திருச்சியில் முத்தையம்பாளையம் கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 13:31

திருச்சி,

திருச்சியில் முத்தையம்பாளையம் கருப்பசாமி கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதலமைச்சர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கருப்பசாமி கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 

பிடிக்காசு வாங்குவதற்காக பக்தர்கள் ஏராளமானோர் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள், ஆண்கள் உட்பட 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பிடிகாசு வாங்குவதில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சம் நிவாரண நிதியும்

விபத்தில் சிக்கி காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ. 50,000 வழங்குவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிதியை வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.