ஒரு பேனாவின் பயணம் – 206 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 06 மே 2019

தாலாட்டிய மண்ணுக்கு நான் செய்யும் மரியாதை!

அவர்  என் வீட்டு எதிர்­வ­ரி­சை­யில் குடி­யி­ருந்­தார். அவரே ஒரு புகழ் வாய்ந்த எழுத்­தா­ளர். அந்­நா­ளில் அவ­ரது கதை­கள் `கலை­ம­க’­­ளில் கொடி கட்­டிப் பறந்­தன. `ஏடு­கள் சொல்­வ­துண்டோ?’ `அன்­னை­யிட்ட தீ’ ஆகிய சிரஞ்­சீ­விக் கதை­களை எழுதி அனை­வ­ரை­யும் அசத்­தி­ய­வர் அவர். அவர்­தான் ஸ்ரீரங்­கம் ராம­கி­ருஷ்­ணன்.

அச்­சம் என்­பது இன்­ன­தென்று தெரி­யா­த­வர். அக்­ர­ஹா­ரத்­தில் புகை பிடித்த முதல் ஆரி­யர் அவர். கட்­டுப்­பெட்­டி­யான வழக்­கங்­க­ளை­யும்,  கண்­மூ­டித்­த­ன­மான பழக்­கங்­க­ளை­யும், சிக­ரெட் நெருப்­பா­லேயே சுட்­டு­விட முடி­யும் என்­கிற நம்­பிக்­கை­யோடு நகர்­வ­லம் வந்­த­வர். ஆங்­கி­ல­மும், தமி­ழும் அத்­துப்­படி.

 பிற்­கா­லத்­தில் ஸ்ரீரங்­கத்­தி­லிந்து  எத்­த­னையோ எழுத்­தா­ளர்­கள் புறப்­பட்­டார்­கள். புகழ் விளிம்­பை­யும் தொட்­டார்­கள். ஏ.எஸ். ராக­வன், ஸ்ரீரங்­கம் நர­சிம்­மன், பில­ஹரி, சுஜாதா என்­றெல்­லாம் சொல்­லிக்­கொண்டே போக­லாம். தாத்­தா­சா­ரி­யார் குடும்­பத்­தைச் சேர்ந்த குமு­தினி இவர்­க­ளுக்­கெல்­லாம்  மூத்­த­வர் ஆவார். செல்­லம், கிருஷ்ணா என்று தமிழ் கூறும் நல்­லு­ல­கெங்­கும் புகழ் மணம் பரப்­பிய பெண் எழுத்­தா­ளர்­க­ளும் திரு­வ­ரங்­கத்து மண்­ணில் தோன்­றி­ய­வர்­களே! இருப்­பி­னும்,  இவர்­க­ளி­ட­மி­ருந்­தெல்­லாம் வித்­தி­யா­சப்­

­பட்டு நின்­ற­வர் ஸ்ரீரங்­கம் ராம­கி­ருஷ்­ணன். அவ­ரு­டைய தமிழ் நடை அலா­தி­யா­னது.  வாக்­கி­யங்­க­ளில் உட்­கா­ரும் வார்த்­தை­களை தட்­டிக்­கொ­டுத்து வேலை வாங்­கு­வார். நெருப்­பைப் பற்றி அவர் ஒரு `பாரா’ எழு­தி­னால், அதைத் தொட்­டுப் பார்த்­தால் நம் விரல் சுட்டு விடும். அழகு வர்­ண­னை­க­ளில் அவர் காளி­தா­ச­னையே தூக்­கிக் கக்­கத்­தில் வைத்­துக்­கொள்­வார்.

இத்­தகு எழுத்­தா­ளர் ஏனோ ஸ்ரீரங்­கத்­தின் மீது வெறுப்­புற்று வேலை தேடி மும்பை சென்­று­விட்­டார். என் உள்­ளக்­க­னலை ஊதி வளர்க்க ஆளில்­லா­த­தால், நானும் சிறு­கதை எழு­து­வதை விட்­டு ­விட்டு சித்­தி­ரம் தீட்­டத் தொடங்­கி­னேன்.

பாட்­டில் பாட்­டி­லாக இந்­திய இங்க் வாங்கி வைத்­துக்­கொண்டு போவோர் வரு­வோ­ரை­யெல்­லாம் உட்­கார்த்தி வைத்து படம் வரை­ய­லா­னேன். எவ­ரைப் பார்த்­தா­லும், அவ­ரைப்­போ­லவே படம் வரை­யும் ஆற்­றல் கூடி ஸ்ரீரங்­கம் கோயி­லுக்கு எந்த மந்­திரி வந்­தா­லும் அவர் படத்தை வரைந்து கையெ­ழுத்து வாங்­கா­மல் விட­மாட்­டேன். இந்த குணம் ஒரு ஸ்டிக்மா மாதிரி என்­னோடு ஒட்­டிக்­கொண்­டது.

 ஸ்ரீரங்­கத்­தில் ` முதல் திரு­மா­ளிகை’ என வழங்­கப்­பெ­றும் தாத்­தா­சா­ரி­யார் வீட்­டில் ஒரு திரு­ம­ணம் நடை­பெற்ற பொழுது, பாப்பா வெங்­கட்­ரா­மையா, பாலக்­காடு மணி அய்­யர் முத­லிய பக்­க­வாத்­திய வித்­வான்ங்­க­ளின் படங்­களை வரைந்து கையெ­ழுத்து வாங்­கி­னேன். பாட­க­ரி­ட­மும் அவ்­வாறு செய்­தேன். ஆனால் பாடி­ய­வர் முசி­றீயா அரி­யக்­கு­டியா என்­பது இப்­போது நினை­வில் இல்லை.

  அப்­போது தரை­யில் ஜமுக்­கா­ளத்­தில் நரைத்த கிராப்­புத் தலை­யோடு ஒரு­வர் உட்­கார்ந்து கொண்டு சங்­கீத வித்­வான் பாடிய ‘சல­மேல்ரா’ எனும் மார்க்க இந்­தோ­ளக் கீர்த்­த­னையை வெகு­வாக ரசித்­துக் கொண்­டி­ருந்­தார்.

சுற்­றி­யி­ருப்­ப­வர்­கள் அவ­ருக்கு மிகப்­பெ­ரிய அள­வில் மரி­யாதை  காட்­டி­ய­தி­லி­ருந்து, அவர் புகழ் வாய்ந்த பிர­மு­க­ரா­ கத்­தான் இருக்­க­வேண்­டும் என்று என்­னுள் எண்­ணிக்­கொண்­டேன். அவ­ரது பக்­க­வாட்டை ஒரு ஓவி­யன் என்­னும் முறை­யில் வெகு­வாக என்னை கவர்ந்­தது. மணப்­பந்­த­லில் ஓர் ஓர­மாக அமர்ந்து அவ­ரது ஓவி­யத்தை நான் வரைந்து முடித்­தேன். அவ­ரி­டம்  எப்­படி இந்­தப் படத்தை காட்டி கையெ­ழுத்தை வாங்­கு­வது என்­று­தான் யோசித்­தேனே தவிர, அவர் யார் என்று அறிய நான் முற்­ப­ட­வில்லை.

சம்­பத் தாத்­தம் அவர்­க­ளின் மகன் ராம்ஜி எனப்­ப­டும் ரங்­க­ரா­ஜன் என்­னு­டைய பள்­ளித்­தோ­ழன் ` டேய் வாலி ! இங்கே கொண்டா அந்­தப் படத்தை. நான் கையெ­ழுத்து வாங்­கித் தர்­றேன்’ என்ரு படத்தை என்­னி­ட­மி­ருந்து பறித்­துக்­கொண்டு போய் அந்­தப் பிர­மு­க­ரி­டம் காட்டி அவ­ரது கையெ­ழுத்­தை­யும் வாங்­கித் தந்­தான், என்­னை­யும் அவ­ரி­டம் அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தான்.

அந்த பிர­மு­கர் படம் வரை­யும் ஆற்­ற­லைப் பாராட்­டி­விட்டு  ‘மெட்­ரா­சுக்கு வந்தா என்னெ வந்து பாரு’ என்ரு சொல்லி அன்­பொ­ழு­கப் புன்­ன­கைத்­தார்.

பிற்­பா­டு­தான் தெரிந்து கொண்­டேன். அந்­தப் பிர­மு­கர் இந்து பத்­தி­ரி­கை­யின் அதி­ப­ரும், ஆசி­ரி­ய­ரு­மான கே.ஸ்ரீனி­வா ­சன் என்று. அவ­ரது மக­னும் பிர­பல பட அதி­ப­ரு­மான திரு ரங்­க­ரா­ஜன் இன்­ற­ள­வும் என் இனிய நண்­பர். இவ­ரது தந்­தை­யின் படத்தை நான் வரைந்­தேன். இவர் நான் எழு­திய கதையை பட­மாக எடுத்­தார். அந்த படம் ஜனா­தி­பதி விருது பெற்ற `ஒரே ஒரு  கிரா­மத்­திலே.’ பின்­னால் இதே தொட­ரில் சினி­மா­வைப் பற்றி நான் நிறைய எழுத இருக்­கி­றேன். அப்­போது இந்த  ‘ஒரே ஒரு கிரா­மத்­திலே’ வெளி­வ­ரு­வ­தற்கு முன் எத்­தனை வழக்­கு­களை சந்­தித்­தது என்று விவ­ர­மாக எழு­து­கி­றேன்.

 ஒரு நாள் திருச்சி வானொலி நிலை­யத்­தி­லி­ருந்து முன்பு வந்­தது போலவே கப்­பல் போன்ற காரில் ஒரு கன­வான் வந்து என்­வீட்டு வாச­லில் இறங்­கி­னார். கல்­கி­யோடு வந்த திரு பார்த்­த­சா­ரதி அய்­யங்­கார்­தான் நிலைய நிர்­வா­கி­யாக இருந்­தார்.

 `உன் கையெ­ழுத்து பிர­தியை பார்த்­து­விட்டு, கார்ல வர்­ற­போதே கல்கி’  இந்­தப் பையனை உங்க ரேடி­யோ­வுல பயன்­ப­டுத்­திக்­குங்க’ என்று என்­கிட்ட சொன்­னா­ரப்பா. ‘வானொலி’ பத்­தி­ரி­கைக்­காக சில படங்­களை வரைய வேண்­டி­யி­ருக்கு’ என்று என்னை ‘வானொலி; ஏட்­டின் ஆசி­ரி­ய­ரி­டம்  அறி­மு­கப்­ப­டுத்­தி­னார் பார்த்­த­சா­ரதி.  அன்று ` வானொலி’ ஏட்­டின் ஆசி­ரி­ய­ராக இருந்­த­வர்­தான் திரு பெ.கோ. சுந்­த­ர­ரா­ஜன் . இப்­ப­டிச் சொன்­னால் உங்­க­ளுக்­குப் புரி­யாது. ` சிட்டி’ என்று சொன்­னால் சட்­டென்று புரிந்­து­வி­டும் ` மணிக்­கொடி’ காலத்து எழுத்­தா­ள­ரா­யிற்றே’   ` சிட்டி’ ஒரு மகோன்­ன­த­மான மனி­தர். முந்தா நாள் வந்த என்னை, முந்­நூறு நாள் பழ­கி­ய­வன் போல் நடத்­தி­னார். அவர் முகத்­தில் சிரிப்­பைக் காண்­பது அரி­தா­யி­ருக்­கும். இருப்­பி­னும், அவ­ரது உள்­ளம் மல்­லி­கை­யி­லும் மெல்­லி­ய­தா­னது என்­பதை நாளா­வட்­டத்­தில் தெரிந்து கொண்­டேன்.

 பிழைப்பு, போஸ்­டர் கல­ரும் பிரிஷ்­ஷு­மாக ஓடிக்­கொண்­டி­ருந்­தது. சிட்­டிக்கு நான் ஒரு கற்­றுக்­குட்டி ஓவி­யன் என்­கிற அள­வில்­தான் அறி­மு­க­மா­கி­யி­ருந்­தேனே தவிர , கவி­ஞ­னா­கவோ, கதா­சி­ரி­ய­னா­கவோ என்­னைக் காட்­டிக்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பமே  எனக்­குக் கிட்­ட­வில்லை. ஒரு சம­யம் `நான் சிறு­க­தை­யொன்று வைத்­தி­ருக்­கி­றேன்’ என்ற சங்­க­தியை மெது­வாக அவர் காதில் போட்­டேன். அதை அவர் காதில்  வாங்­கிக்­கொள்­ள­வே­யில்லை.  ‘படம் எழுதி உருப்­ப­டப் பார்’ என்று சொல்லி என் பேச்­சுக்கு  முற்­றுப்­புள்ளி வைத்து விட்­டார். என்­னு­டைய இலக்­கிய அரிப்­புக்கு எங்­கே­யா­வது சொறிந்து கொள்ள இடம் கிடைக்­குமா என்ரு நான் சஞ்­ச­லப் பட்­டுக்­கொண்­டி­ருந்­தேன். தூரி­கை­யைக் காட்­டி­லும் பேனா தான் என்­னைத் துரத்­திக்­கொண்­டி­ருந்­தது.  அப்­போ­து­தான் நான் பணி­பு­ரிந்து கொண்­டி­ருந்த வானொலி நிலை­யத்­திற்கு நேர் எதி­ராக, ஒரு பத்­தி­ரிகை அலு­வ­ல­கம்  செயல்­பட்­டு­கொண்­டி­ருந்­தது என் கவ­னத்­தைக் கவர்ந்­தது.

 அந்­தப் பத்­தி­ரி­கை­யின் ஓவி­ய­ரோடு என்­னைப் பரிச்­ச­யப் படுத்­திக்­கொண்டு  அடிக்­கடி அங்கே போய் அரட்­டை­ய­டிக்­க­லா­னேன். ஒரு நாள் அந்த் ஓவி­யர், அந்­தப் பத்­தி­ரி­கை­யின் உரி­மை­யா­ள­ரும். ஆசி­ரி­ய­ரு­மான ஒரு­வ­ரி­டன் என்னை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அன்று முதல் அந்த ஆசி­ரி­ய­ரின் அறைக்­குச் சென்று. எனக்கு தெரிந்த அரை­குறை இலக்­கிய ஞானத்­தோடு சிறு­கதை நாவல் பற்­றிய சர்ச்­சை­க­ளில் ஈடு­ப­ட­லா­னேன்.  சரத் சந்­தி­ரர். பிரேம்­சந்த், க்வாஜா அக­மத்

அப்­பாஸ்,  பண்­டிட் சுதர்­சன் ஆகிய பிற­மொழி எழுத்­தா­ளர்­க­ளில் படைப்­புக்­க­ளை­யெல்­லாம் ஆங்­கி­லத்­தி­லும், தமி­ழி­லும் படித்­ததை வைத்­துக்­கொண்டு கூடை கூடை­யாக விமர்­ச­னம் செய்­வேன். அந்­தப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர் தன் இதழ்­க­ளில் மெல்­லிய புன்­ன­கையை தவ­ழ­விட்­ட­வாறே என் வாதங்­க­ளை­யும் விதண்­டா­வா ­தங்­க­ளை­யும் வெகு­வாக ரசித்­துக்­கொண்­டி­ருப்­பார். அவர், குட்­டை­யான மனி­தர்­தான். இருப்­பி­லும் நெட்­டை­யான உள்­ளம் வாய்க்­கப்­பெற்­ற­வர். ஒரு சின்­னப்­ப­யல் தனக்கு சரி­ச­ம­மாக உட்­கார்ந்து கொண்டு கைய­ளவு அறிந்­ததை யெல்­லாம் கட­ல­ளவு அளந்து கொட்­டு­கி­றானே என்று கடு­க­ள­வும் அவர் கடுப்­புக் காட்­டி­ய­தே­யில்லை. அவ­ரு­டைய பத்­தி­ரிகை, இளை­ஞர்­கள் இத­யங்­க­ளில் மந்­தி­ரம் போல் மயக்­கி­வைத்­தி­ருந்த காலம் அது. மீசை முளைக்­கா­த­வ­னுக்­கெல்­லாம். அந்­தப் பத்­தி­ரி­கையை படித்து ஆசை முளைக்க ஆரம்­பித்­தது.  அந்­தப் பத்­தி­ரி­கை­யின் பெயர்­தான் ` காதல்’  அதன் ஆசி­ரி­யர் என்­பால் அன்பு பாராட்­டிய பண்­பா­ளர் அரு. ராம­நா­தன் அவர்­கள். ஆனால் ஒரு வேடிக்­கைப் பாருங்­கள்.  இவ்­வ­ளவு நெருக்­க­மா­கி­விட்ட அரு. ராம­நா­த­னி­டம் ஒரு நாள் கூட என்­னு­டைய கதை­யையோ, கவி­தை­யையோ நீட்­டிப் பிர­சு­ரிக்­கக் கேட்­ட­தே­யில்லை. இந்த சலு­கையை அவ­ரி­டம் எதிர்­பார்ப்­பது கூட அவர் என்­பால் வைத்­தி­ருக்­கும் அன்­புக்கு ஊறு விளை­விக்க ஏது­வா­கும் என நான் அஞ்­சி­னேன். இருப்­பி­னும் அவ­ரது ஓவி­யர் மூல­மாக, நான் கதை­க­ளும் கவி­தை­க­ளும் புனை­வேன் என்­பதை அவர் புரிந்து வைத்­தி­ருந்­தார்.

 ஒரு நாள் மாலைப் பொழு­தில், அரு . ராம­நா­தனை  நான் சந்­திக்­கப் போன­போது, அவ­ரு­டன் இன்­னொரு அன்­பர் பேசிக்­கொண்­டி­ருந்­தார். அந்த இன்­னொ­ரு­வர் ஒல்­லி­யா­க­வும், உய­ர­மா­க­வும் இருந்­தார். நெற்­றி­யில் விபூ­தி­யும், குங்­கு­ம­மு­மாக இருந்­த­தாக நினைவு. வந்­த­வ­ரி­டம்  என்னை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார் அரு. ராம­னா­தன் `இவர் பேர் வாலி, ஸ்ரீரங்­கத்­துக்­கா­ரரு. `வானொலி’ பத்­தி­ரி­கை­யில் இருக்­கார். இலக்­கி­யத்தை பத்­திப் பேச ஆரம்­பிச்சா, விடிய விடிய வெளுத்­துக்­கட்­டு­வாரு…’

 என்­னைப்­பற்­றிய ஒரு சிறிய அறி­மு­கத்தை ராம­னா­தன் மூலம் கேட்­ட­றிந்த அவர் `அப்­ப­டியா’ என்ற ஒரே வார்த்­தை­யோடு ரத்­தி­னச் சுருக்­க­மா­கத் தன் பேச்சை முடித்­துக்­கொண்­டார்.  தேநீர் வந்­தது. மூவ­ரும் அருந்­தி­னோம்.

`வாலி ! இவ­ரும் ஒரு பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­தான். பத்­தி­ரிகை பேரு` சண்­ட­மா­ரு­தம்’ என்­றார் திரு அரு. ராம­நா­தன்.

உடனே ராம­நா­த­னின் நண்­பர் என்­னைப் பார்த்து, ` என் பத்­தி­ரி­கைக்கு கவிதை அனுப்­புங்க பிர­சு­ரிக்­கி­றேன்’ என்று என்னை உற்­சா­கப்­ப­டுத்­தும் விதத்­தில் பாசத்­தோடு பேசி­னார்.  பின்­னா­ளில், அந்த பத்­தி­ரி­கைக்கு நான் எதை­யும் அனுப்­ப­வு­மில்லை. எனவே அவர் பிர­சு­ரிக்­க­வு­மில்லை.  இருந்­தா­லும் அவ­ரோடு ஏற்­பட்ட எந்த முதல் சந்­திப்பு, பிற்­கா­லத்­தில் எனக்கு முக்­கி­ய­மா­ கப்பட்­டது. அரு. ராம­நா­தன் அலு­வ­ல­கத்­தில் நான் சந்­தித்த ஒல்­லி­யும் உய­ர­மு­மான விபூ­தி­யும் குங்­கு­ம­மு­மாக வந்து போன நபர் வேறு யாரு­மல்ல கவி­ஞர் கண்­ண­தா­சன்­தான்.

மண்­ணால் மனி­தர்­க­ளும், மனி­தர்­க­ளால் மண்­ணும் பரஸ்­ப­ரம் மேன்­மை­யு­று­த­லும் அத­னைக் காலம் தன் குறிப்­பேட்­டில் பதிவு செய்­யும் மர­பா­கவே இருந்து வரு­கி­றது. இந்த மர­பி­னை­யொட்டி, காய்­தல் உவத்­த­லன்றி ஒரு கணக்­குப் போட்­டுப் பார்க்­கை­யில் ஸ்ரீரங்­கத்து மண்­ணில் வேர்­கோட்னு, தொல்­லு­ல­கின் பல்­வேறு கங்­கு­க­ளில் கிளை பரப்­பிய கீர்த்­தி­மிகு விருட்­சங்­களை ஆல்­ப­மா­கவே நினைவு அடுக்கி அடுக்கி வைத்­தி­ருக்­கி­றேன். இந்த `ஆல்­பத்’ தின்  அன்­றைய மனி­தர்­க­ளும் அகப்­ப­டு­கி­றார்­கள். இன்­றைய மனி­தர்­க­ளும் அகப்­ப­டு­கி­றார்­கள்.

 நாம் புரண்டு விளை­யா­டிப் பூசிக்­கொண்ட திரு­வ­ரங்­கத்­துத்  தெருப்­பு­ழு­தியை அறவே அலம்­பி­விட என்­னால் ஆகாது. அது­வும் நினைவு நாடா­வைப் பின்­னோக்கி ஒட்­டிப் பார்க்­கும் போது மண்­ணின்  மகத்­து­வ­மெல்­லாம் மெல்­லி­சை­யாக் மாறி­மாறி என் செவி­களை நிரப்­பு­கி­றது.

தாழ்த்­தப்­பட்­ட­வர்­க­ளைத் `திருக்­கு­லத்­தார்’ எனச் சிறப்­பித்து நாரா­ய­ண­பு­ரம் கோயி­லுக்­குள் இட்டு சென்ற ராமா­னு­ஜன், எங்­கள் ஊர் மண்­ணில்­தான் இறு­திக்­கா­லத்­தில் நின்று , நடந்து, உண்டு உறங்கி அடங்­கிப் போனான். வட மொழி­யி­லும் தென் மொழி­யி­லும், பல்­லா­யி­ரப் பனு­வல்­களை யாத்த வேதாந்த தேசி­கர் எங்­கள் ஊர் வீதி­க­ளில்­தான் உலவி உல­க­ளா­விய  புகழ் பெற்று  ஒரு நாள் உலர்ந்து போனார். எழு­நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் வாழ்ந்த தேசி­க­ரின் மாளிகை இன்­னும் வடக்கு உத்­தி­ர­வீ­தி­யில் நினை­வுச்­சின்­ன­மாக  நின்று கொண்­டி­ருக்­கி­றது. இவர்­க­ளுக்­கெல்­லாம் முன்­ன­தா­

­கவே எத்­த­னையோ ஆழ்­வார்­கள் ஒரு

பற­வை­யின் பார்வை கொண்டு திரு­வ­ரங்­கத்­தைப் பார்த்து ‘வண்­டி­னம் முர­லும் சோவை; மயி­லி­னம் ஆலும் சோலை’ என்­றெல்­லாம் வார்த்­தை­க­ளில்  வரை­ப­ட­மா­கவே எழுதி  வைத்து போயி­ருக்­கி­றார்­கள்.

 பலாப்­ப­ழத்­தா­லும், மாம்­ப­ழத்­தா­லும், பண்­ருட்­டி­யும் சேல­மும் நினைப்­ப­டும் போது கவி­ஞர்­க­ளா­லும்,  கலை­ஞர்­க­ளா­லும், ஊர்­க­ளுக்கு மேன்மை வரு­வ­தில் வியப்­பென்ன இருக்­கி­றது?  நாரா­யண கவி­யும், கல்­யா­ண­சுந்­த­ர­மும் உடு­ம­லை­யை­யும், பட்­டுக்­கோட்­டை­யை­யும் நம்­மு­டைய உள்­ளங்­க­ளில் ஒட்டி வைக்­க­வில்­லையா ? யாருக்கு தெரி­யும் பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தா­கப்  பண்­ணைப்­பு­ரத்தை இளை­ய­ராஜா என்­னும் ஓர் இசை­வா­ணன் அங்­கி­ருந்து புறப்­பட்டு இந்­திய மக்­க­ளின் இத­யங்­களை மெல்­லிசை என்­னும் மயி­லி­ற­கால் வரு­டத் தொடங்­கிய பின்­பு­தானே பண்­ணைப்­பு­ரம் ஒரு பாடல் பெற்ற ஸ்தல­மா­யிற்று? அந்த வகை­யில் எங்­கள் ஸ்ரீரங்­கத்­தைச் சிறப்­பித்­த­வர்­களை நான் இந்த தொட­ரில் எடுத்­துச் சொல்­வது, என்னை தாங்­கிய தாலாட்­டிய மண்­ணுக்கு நான் செய்­யும் மரி­யா­தை­

யா­கும்.

தொல்­லிசை எனப்­ப­டும் கர்­நா­டக சங்­கீ­தத்­திற்­குக் காவி­ரிக்­க­ரை­யில் அமர்ந்து கொண்டு கட்­டி­யம் கூறி பட்­டுச்­சால்வை போர்த்­திய புண்­ணி­ய­வான், மகா­வித்­வான் மருங்­கா­புரி கோபா­ல­கி­ருஷ்­ணய்­யர். மஸ்­லின் ஜிப்­பா­வும், பஞ்­சக்­கச்­ச­மு­மாக மாட்டு வண்­டி­யில் பவ­னித்த காட்­சி­யெல்­லாம் இன்­னும் ஈரக்­க­சி­வோடு,  என் இத­யத்­தில் பசு­மை­யாக நிற்­கி­றது.  நந்தி பக­வா­னின் நகல் என்­றெல்­லாம் அந்­நா­ளில் ஆரா­திக்­கப்­பெற்ற பழனி சுப்­ர­ம­ணி­யப்­பிள்ளை மருங்­கா­புரி கோபா­ல­கி­ருஷ்­ணய்­ய­ரு­டைய வய­லின் கச்­சே­ரிக்­குப் பக்க வாத்­தி­யம் வாசித்­தி­ருக்­கி­றார். பிள்ளை ஒரு குப்­ப­னுக்­கும் ஒரு சுப்­ப­னுக்­கும் தாளங்­கள் தட்­டு­ப­வ­ரல்ல. விலை­கொ­டுத்து அவர் விரல்­களை விளை­யாட வைக்க முடி­யாது.

(தொட­ரும்)