ஆசிய சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டி- தங்கம் வென்ற நவீனுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 28 ஏப்ரல் 2019 16:10

சென்னை,

ஆசிய சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற நவீனுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டி ஹாங்காங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீரரும், சென்னையை சேர்ந்தவருமான நவீன் 3 தங்கப் பதக்கம் வென்றதோடு, ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில்,

ஹாங்காங்கில் நடைபெற்ற 16வது சர்வதேச பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னை அயனாவரத்தை சேர்ந்த வீரர் நவீன் 3 தங்கப் பதக்கங்கள் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவர் மென்மேலும் வெற்றிகள் குவித்து சாதனைப் பயணத்தை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

 இவ்வாறு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.