சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 06– 5–19

பதிவு செய்த நாள் : 06 மே 2019


இந்திய பங்குச் சந்தை நிலவரம்

 சந்­தை­க­ளில் லாபத்­தில் உட்­கார்ந்­தி­ருப்­ப­வர்­கள் சிறிது விற்று வெளியே வரும் நேரம் என்று கடந்த இரண்டு வாரங்­க­ளாக எழு­தி­யி­ருந்­தோம். செய்­தீர்­களா? அப்­படி செய்­தி­ருந்­தால் நீங்­கள் லாபத்­தில் உட்­கார்ந்து இருக்­க­லாம் தற்­போது.

 வெள்­ளி­யன்று இறு­தி­யாக

 வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை  18      புள்­ளி­கள் குறைந்து 38963  புள்­ளி­க­ளு­டன் முடி­வ­டைந்­தது. தேசிய பங்­குச் சந்தை  12 புள்­ளி­கள் குறைந்து 11712   புள்­ளி­க­ளு­டன் முடி­வ­டைந்­தது. வார இறு­தி­யில் சந்­தை­கள் கடந்த வாரத்தை விட சிறிது குறை­வா­கவே முடி­வ­டைந்­தது.

 நாம் கூறி­யதை செய்­தீர்­களா?

 சிறிய மற்­றும் நடுத்­தர கம்­பெ­னி­கள் இந்த வாரம் மிக­வும் அடி வாங்­கின என்­றால் மிகை­யா­காது. ஆனால் நாம் கூறி­ய­படி கடந்த இரண்டு வாரத்­தில் விற்று இருந்­தால் அது உங்­க­ளுக்கு பய­ன­ளித்­தி­ருக்­கும்.  

 யெஸ் பேங்க்

  பலர் நம்­மி­டையே தொலை­பேசி மூலம் ஆகும் ஈமெ­யில் மூல­மா­க­வும் கேட்­கும் கேள்வி யெஸ் பாங்க்  பங்­கு­கள்  என்ன ஆகும்?   திரும்­ப­வும் மேலே செல்­லுமா?  ஒரு முக்­கி­ய­மான கார­ணத்தை நீங்­கள் எல்­லோ­ரும் தெரிந்து கொள்ள வேண்­டும்.  சமீப காலத்­தில் இந்­தி­யா­வில் இரண்டு பெரிய கம்­பெ­னி­கள் மூழ்­கின. இந்த கம்­பெ­னி­யும் மூழ்­குமா என்று நாம் ஆச்­ச­ரி­யப்­ப­டும் அள­விற்கு சிறப்­பாக இருந்த கம்­பெ­னி­கள் முழு­கி­யது  தான் ஒரு வருத்­த­மான விஷ­யம். ஐ.எல்.எப்.எஸ்., மற்­றும்  ஜெட் ஏர்­வேஸ் ஆகிய இரண்டு கம்­பெ­னி­கள் தான் இவை.  இந்த இரண்டு கம்­பெ­னி­க­ளுக்­கும், கடன் கொடுத்த வங்­கி­கள் எல்­லாம் இந்த கடன்­களை எல்­லாம் வாராக்­க­டன்­கள் ஆக வேண்­டும் என்ற கட்­டா­யத்­தில் இருந்­த­தால், யெஸ் பாங்க்  இந்த காலாண்­டில் 1,500 கோடி ரூபாய் நஷ்­டத்தை சந்­தித்­தது. இது தான் முக்­கி­ய­மான் கார­ணம் அந்த 30 சத­வீ­தம் சரி­விற்கு. இது போல இன்­னும் சில காலாண்­டு­கள் இருக்­க­லாம். ஆனால் தற்­போது வந்­தி­ருக்­கும் யெஸ் பாங்­கின் தலை­வர் கில் மிக­வும் சிறப்­பான அனு­ப­வம் உள்­ள­வர். இத­னால் இன்­னும் ஒரு வரு­டத்­தில் இந்த கம்­பெ­னி­யின் பங்­கு­கள் உயர் வாய்ப்­பு­கள் இருக்­கி­றது. அது­வரை பொறுமை காக்க வேண்­டும்

  என்ன வளம் இல்லை இந்த திரு­நாட்­டில்?

 என்ன வளம் இல்லை இந்த திரு­நாட்­டில் என்று பாடிச் சென்­றார்.  ஆனால் எண்­ணெய் வளம்  இல்லை இந்த திரு­நாட்­டில். அது மட்­டும் இருந்­தி­ருந்­தால் இந்­தி­யாவை யாரும் அசைத்­தி­ருக்க முடி­யாது, அவ்­வ­ளவு உச்­சத்­தில் இருந்­தி­ருக்­கும். நமக்கு இருக்­கும் மக்­கள் தொகைக்கு நமக்கு பெரிய பிரச்­ச­னையே எண்­ணெய் தான்.  கச்சா எண்­ணெய் விலை கடந்த வரு­டத்தை விட சுமார் 40 சத­வீ­தம் தற்­போது உயர்ந்­தி­ருக்­கி­றது.  இத­னால் இது சந்­தை­களை மிக­வும் பாதிக்­கி­றது.  விலை இன்­னும் குறை­யுமா என்­றால் அதற்­கான சாத்­தி­யங்­கள் இல்லை. கார­ணம் இரண்டு பெரிய எண்­ணெய் உற்­பத்தி நாடு­க­ளுக்கு அமெ­ரிக்கா கட்­டுப்­பா­டு­களை விதித்­த­தால் அந்த நாடு­க­ளில் இருந்த எண்­ணெய் வாங்க முடி­யாத ஒரு சூழ்­நி­லை­யில் நாம் இருக்­கி­றோம்.  இத­னால் உல­கின் பல நாடு­க­ளுக்­கும் இந்த நெருக்­கடி இருக்­கி­றது. இத­னால் தான் என்ன விலை கூடிக்­கொண்டே செல்­கி­றது. இதா­னல் தான் தற்­போது ஒரு பேரல் கச்சா எண்­ணெய் 70 முதல் 74 டால­ராக இருக்­கி­றது. இதை இன்­னும் கூடும் பட்­சத்­தில் அது சந்­தை­க­ளில் பாதிக்­கத்­தான் செய்­யும் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை. எண்­ணெய் விலையை கவ­னித்து வாருங்­கள். இல்­லா­வி­டில் அது உங்­களை வழுக்கி விடும் சந்­தை­க­ளில்.

 என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்?

 பஜாஜ் ஆட்டோ (இன்­னும் ஒரு வரு­டத்­தில் மார்க்­கெட் ஷேர் 28 சத­வீ­தம் செல்­லும் என கம்­பெனி நிர்­வா­கத்­தி­னர் எதிர்­பாக்­கி­றார்­கள்), பந்­தன் பாங்க் (நல்ல காலாண்டு முடி­வு­களை கொடுத்­துள்­ளது), இந்­துஸ்­தான் யுனி­லீ­வர் (நல்ல காலாண்டு முடி­வு­களை கொடுத்­துள்­ளது) ஆகிய பங்­கு­களை வாங்­க­லாம்.

 ஓரி­யண்ட் சிமெண்ட், டாடா ஸ்டீல், அம்­புஜா சிமெண்ட் ஆகிய கம்­பெ­னி­க­ளும் உங்­கள் போர்ட்­போ­லி­யோ­வில் இருக்­க­லாம்.

 அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

 சந்­தை­க­ளில் ஒரு இறக்­கம் ஏற்­றம் இருக்­கி­றது. கார­ணம் கச்சா என்­ணெய் மற்­றும் எலெ­க்ஷன் முடி­வு­கள். ஒன்று 23ம் தேதி தெரிந்து விடும். இன்­னொன்று நம்மை தொடர்ந்து பய­மு­றுத்தி கொண்­டி­ருக்­கும் விஷ­யம். அமெ­ரிக்க ஈரான் மீதுள்ள கட்­டுப்­பா­டு­களை சிறிது தளர்த்­தி­னால் அது பல நாடு­க­ளுக்கு பய­ன­ளிக்­கும். இல்­லா­வி­டில் இந்­தியா டால­ருக்கு பதில் ரூபாய் கொடுத்து ஈரா­னி­ட­மி­ருந்து எண்­ணெய் வாங்­கும் ஒரு எண்­ணம் இருக்­கி­றது. அது எப்­படி செல்­லப் போகி­றது என்று காத்­தி­ருந்து தான் பார்க்க வேண்­டும். சந்­தை­கள் சிறிது மேலே கீழே செல்­லும் வாய்ப்­பு­கள் அதி­கம்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com