ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 01–5–19

பதிவு செய்த நாள் : 01 மே 2019

முதல் மான­சீக குரு!

நேரம் தவ­றாமை : இளை­ய­ராஜா வந்த பிற­கு­தான் வாத்­தி­யக்­க­லை­ஞர்­கள் சரி­யாக காலை 7 மணிக்­கெல்­லாம் ரிக்­கார்­டிங் ஸ்டூடி­யோ­விற்கு வந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதற்கு கார­ணம் இளை­ய­ராஜா 6.45 மணிக்கே வந்­து­வி­டு­வார். நாம் சரி­யாக வந்­தால்­தான் மற்­ற­வர்­க­ளும் அதை கடைப்­பி­டிப்­பார்­கள் என்­பா­ராம்.

ஒழுக்­கம் : முன்­பெல்­லாம் சினிமா இசைக்­க­லை­ஞன் என்று சொன்­னால் யாரும் சரி­யான மரி­யாதை தர­மாட்­டார்­கள். ஏனென்­றால் அந்த மாதி­ரி­யான போக்கை முன்­பி­ருந்­த­வர்­கள் வளர்த்து விட்­டதே கார­ணம். ராஜா வந்த பிற­கு­தான் இசை­ய­மைப்­பா­ளர் என்ற பெய­ருக்கே ஒரு தனி மரி­யாதை கிடைத்­தது. அதற்கு கார­ணம் ராஜா மட்­டுமே.

பணி செய்­யும் இடம் : ராஜா வரு­வ­தற்கு முன்­பெல்­லாம் ரிக்­கார்­டிங் தியேட்­ட­ருக்­குள் மது வாச­மும், புகை வாச­மும் இருக்­கும். சில சம­யம் புகை மண்­ட­ல­மா­கவே இருக்­கும். ஆனால் ராஜா­வின் ரிக்­கார்­டிங்­கின்­போது யாரும் சிக­ரெட் கூட தொட­மாட்­டார்­கள். ஒரே நாளில் அனை­வ­ரை­யும் மாற்­ற­வில்லை. அது முடி­யா­தென்று அவ­ருக்­கும் தெரி­யும். ஆனால் கொஞ்­சம் கொஞ்­ச­மாக மாற்­றி­னார். 100 சத­வீ­தம் ஒழுக்­க­முள்ள இட­மாக மாற்­றி­னார். முக்­கி­ய­மான ஒன்று, நேரத்தை வீண­டிக்­க­மாட்­டார்.

முன்­பெல்­லாம் பின்­னணி இசைச்­சேர்ப்­பில் ஒரு ரீல் திரை­யிட்டு காண்­பித்­த­தும் இயக்­கு­னரோ மற்­ற­வர்­களோ இசை­ய­மைப்­பா­ள­ரி­டம் வந்து அமர்ந்து அந்த படத்­தில் வந்­த­து­போல போடுங்­கள், இந்த படத்­தில் வந்­தது போல போடுங்­கள் என்­றெல்­லாம் சொல்லி பிறகு இசைச்­சேர்ப்பு முடிந்து, அது சரி­யில்­லா­மல் மறு­படி இசை­ய­மைப்­பா­ளரே வேறு மாதிரி இசை சேர்ப்­பார். ஆனால் இளை­ய­ரா­ஜா­வி­டம் அப்­படி இல்லை. ஒரு ரீல் திரை­யில் பார்த்­தால் போதும் உடனே இசைக்­கு­றிப்­பு­களை எழுத ஆரம்­பித்து விடு­வார். அதை வாசித்­தாலே போதும். இப்­படி வேண்­டாம், வேறு­மா­திரி போடுங்­கள் என்று சொல்­வ­தற்­கான வாய்ப்பே இருக்­காது.

இளை­ய­ராஜா பற்றி சொல்­லும் போது எப்­படி பார­தி­ரா­ஜா­வைப் பற்­றிச் சொன்­னேனோ அதே போல சி.ஆர். சுப்­ப­ரா­மன் பற்­றிச் சொல்­லியே ஆக­வேண்­டும். எத்­தனை பேருக்கு அவ­ரைத் தெரி­யும் என்று தெரி­ய­வில்லை.

நாகேஸ்­வ­ர­ராவ், சாவித்­திரி நடித்த ‘தேவ­தாஸ்’ படத்­திற்கு இசை­ய­மைத்­த­வர்­தான் இந்த சி.ஆர். சுப்­ப­ரா­மன். இந்த படம் மட்­டும் அல்ல, எம்.கே. தியா­க­ராஜ பாக­வ­தர், பானு­மதி நடித்த ‘ராஜ­முக்தி’, என்.எஸ். கிருஷ்­ணன் இயக்­கத்­தில் உரு­வான ‘மண­ம­கள்’, நாகேஸ்­வ­ர­ராவ், பானு­மதி நடித்த ‘லைலா மஜ்னு’ போன்ற ஏரா­ள­மான படங்­க­ளுக்­கும் இசை­ய­மைத்­த­வர்.

ஆனால் இவ­ருக்­கும் இளை­ய­ரா­ஜா­விற்­கும் என்ன சம்­பந்­தம் என்று கேட்­க­லாம். தன் மான­சீக குரு என்று இளை­ய­ராஜா சொல்­வது சி.ஆர். சுப்­ப­ரா­ம­னைத்­தான்.

இளை­ய­ரா­ஜாவே ஒரு தொகுப்­பில் இவ­ரைப்­பற்றி எழு­தி­யது...  “என் முதல் மான­சீக குரு சி.ஆர். சுப்­ப­ரா­மன் பின்­னணி இசை கம்­போஸ் செய்­வது அற்­பு­த­மான காட்­சி­யாக இருக்­கும் என்று அறிந்­தி­ருக்­கி­றேன். பின்­னணி இசையமைப்­ப­தற்­கா­னக் காட்­சியை சுப்­ப­ரா­ம­னுக்கு திரை­யிட்­டுக்­காட்­டு­வார்­கள். 10 நிமி­டங்­கள் திரை­யில் ஓடும் படத்­தைப் பார்த்து விட்­டால் பியானோ முன் வந்து உட்­கார்ந்து விடு­வா­ராம். இரண்டு கைக­ளா­லும் அவர் வாசிக்க அதை வல­து­பு­றம் விஸ்­வ­நா­த­னும், ராம­மூர்த்­தி­யும் இட­து­பு­றம் கோவர்த்­த­ன­மும், ஸ்ரீ-ரா­மு­லு­வும் அமர்ந்து கொண்டு வாசிக்க வாசிக்க எழு­திக்­கொள்­வார்­க­ளாம். எதை எந்த வாத்­தி­யத்­திற்­குக் கொடுக்­க­வேண்­டும் என்று கேட்­டுப் பிரித்து கொடுத்து அதை ஒத்­திகை பார்க்­கும்­போது “ஏய், இந்த நோட்ஸை தப்­பாக் கொடுத்­தது யாரு?’’ என்று கேட்டு அதை மீண்­டும் வாசித்­துக் காண்­பித்து சரி­செய்­வா­ராம்.

வாசிப்­பதை நோட்ஸ் எழு­து­ப­வர்­கள் எல்­லோ­ரும் திற­மை­சா­லி­கள். அவர்­கள் எழு­து­வ­தி­லும் தவறு வர அதை ஞாப­க­மாய் சரி­செய்­தார் என்­றால் அவ­ரு­டைய ஞானத்தை என்­ன­வென்று சொல்­வது? முப்­பத்­தி­ரண்டு வயதே வாழ்ந்த அவர் எவ­ருக்­கும் இணை இல்­லா­த­வர்.

இவர் இசை­ய­மைத்த பாடல்­கள் மிகப்­பி­ர­ப­ல­மா­ன­தால் பொறாமை கொண்­ட­வர்­கள் அவரை “டப்பா மியூ­சிக் டைரக்­டர்” என்று கூறி வந்­தார்­கள். சினிமா இசையை ‘டப்பா இசை’ என்று சங்­கீத வித்­வான்­கள் கேலி­யா­கக் கூறு­வது அக்­கால வழக்­கம். கலை­வா­ண­ரும், சுப்­ப­ரா­ம­னும் நல்ல நண்­பர்­கள். ஒரு முறை இது பற்றி கலை­வா­ண­ரி­டம் கூறி வருத்­தப்­பட, “கவ­லைப்­ப­டாதே சுப்­ப­ராமா! உன்­னு­டைய சங்­கீத ஞானத்தை காட்­டு­வ­தற்­கா­கவே ஒரு படம் எடுக்­கி­றேன்” என்று கூறி ‘மண­ம­கள்’ என்ற படத்தை தயா­ரித்­தார். அதில் அத்­த­னை­யும் கர்­நா­டக சங்­கீ­தப்­பா­டல்­கள். வைர­ம­ணி­கள் போல் ஒளி­வீ­சும் வண்­ணம் இசை­ய­மைத்­தி­ருந்­தார்.

மகா­கவி பார­தி­யா­ரின் “சின்­னஞ்­சிறு கிளியே” பாட­லுக்கு அவர் ராக­மா­லி­கை­யில் இசை­ய­மைத்­தி­ருந்­தார். உயி­ரையே கொள்ளை கொள்­ளும் உன்­ன­த­மான பாடல். ‘டப்பா சங்­கீ­தம்’ என்று சங்­கீத வித்­வான்­கள் கூறி­வந்த சினிமா சங்­கீ­தத்தை உயர்த்தி, சினிமா பாடல்­களை சங்­கீத மேடை­க­ளுக்கு கொண்­டு­போக வைத்­தார். “சின்­னஞ்­சிறு கிளியே” சங்­கீத கச்­சே­ரி­க­ளில் பாடாத வித்­வான்­கள் இல்லை என்ற அள­விற்கு இசை­ய­மைத்­தி­ருந்­தார்.”

தன் மான­சீக குரு­வான சி.ஆர். சுப்­ப­ரா­மன் பற்றி இளை­ய­ராஜா சொன்­னதை இந்த அத்­தி­யா­யத்­தில் சொல்­வ­தற்கு ஒரு கார­ணம் இருக்­கி­றது. 10 நிமி­டங்­கள் காட்­சியை பார்த்­து­விட்டு வந்து பியா­னோ­வில் வாசிக்க ஆரம்­பித்து விடு­வார் என்று தன் மான­சீக குரு­வான சி.ஆர். சுப்­ப­ரா­மனை பற்றி வியந்து சொன்ன இளை­ய­ராஜா, தான் இசை­ய­மைக்­கும் படங்­க­ளுக்கு பின்­னணி இசை சேர்ப்­புக்­காக திரை­யி­டப்­ப­டும் காட்­சி­யைப் பார்த்­து­விட்டு எந்த ஒரு இசை­வாத்­தி­யங்­க­ளை­யும் வாசிக்­கா­ம­லேயே இசைக்­கு­றிப்பு எழு­தும் வல்­லமை படைத்­த­வர். அந்த இசைக்­கு­றிப்­பு­களை அந்­தந்த வாத்­தி­யக்­க­லை­ஞர்­கள் எழு­திக்­கொண்டு வாசித்­தாலே போதும் காட்­சி­ய­மைப்­பிற்கு கன­கச்­சி­த­மா­கப் பொருந்­தி­வ­ரும்.

இன்று வரை­யில் இளை­ய­ரா­ஜாவை பின்­னணி இசை­யில் ஈடு செய்ய யாரும் வர­வில்லை என்­பது நிதர்­ச­ன­மான உண்மை.