழ­கா­க­வும் கதைப்­போக்­கி­றகு வலிமை சேர்க்­கும் வகை­யி­லும் ஏ.பி.என். அமைத்­தி­ருக்­கி­றார். சொக்­கே­சர் சன்­னி­தி­யில் பாண­பத்­தி­ரர் கும்­பிட்டு விழு­வ­தற்­கும், ஆல­வாய் ஈசன் விறகு வெட்­டி­யாக வெளிப்­ப­டு­வ­தற்­கும் சரி­யாக இருக்­கி­றது.

இந்­தத் தெய்­வீக விற­கு­வெட்டி, ஹேம­நா­தன் தங்க வைக்­கப்­பட்­டி­ருக்­கும் வீட்­டின் திண்­ணை­யில் இளைப்­பா­றி­விட்டு பாடு­கி­றான். அதைக் கேட்டு ஹேம­நா­தன் அல்­லா­டு­கி­றான்!

புரா­ணத்­தின்­படி இந்த பாட்டு மாலை வேளை­யில் நடக்­கி­றது. விறகு வெட்­டி­யாக வரும் சிவ­பெ­ரு­மா­னின் பாட்டை ஹேம­நா­தன் மட்­டும் அல்ல...அந்­தப் பகு­தி­யில் வசிக்­கும் பல­ரும் கேட்­கி­றார்­கள்.  ஆனால் திரைப்­ப­டத்­தில்,  இர­வில் ஹேம­நா­தன் உறங்­கப்­போ­கும் போது நடை­பெ­றும் இந்­தத் திண்­ணைப் பாட்­டுக் கச்­சேரி ஹேம­நா­த­னின் சீடர்­க­ளின் செவி­க­ளுக்­குக் கூட எட்­டி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. அது ஹேம­நா­தன் மட்­டுமே கேட்ட தேவ­கா­ன­மாக அமைக்­கப்­பட்­டு ­விட்­டது!

புரா­ணத்­தின்­படி, இர­வோடு இர­வாக ஹேம­நா­தன் ஓட்­டம் பிடித்­து­வி­டு­கி­றான். திரைப்­ப­டத்­தில், தன்­னு­டைய தோல்­வியை ஓலை­யில் எழு­திக்­கொ­டுத்­து­விட்­டுச் செல்­கி­றான். இத்­த­கைய எந்த ஓலை­யும் புரா­ணத்­தில் இல்லை.

இதன் கார­ண­மா­கவே புரா­ணக்­கதை மேலே வளர்ந்து செல்­கி­றது. அர­ச­வை­யில் பாடல் போட்டி நடை­பெ­றா­த­வாறு பாண­பத்­தி­ரர் தன்­னு­டைய சீடனை ஹேம­நா­தன் முன் பாடச்­செய்­து­விட்­டார் என்ற சந்­தே­கம் கூட வர­குண பாண்­டி­ய­னுக்கு வரு­கி­றது ! திரு­வி­ளை­யா­டல் புரா­ணத்­தில் உள்ள விறகு விற்ற பட­லத்தை பாண­பத்­தி­ரர் கண்­கொண்டு பார்த்து ஒரு தனித் திரைப்­ப­டமே எடுக்­க­லாம். ஆனால் ‘திரு­வி­ளை­யா­டல்’ படத்­தின் நோக்­கம் அது­வல்ல. சிவ­லீ­லை­களை

முன்­வைப்­ப­து­தான் நோக்­கம். ‘திரு­வி­ளை­யா­ட’­­லின் இந்­தப் பகு­தி­யைக் கச்­சி­த­மா­க­வும் தத்­து­வங்­களை மன­தில் எளி­தில் பதி­ய­வைக்­கும்

படி­யும் அமைத்து, ஏ.பி.நாக­ரா­ஜன் வெற்றி

கண்­டி­ருக்­கி­றார்.

              (தொட­ரும்)