4 தொகுதிகள் இடைத்தேர்தல் மே 1 முதல் ஸ்டாலின் பிரசாரம்

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 00:08

சென்னை:தமி­ழ­கத்­தில் காலி­யாக உள்ள திருப்­ப­ரங்­குன்­றம், ஒட்­டப்­பி­டா­ரம், அர­வக்­கு­றிச்சி, சூலுார் ஆகிய 4 சட்­ட­ச­பைத் தொகு­தி­க­ளுக்­கும் வரும் மே 19-ம் தேதி இடைத்­தேர்­தல் நடத்­தப்­ப­டு­கி­றது.

இந்த 4 தொகு­தி­க­ளின் பொறுப்­பா­ளர்­க­ளு­டன் திமுக தலை­வர் ஸ்டாலின், அறி­வா­ல­யத்­தில் நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார். காலை­யில் திருப்­ப­ரங்­குன்­றம், ஒட்­டப்­பி­டா­ரம் தொகு­தி­கள், மாலை­யில் அர­வக்­கு­றிச்சி, சூலுார் தொகு­தி­கள் குறித்து ஆலோ­சனை நடந்­தது. இதில் துரை­மு­ரு­கன், கனி­மொழி, கே.என்.நேரு, பொன்­முடி, எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம், எ.வ.வேலு, ஐ.பெரி­ய­சாமி, கீதா ஜீவன், அனிதா ராதா­கி­ருஷ்­ணன், செந்­தில்­பா­லாஜி உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

இதற்­கி­டை­யில், ஸ்டாலி­னின் முதல்­கட்ட பிரச்­சார சுற்­றுப்­ப­யண விவ­ரத்தை திமுக தலைமை வெளி­யிட்­டது.

அதில் மே 1, 2 தேதி­க­ளில் ஒட்­டப்­பி­டா­ரத்­தி­லும், மே 3, 4 தேதி­க­ளில் திருப்­ப­ரங்­குன்­ற த்­தி­லும், மே 5, 6 தேதி­க­ளில் சூலுா­ரி­லும், மே 7,8 தேதி­க­ளில் அர­வக்­கு­றிச்­சி­யி­லும் ஸ்டாலின் பிரச்­சா­ரம் செய்­வார் எனக் கூறப்­பட்­டுள்­ளது.