லண்­ட­னில் குவி­யும் இந்­தி­யர்­கள் முத­லீடு:ஓராண்­டில், 255 சத­வீ­தம் அதி­க­ரித்து, புதிய சாதனை

பதிவு செய்த நாள் : 06 மே 2019


கடந்த ஆண்டு, இந்­தி­யா­வில் இருந்து அதிக அள­வி­லான அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­களை ஈர்த்த நாடு­க­ளில், பிரிட்­டன் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது.

பிரிட்­டன் தலை­ந­கர் லண்­ட­னில், மேய­ரின், அதி­கா­ர­பூர்வ சர்­வ­தேச வர்த்­தக மேம்­பாட்டு பணி­களை, ‘லண்­டன் அண்டு பார்ட்­னர்ஸ்’ நிறு­வ­னம் மேற்­கொண்டு வரு­கி­றது.இந்­நி­று­வ­னம், 2018ல், பிரிட்­ட­னில் மேற்­கொள்­ளப்­பட்ட, அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­கள் குறித்த ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.

அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:கடந்த ஆண்டு, இந்­தி­யா­வில் இருந்து அதிக அள­வில், அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­களை ஈர்த்த நாடு­க­ளில், பிரிட்­டன் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது.இந்த வகை­யில், 2018ல், இந்­திய முத­லீட்­டா­ளர்­க­ளின், 52 திட்­டங்­கள் தொடர்­பான ஒப்­பந்­தங்­கள் கையொப்­ப­மா­கி­யுள்­ளன. இது, 2017ல் மேற்­கொண்­டதை விட, 100 சத­வீ­தம் அதி­கம்.

இந்­தி­யர்­கள், அமெ­ரிக்கா மற்­றும் ஐக்­கிய அரபு எமி­ரேட்­சில், முறையே, 51 மற்­றும் 32 திட்­டங்­க­ளில் முத­லீடு செய்­துள்­ள­னர்.இந்­தி­யா­வில் இருந்து, பிரிட்­டன் ஈர்த்த அன்­னிய முத­லீ­டு­க­ளில், லண்­டன் நக­ரம், 60 சத­வீத பங்­க­ளிப்­பு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. இந்­ந­க­ரில், பல்­வேறு துறை­க­ளில், இந்­தி­யர்­க­ளின் முத­லீடு, ஓராண்­டில், 255 சத­வீ­தம் அதி­க­ரித்து, புதிய சாதனை படைக்­கப்­பட்­டுள்­ளது.

இது வரை இல்­லாத வகை­யில், இந்­தி­யர்­கள், லண்­ட­னில், 32 திட்­டங்­க­ளில் முத­லீடு செய்­துள்­ள­னர். அவர்­கள், துபாய் மற்­றும் சிங்­கப்­பூ­ரில் செய்த முத­லீடு, இதை விட குறை­வா­கும்.இந்­திய நிறு­வ­னங்­கள், லண்­டனை மைய­மாக வைத்து, சர்­வ­தேச வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தில் ஆர்­வம் காட்­டு­கின்­றன.இதன் கார­ண­மாக, லண்­ட­னில், இந்­தி­யர்­க­ளின் முத­லீடு அதி­க­ரித்து வரு­கி­றது. அதற்­கேற்ப, லண்­ட­னில், நிதிச் சேவை­கள், தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட துறை­க­ளில், வர்த்­தக வாய்ப்பு நன்கு உள்­ளது.கடந்த, 10 ஆண்­டு­க­ளில், லண்­ட­னில் உள்ள இந்­திய நிறு­வ­னங்­கள், 249 கோடி பவுண்டு, அதா­வது, 22 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக முத­லீடு செய்­துள்­ளன; அத்­து­டன், 5,691 புதிய வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் உரு­வாக்­கி­யுள்­ளன.

இந்­தி­யா­வில், வலை­த­ளம் மூலம் வாடகை கார் சேவை வழங்­கும், ‘ஓலா’ நிறு­வ­னம், கடந்த ஆண்டு, லண்­ட­னில் முத­லீடு செய்­யும் திட்­டத்தை அறி­வித்­தது.ஓட்­டல் அறை சேவையை வழங்­கும், ‘ஓயோ’ நிறு­வ­னம், லண்­ட­னில் முத­லீடு செய்ய உள்­ள­தாக, சமீ­பத்­தில் தெரி­வித்­துள்­ளது.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தொழி­ல­தி­பர்­கள் குழு வருகை

லண்­டன் மேய­ரின் சர்­வ­தேச வர்த்­தக மேம்­பாட்டு திட்­டத்­தின் கீழ், பிரிட்­டன் தொழி­ல­தி­பர்­கள் குழு, பரஸ்­பர வர்த்­தக வாய்ப்­பு­களை அறிய, நான்கு நாள் பய­ண­மாக, 6ம் தேதி இந்­தியா வரு­கி­றது; சென்னை, பெங்­க­ளூரு, மும்பை நக­ரங்­க­ளில், இந்­திய தொழி­ல­தி­பர்­களை சந்­தித்து பேச உள்­ளது.