சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 390– எஸ்.கணேஷ்

30 ஏப்ரல் 2019, 07:53 PM

நடி­கர்­கள்  :  விஜய், ஹன்­ஸிகா மோத்­வானி, ஜெனி­லியா டிசவுசா, சரண்யா மோகன், சந்­தா­னம், சூரி, அபி­மன்யு  சிங், வினீத் குமார் மற்­றும் பலர். இசை :   விஜய் ஆண்­டனி, ஒளிப்­ப­திவு : ப்ரியன், எடிட்­டிங் : வி.டி. விஜ­யன், தயா­ரிப்பு  :  ஆஸ்­கார் பிலிம்ஸ் வி.ரவிச்­சந்­தி­ரன், திரைக்­கதை, இயக்­கம் : எம். ராஜா.

இளம் பத்­தி­ரி­கை­யா­ள­ரான பார­தி­யும் (ஜெனி­லியா டிசவுசா) அவ­ரது நன்­பர்­க­ளும் சென்னை நக­ரில் நடக்­கும் தொடர்ச்­சி­யான தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­கள் மற்­றும் பெண்­கள் கடத்­தப்­ப­டு­வது குறித்து துப்­ப­றி­கி­றார்­கள். நாசக்­கார கூட்­டத்­தின் நட­வ­டிக்­கை­களை வீடி­யோ­வாக எடுத்­துக்­கொண்டு தப்­பிக்­கும்­போது அவர்­க­ளால் துரத்­தப்­ப­டு­கி­றார்­கள். நண்பர்­கள் கொல்­லப்­பட, கத்­துக்­குத்து காயத்­தோடு தப்­பிக்­கும் பாரதி, ஆதா­ரத்தை அழித்­து­விட்டு சென்ற கொடி­ய­வர்­கள் வண்­டி­யில் உள்ள பெட்­ரோல் மீது தீக்­குச்சி விழுந்து கூண்­டோடு அழிந்து போவதை பார்க்­கி­றார். கெட்­ட­வர்­களை பய­மு­றுத்­தும் நோக்­கில், தீவி­ர­வா­தி­களை அழித்து நகரை சுத்­தம் செய்ய ”வேலா­யு­தம்” என்ற சக்தி தோன்­றி­யி­ருப்­ப­தா­க­வும், இந்த கொலை­கா­ரர்­க­ளின் மர­ணத்­துக்­கும் அதுவே கார­ணம் என­வும் செய்­தியை பரப்­பு­கி­றார்.

கதை பூவ­னூர் என்ற கிரா­மத்­துக்கு செல்­கி­றது. பால்­கா­ர­னாக இருக்­கும் வேலு என்­கிற வேலா­யு­தம் (விஜய்) தன் தங்கை காவேரி (சரண்யா மோகன்) மீது உயி­ராக இருக்­கி­றான். அவ­ரது முறைப்­பெண்­ணான வைதேகி (ஹன்­ஸிகா மோத்­வானி) மற்­றும் உற­வி­னர், நண்பர்­க­ளு­டன் சென்­னை­யில் சீட்­டுக்­கம்­பெ­னி­யில் கட்­டி­வந்த பணத்தை தங்­கை­யின் திரு­ம­ணத்­துக்­காக வாங்­கிப்­போ­வ­தற்­காக காவே­ரி­யும், வேலு­வும் சென்­னைக்கு பய­ண­மா­கி­றார்­கள். சென்னை எக்­மோர் ஸ்டேஷ­னில் வேலு­வி­ட­மி­ருந்து பிக்­பாக்­கெட் ஸ்பீடு (சந்­தா­னம்) பணத்தை திரு­டி­விட, அங்கு நிறுத்­தி­யி­ருக்­கும் பைக்கை எடுத்­துக்­கொண்டு ஸ்பீடை துரத்தி தனது பணத்தை மீட்­கி­றான் வேலு. ஒதுக்­குப்­பு­ற­மான இடத்­தில் வெடி­குண்­டோடு இருந்த பைக் வெடித்­துச் சிதற பல உயிர்­கள் காப்­பாற்­றப்­ப­டு­கி­ன்றன. இது போலவே தொடர்ந்து பல­முறை வேலு தன்­னை­ய­றி­யா­ம­லேயே தீவி­ர­வாத நட­வ­டிக்­கையை தோல்­வி­ய­டை­யச் செய்­வ­தால் பார­தி­யும், போலீ­சும், தீவி­ர­வா­தி­க­ளும் வேலுவை தேடு­கி­றார்­கள். வேலுவை சந்­திக்­கும் பாரதி மக்­கள் நல­னுக்­காக வேலா­யு­த­மாக தொட­ரு­மாறு கேட்­டுக்­கொள்ள வேலு­வும் ஊழல், ஆள்­க­டத்­தல், விபசா­ரம் மற்­றும் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராக போராடி மக்­க­ளின் ஆத­ரவை பெறு­கி­றான்.

சில மாதங்­கள் கழித்து காவே­ரி­யின் திரு­ம­ணத்­துக்­காக பூவ­னூர் திரும்­பும் வேலு­வு­டன் பார­தி­யும் வரு­கி­றாள். தன்­னைக் கண்டு பொறா­மைப்­ப­டும் வைதே­கி­யி­டம் பாரதி, வேலு வைதே­கியை விரும்­பு­வ­தை­யும் தங்­கை­யின் திரு­ம­ணத்­திற்கு அடுத்து அவர்­க­ளது திரு­ம­ணம்­தான் என்று கூறி ஆறு­தல்­ப­டுத்­து­கி­றாள். தீவி­ர­வா­தி­க­ளின் தலை­வ­னான் இப்­ரா­ஹிம் (அபி­மன்யு சிங்) வேலுவை தொடர்ந்து பூவ­னூர் வரு­வ­தோடு அவனை பழி­வாங்­கு­வ­தற்­காக வெடி­குண்டை பரி­சாக அனுப்­பு­கி­றான். திரு­மண நாளன்று உண்­மையை அறி­யும் காவேரி தன் அண்­ணன் மற்­றும் ஊர்­மக்­க­ளின் உயிரை காப்­பாற்றி தான் இறந்து போகி­றாள்.

வேலுவை தேற்­றும் பாரதி, இப்­ரா­ஹிம் கொடுக்­கும் பணத்­துக்­காக பின்­ன­ணி­யில் ஆத­ர­வாக செயல்­ப­டும் அமைச்­சர் உல­க­நா­தன் (வினீத் குமார்) பற்றி கூறு­கி­றார். வேலா­யு­தம் என்ற சக்தி தனது திட்­டம் என்று கூறி இப்­ரா­ஹிமை வேலா­யு­த­மாக மக்­கள் முன்­னி­லை­யில் நிரூ­பிக்­கப் பார்க்­கி­றார் உல­க­நா­தன். நேரு அரங்­கத்­தில் நடக்­கும் நிகழ்­வில் மக்­க­ளுக்கு முன் தன் நிஜ முகத்­தோடு தோன்­றும் உண்­மை­யான வேலா­யு­தம், இப்­ரா­ஹிமை அழிப்­ப­தோடு உல­க­நா­த­னின் உண்மை முகத்தை அனை­வ­ருக்­கும் வெளிப்­ப­டுத்­து­கி­றான்.